Published:Updated:

''இது வித்தியாசமான படம் இல்லை!''

இரா.சரவணன்

''இது வித்தியாசமான படம் இல்லை!''

இரா.சரவணன்

Published:Updated:
##~##

'தசையினைத் தீ சுடினும்’- தலைப்பிலேயே திரும்பிப் பார்க்கவைக்கிறார் இயக்குநர் விஜய பிரபாகரன். புதுமுகம்... தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல... தமிழுக்கும்!

 ''அக்மார்க் தமிழ்நாட்டுப் பையன்தான். ஆனாலும், ஒண்ணாவதில் இருந்து ப்ளஸ் டூ வரைக்கும் இந்திதான் படிச்சேன். விஷ§வல் கம்யூனிகேஷன் படிக்கும்போது, முழுக்க முழுக்க இங்கிலீஷ். அப்புறம் கனடா போய் சினிமா தொடர்பாகப் படிச்சேன். இப்படியே போனதால், தமிழ் எனக்கு சரியாகப் பேச வரலை. ஒருநாள், கனடா தமிழர் ஒருத்தரைச் சந்திக்கும்போது, நான் திக்கித் திணறித் தமிழ் பேசியதைப் பார்த்துட்டு, 'எந்த நாடு?’ன்னு கேட்டார். 'தமிழ்நாடு’ன்னு சொன்னேன். 'நல்ல வேளை, இதை எல்லாம் கேட்க பாரதி உயிரோடு இல்லை’னு தலையில் அடிச்சபடி எழுந்து போனார். ரொம்ப சங்கடமாப் போச்சு. 'சொந்த மொழியைக் காட்டிலும் எந்த மொழியும் பெரிது இல்லை’னு பொட்டில் அடிச்ச மாதிரி புரிஞ்சது. உலகத்திலேயே தாய்மொழியைத் தெளிவாக் கத்துக்க ஆறு வருடங்கள் போராடிய ஆள் நானாத்தான் இருப்பேன். பாரதியோட அத்தனைப் படைப்புகளையும் வரி விடாமல் படிச்சேன். படிச்சேன்னு சொல்றதைவிட, பைத்தியமாவே ஆனேன்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் விஜய பிரபாகரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது வித்தியாசமான படம் இல்லை!''

''பாரதி மேல் உள்ள பிரியத்தால்தான் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?''

''பிரியம்னு ஒரு வார்த்தையால் என்னோட பேரன்பைச் சொல்லிட முடியாது. வாழும் சூழலோ, வளரும் விதமோதான் நம்மை மொழி ஆர்வத்தில் இருந்து பிரிச்சிடுது. ஆனால், நமக்குன்னு ஒரு தெளிவு வந்த பின்னால், மொழியையும் மொழிக்கான  அடை யாளங்களையும் நாம கொண்டா டணும். நம்மில் எத்தனை பேர் அதைப் பண்றோம்? இந்தப் படத்தில் பாரதியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கு. பாரதியாரோட பாடல்களையே படத்துக்கான பாடல்களாகவும் பயன்படுத்தி இருக்கோம். மணிகாந்த் இசையில் கேட்டுப் பாருங்க, பாரதி திரை உலகுக்கும் பொருந்துகிற கவிஞன் என்பது புரியும்!''

''வழக்கமான அம்சங்களைத் தாண்டிய படங்கள் வெற்றி பெறுவது சிரமமாச்சே?''

''இது வித்தியாசமான படம்னு நான் சொல்லவே இல்லையே! பாட்டு, சண்டை, ஜனரஞ்சகம்னு இதில் எல்லாமே இருக்கு. ஆனால், சொல்லப்பட்ட விதம் புதுமையா இருக்கும். 1940-ல் சுதந்திரத்துக்காகப் போராடிய பெண்... 2004-ல் சுதந்திரத்தை அனுபவிக்கும் பெண்... இது தான் கதைக்கான கோடு. அம்மா, மகள், பேத்தி என மூன்று தலைமுறைப் பெண்களைப்பற்றிய பதிவு!''

''மூன்று நடிகைகளின் நடிப்பு எப்படி?''

''இது வித்தியாசமான படம் இல்லை!''

''அக்ஷயா- பாரதியின் வரிகளோடு வாழ்கிற பெண். ஜாக்கெட் அணியாத பாத்திரம் தொடங்கி, சுதந்திரத் தின் வேட்கையை உணர்த்தும் விதங்கள் வரை அற்புதமாப் பண்ணி இருக்காங்க.

சோனா- கன்னடத்துப் பெண். தமிழ் சரியா வரலை. 'பொறுமையா இருக்கேன். நல்லாக் கத்துக்கிட்ட பிறகு வாங்க’னு சொல்லி அனுப் பினேன். இப்போ சொந்தக் குரல்ல மதுரைத் தமிழில் பேசிப் பின்னி இருக்காங்க.

சுடிதார் அணிகிற சுதந்திரப் பெண்ணா மீரா வாசுதேவன். சிகரெட் பிடிக்கிற காட்சியில் இன்றைய பெண்களின் மாற்றங் களைக் கண் முன் கொண்டுவந்திருக்காங்க!''