Published:Updated:

நான், சூர்யா... நடுவில் ஜோதிகா!

Surya
News
Surya ( vikatan )

இந்தியில் நான் ரொம்ப பிஸி. தமிழ்லதான் சின்ன பிரேக். பூமிகாவுக்கும் பூமி உருண்டைதானே... இதோ மறுபடி வந்துட்டேன்’’ என கிறங்கடிக்கும் கிரீட்டிங் சிரிப்பில், கிடார் மீட்டுகிறார்.

புது மாடல் செல்போன் மாதிரி பளபளப்பு கூடிப்போய் வந்திருக்கிறார் பூமிகா. சேலை கட்டினால் தேவதை; ஜீன்ஸ் அணிந்தால் ஜெலட்டின் பாம்! ரோஜாக்கூட்டத்துக்குப் பிறகு காணாமல் போனவர், ‘ஜில்லுனு ஒரு காதல்’ மூலம் தமிழில் அடுத்த இன்னிங்ஸ் ஆட வந்திருக்கிறார். படத்தில், சூர்யாவோடு ஜோதிகா பாதி; பூமிகா மீதி!

‘‘என்னங்க ஆளையே காணோம்..?’’ என்றால், ‘‘தெலுங்கு, இந்தியில் நான் ரொம்ப பிஸி. தமிழ்லதான் சின்ன பிரேக். பூமிகாவுக்கும் பூமி உருண்டைதானே... இதோ மறுபடி வந்துட்டேன்’’ என கிறங்கடிக்கும் கிரீட்டிங் சிரிப்பில், கிடார் மீட்டுகிறார்.

நான், சூர்யா... நடுவில் ஜோதிகா!

‘‘ ‘ஜில்லுனு ஒரு காதல்’ பண்றது எப்படியிருக்கு?’’

‘‘செம கூல்! நிஜமாவே காதல் பண்ற மாதிரி அவ்ளோ இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா இருக்கு. முதல் பாதி என் ராஜ்ஜியம்தான்! படத்துல துறுதுறு காலேஜ் பொண்ணா வர்றேன். ஸ்கூட்டியில சுத்திட்டு, ஸ்பென்சர்ல ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாம பட்டாம்பூச்சி மாதிரி வாழற படு மாடர்ன் சென்னைப் பொண்ணு கேரக்டர் எனக்கு. காதல் உணர்வுகள் பூக்கும் வயசுல, ‘ச்சோ ஸ்வீட்’னு சொல்ற மாதிரி ஒரு பையன் கிடைச்சா, ஒரு பொண்ணு என்ன பண்ணுவா? யெஸ்... நான் சூர்யாவைக் காதலிக்கிறேன். அவரும் அப்படியே! நடுவிலே, இந்த ஜோதிகா உள்ளே புகுந்து... அச்சச்சோ! கதையைச் சொல்லிட்டே இருக்கேனே... போச்சு! டைரக்டர் கிருஷ்ணாகிட்ட டோஸ் வாங்கப்போறேன். வேணாம்ப்பா... நீங்க தியேட்டர்லயே போய்ப் பாத்துக்குங்க. ஏ.ஆர். ரஹ்மான் மியூஸிக்ல மூணு டூயட் பாட்டு சூப்பரா வந்திருக்கு. சூர்யாகூட டூயட் பாடத்தான், இதோ ரெடியாகிட்டு இருக்கேன்!’’

‘‘ சரி, ‘ரோஜாக்கூட்ட’த் துக்கு அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கலை?’’

‘‘விருப்பம் இல்லை. ரோஜாக்கூட்டத்தை அடுத்து தமிழ்ல படங்கள் பண்ண நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. எல்லாம், தள்ளி நின்னு ஹீரோவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு ஏங்குற கதைகள்தான். அது எதுக்கு எனக்கு? நான் எப்பவுமே ‘தி பெஸ்ட்’ எதிர்பார்க்கற ஆளு. எனக்கு வந்த தமிழ் வாய்ப்புகள்ல, கடைசியா என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணின கதை ‘ஜில்லுனு ஒரு காதல்’தான். அதனால உடனே ஓ.கே. சொல்லிட்டேன். இந்தியில், ‘மகாத்மா வெர்ஸஸ் காந்தி’னு ஒரு படம்... அக்ஷய் கன்னா, அஜய் தேவ்கன் கூடப் பண்றேன். ‘நோ என்ட்ரி’ டைரக்டரோட படம் என்பதால், அதுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நான், சூர்யா... நடுவில் ஜோதிகா!

‘‘தமிழ்ல எந்த ஹீரோ பெஸ்ட்?’’

‘‘எனக்குப் பொய் சொல்லத் தெரியாது. ஹீரோயிசம், கமர்ஷியல் இதையெல்லாம் விட்டுட்டு நடிப்புனு பார்த்தா, சூர்யா பிரமாதமா பண்றார். ‘கஜினி’யில அவர் பண்ணின ரோலும், அவருடைய பர்ஃபாமென்ஸும் அவ்வளவு பிரமாதம். ஆனாலும் ‘தி பெஸ்ட்’னு பார்த்தா தமிழ்ல என்னோட சாய்ஸ் விக்ரம்தான். கமலுக்கு அடுத்த ஜெனரேஷன்ல, இப்போதைக்கு ஆக்டிங்ல நம்பர் ஒன் விக்ரம்தான்!’’

‘‘தமிழ், தெலுங்கு, இந்தினு வெவ்வேற ஏரியாவுல படம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களே... ஏதாவது ஒண்ணுல கவனம் செலுத்தி நம்பர் ஒன் நடிகை ஆகணும்னு நினைப்பில்லையா?’’

‘‘ஏன் நம்பர் ஒன் ஆகணும்? வெவ் வேற இடங்கள்ல இருந்து என்னைத் தேடி வர்றாங்கங்கிறதே சந்தோஷமான விஷயம்தானே? நான் நல்லா நடிக்கலைன்னா யார் கூப்பிடப்போறா? ‘எல்லா ஹீரோக்களும் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுத்தக்கூடியவர்களே’னு ஒரு பழமொழி இருக்கு. ஹீரோயின்களுக்கு அந்தச் சலிப்பு இன்னும் சீக்கிரமே வந்துடும். அதையும் தாண்டிப் பேர் வாங்கறது நடிப்புத் திறன்ல மட்டும்தான்! ‘பூமிகா ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட். எந்த கேரக்டர் கொடுத்தாலும் கச்சிதமா பண்ணுவாங்க’னு நாலு பேர் சொன்னா, அதுதான் எனக்கு நம்பர் ஒன் சக்சஸ்!’’

நான், சூர்யா... நடுவில் ஜோதிகா!

‘‘உங்களோட செக்ஸ் அப்பீல் எதுனு ஃபீல் பண்றீங்க?’’

‘‘ரசிகர்கள் எதை ரசிக்கிறார்களோ அதுதான் ஒரு நடிகையின் செக்ஸ் அப்பீல். என்னைப் பொறுத்தவரைக்கும் எனது அழகான பெரிய உதடுகள் தான்னு நினைக்கிறேன். ரசிகர்கள் எங்கிட்டே எதை ரசிக்கிறாங்கனு அவங்க கிட்டயே போய்க் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.’’

‘‘சரி, உங்க லவ்வரைப் பத்தி சொல்லவே இல்லையே?’’

‘‘சொன்னேனே, சூர்யாதான்! அவரைத்தானே இப்போ ஜில்லுனு காதல் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படம் முடிஞ்சதும், சூர்யாவை மாத்திட்டு வேற ஒருத்தரை லவ் பண்ண ஆரம்பிச்சிருவேன். யெஸ்... ஐ லவ் மை ப்ரொஃபஷன்!’’

-எஸ்.கலீல்ராஜா
ஸ்டில்ஸ்: ‘ஜில்லுனு ஒரு காதல்’