Published:Updated:

‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’

‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’

பிரீமியம் ஸ்டோரி
‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’
‘‘அஜீத்துக்கு ஹீரோயினா... இப்பவே நான் ரெடி!''
‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’
‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’
 
‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’

‘ம னம் பச்சைத் தண்ணிதான் பெண்ணே, அதைப் பற்றவைத்தது உன் கண்ணே...’ என்று பாடத் தூண்டும் அழகு. இந்திய மாடலிங் உலகத்தின் இளமைப் புயலாக ‘பாம்பே டையிங்’கில் துவங்கிய ‘லிசா ரே’யின் புகழ், இப்போது உலகப் பிரசித்தி பெற்ற ‘ரேடோ வாட்ச்’ வரை தொடர்கிறது. இன்னொரு பக்கம் தீபா மேத்தாவின் பிரச்னைக்குரிய ‘வாட்டர்’ படத்தின் ஹாட் ஹீரோயின்.

‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’

‘‘மாடலிங் உலகத்தில் அழகுதான் முக்கியம். அப்படியிருக்க, எப்படி உங்களால் மொட்டை போட்டு, விதவையாக நடிக்க முடிந்தது?’ என்று கேட்டால், புன்னகை மாறாமல் ‘‘எல்லாப் புகழும் தீபா மேத்தாவுக்கே!’’ என்கிறார் லிசாரே.

‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’

‘‘நான் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் கனடா. ரொம்ப சுதந்திரமாக வளர்ந்தேன். ஆனால், ‘வாட்டர்’ படத்தில் நடிக் கிறேன் என்றதும், என் வீட்டிலேயே யோசித்தார்கள். ‘அரசியல் எதிர்ப்பு இருக்கும் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமா? அதுவும் இவ்வளவு சின்ன வயதில் மொட்டை போட்டு வெள்ளைப் புடவை உடுத்தி நடிக்க வேண்டுமா?’ எனத் தயக்கம் காட்டினார்கள். ஷபானா ஆஸ்மி, நந்திதாதாஸ் போன்றவர்கள் நடிப்ப தாக இருந்த படம் என்றால், அது நிச்சயம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்பினேன். எனக்கு இருந்த இன்னும் ஒரு வலுவான நம்பிக்கை தீபா மேத்தா.

சமூக அக்கறையுடன் படமெடுக்கிற அவரைப் போன்ற ஓர் இயக்குநரின் படத்தில் நடிக்கிற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காதே! மொட்டை போட்டால் என்ன, முடி வளர்ந்து விடப் போகிறது. வாரணாசி இளம் விதவைகளின் வாழ்க்கையை, துயரத்தைச் சொல்ல எனக்குக் கிடைத்த வாய்ப்பு இது எனத் துணிந்து நடித்தேன். இப்போது எல்லாத் திரைப்பட விழாக்களிலும் என் பெயர் உச்சரிக்கப்படுகிறது!’ என்கிறார் லிசாரே பெருமிதமாக.

‘‘நேதாஜி படத்தில் சரத்குமாருக்கு ஜோடி போட்டபிறகு, தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பவே இல்லையே?’’ என்றால்,

‘‘அஜீத்துக்கு ஹீரோயினா கூப்பிடுங்க. இப்பவே வரேன்!’’ என்கிறார்.

அழகாய் இருக்கிறார். பயமாய் இருக்கிறது!

 
‘‘அஜீத்துக்கு ஹீரோயினா.. இப்பவே நான் ரெடி!’’
\ எஸ். கல்பனா
படம்: என். விவேக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு