Published:Updated:

சினிமா விமர்சனம்: சரவணா

சினிமா விமர்சனம்: சரவணா

பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்: சரவணா
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்: சரவணா
சினிமா விமர்சனம்: சரவணா
 
சினிமா விமர்சனம்: சரவணா
சினிமா விமர்சனம்: சரவணா

ன்னடத்தில் ஹிட்டடித்த ‘பத்ரா’வின் தமிழ்த் தழுவல். ரத்தம் ப்ளஸ் சத்தம் வகையறாவில் வந்திருக்கிற கே.எஸ்.ரவிக்குமார் - சிம்பு பிராண்ட் படம்.

டி.வி-யில் யதேச்சையாகப் பார்க்கிற துறுதுறு ஜோதிகாவைத் தேடி திருநெல்வேலியில் உள்ள நண்பனின் வீட்டுக்குப் போகிறார் சிம்பு. அங்கே பழைய சாதிப் பகையில் ரெண்டுபட்டுக் கிடக்கிறது. நண்பனின் அண்ணன் பிரகாஷ் ராஜ் பகையை விட்டு அமைதி யைத் தேடுகிறார். ஆனால், எதிரிகள், கொலை வெறியோடு பிரகாஷ்ராஜின் குடும்பத்தையே வெட்டிக் கொல்கிறார்கள். வில்லனின் தம்பியைப் போட்டுத் தள்ளி விட்டு, ஜோதிகாவை மட்டும் காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார் சிம்பு. துரத்தி வரும் வில்லன்களுக்கும் சிம்புவுக்கும் நடக்கிற யுத்தத்தில் நகர்கிறது மீதி கதை!

சினிமா விமர்சனம்: சரவணா

சிம்புவின் தங்கைக்கு நிச்சய தார்த்தம். எல்லோரும் சிம்பு எங்கே என்று தேட, ஜோதிகா சகிதம் வந்து இறங்குகிறார். ஜோதிகா யார்... சிம்பு ஏன் அவரை அழைத்து வந்தார்... போன்ற சுவாரஸ்ய முடிச்சுகளோடு படத்தைத் துவக்கியிருப்பது அழகு. அதன்பிறகு, ஜோதிகா அந்தக் கூட்டுக் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஐக்கிய மாவதும், அவரை சிம்பு ஒருதலை யாகக் காதலித்தபடி அலைவதும் கலகலப்பான கரக் மொறுக்!

குஷியான குடிகாரத் தாத்தா நாகேஷின் லூட்டி செம ரகளை.

சிம்புவை அவரது முறைப் பெண் மேக்னா நாயுடு துரத்தித் துரத்திக் காதலிப்பார். ஆனால், சைடில் மேக்னாவை விரட்டி விரட்டி விவேக் ஓட்டுவதும், அதனாலேயே அடுத்தடுத்து அடி வாங்குவதும் காமெடி கபடி!

இப்படி ஜிலுஜிலுவென ரசிக்க ஆரம்பிக்கிறபோது, வில்லன்களின் சேஸிங், திருநெல்வேலியில் நடக்கிற அருவா ஃப்ளாஷ்பேக் எனத் தடம் மாறும் கதை, ‘கிளம்பிட்டாங்கப்பா கிளம்பிட்டாங்கப்பா’ எனக் கிறுகிறுக்க வைக்கிறது.

சினிமா விமர்சனம்: சரவணா

சிம்பு அடிக்கடி, 'சம்மு... சம்மு...சம்ஹாரம் பண்ணிடுவேன்' எனக் கத்தும்போதெல்லாம், நமக்குப் புரையேறி கண் கலங்குகிறது. அந்த அளவுக்கு செம்மு... செம்மு... செம்ம பேஜார்! வில்லன் பொன்னம்பலமாக இருந்தாலும் சரி, சொந்த தாய்மாமன் நிழல்கள் ரவியாக இருந்தாலும் சரி.... அவர்கள் வீடு புகுந்து ஹை டெஸி பலில் சிம்பு விடும் சவுண்டான சவால்கள், காது ஜவ்வைக் காவு வாங்குகின்றன.

ஆக்ஷன் ப்ளஸ் காமெடி என்ற ரஜினி ஃபார்முலா வகையில், சிம்பு தமாஷ்களை சில இடங்களில் ரசிக்க முடிகிறது. ஆனால், பேச்சைக் குறைச்சிருக்கலாமே!

சினிமா விமர்சனம்: சரவணா

ஆரத்தி எடுக்கிற காட்சியில் கண்களாலேயே பல்லாங்குழி ஆடும்போது பளிச் ஜோதிகா. மற்றபடி சிம்புவின் சேட்டைகளை லேசாக ரசிப்பதும், சிரிப்பதுமாக...படம் முழுக்க அச்சச்ஜோ!

படத்தின் பாதி பலம் பிரகாஷ்ராஜ். மனுஷருக்கு எந்தக் கேரக்டரும் பொருந்தி வருகிறது. சாதிப் பகை பற்றி அவர் பேசும் வசனம் நீளமாக இருந்தாலும், ரசிக்க வைக்கிற யதார்த்தம்!

ரயில் நிலையம், ஏர்போர்ட் இங்கெல் லாம் இனி க்ளைமாக்ஸ் காட்சியை எடுக்கக் கூடாது என யாராவது பொது நல வழக்கு தொடரலாம். அந்தளவுக்கு ஒரே மாதிரி க்ளைமாக்ஸை பார்த்துப் பார்த்து போரடித்துவிட்டது.

சண்டைக் காட்சியில் தனியாகத் தெரிகிறது ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் உழைப்பு. கிராமத்தில் ரத்தக் கறைகளுக்கிடையே பயணிக்கும் போது ஆர்தர் வில்சனின் கேமரா பளிச்சிடுகிறது... பயமூட்டுகிறது!

நேர்த்திக்கடனாக அரிவாளையே தெய்வத்துக்குக் காணிக்கையாக்கும் நம் கலாசாரத்தைச் சொல்லும் காட்சி ஓ.கே. ஆனால், அதே அரிவாள்களை வைத்து சாதிச் சண்டை, குடும்பப் பகை என பார்த்துச் சலித்த பழைய ட்ராக்கில் வன்முறைத் திருவிழா நடத்தியிருப்பது மிகை.

படம் முடிந்து வந்த பிறகும் ரொம்ப நேரம் காதுல 'ங்ஙொய்ய்ய்ங்'!

 
சினிமா விமர்சனம்: சரவணா
-விகடன் விமர்சனக் குழு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு