Published:Updated:

ஒஸ்தி ராணி

இர.ப்ரீத்தி

ஒஸ்தி ராணி

இர.ப்ரீத்தி

Published:Updated:

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நமக்குப் பக்கத்து ஏரியாக்களில் 'பார்யா’ என்று திரும்பிப் பார்க்கவைக்கும் பட்டர்ஃப்ளைகளின் பயோடேட்டா இது!

 பெங்காலி ப்ளம்ஸ்

ஒஸ்தி ராணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

சுமா பட்டாச்சார்யா: 2008-ல் 'மிஸ் இந்தியா’ போட்டியில் ஃபைனல் வரை தொட்டுத் திரும்பிய காந்தக் கண்ணழகி. வங்காளம் பெற்றெடுத்த பெங்காலி ப்ளம்ஸ். 'குடிரித்தே கப் காபி’ என்கிற தெலுங்குப் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.

''லண்டனில் பிசிக்ஸ் படிச்ச கையோடு மும்பை வந்தேன். 'குடிரித்தே கப் காபி’யில் என் நடிப்பைப் பார்த்துட்டு ஷாரூக்கோட 'ரெட் சில்லீஸ்’ புரொடக்ஷனில் இருந்து போன் வந்தது. அடுத்தது பாலிவுட்தான். நடிக்க வரலைன்னா கண்டிப்பா ஒரு தொழிலதிபர் ஆகியிருப்பேன். ப்ச்... உங்களுக்குக் கொடுத்துவெச்சிருக்கு மச்சி!''

ஒஸ்தி ராணி

ஒஸ்தி ராணி

ரிச்சா கங்கோபாத்தியாயா: டோலிவுட்டின் இந்த வருட அழகுப் புயல். நடிக்க வருவதற்கு முன்பே 'மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ.’, 'மிஸ் மிச்சிகன்’, 'மிஸ் போட்டோஜெனிக் யு.எஸ்.ஏ’, 'மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் - வேர்ல்ட் வைடு’ என எக்கச்சக்க டைட்டில்களை லவட்டியவர்.

''அழகிப் போட்டியில் கலந்துக்கிட்டதால வரிசையா விளம்பரப் படங்களில் நடிச்சேன். 'லீடர்’ பட வாய்ப்பு கிடைச்சது. அடுத்தடுத்து 'நாகவள்ளி’, 'மிரபகாய்’ எல்லாமே ஹிட். தோ... தமிழுக்கும் நான் வந்துட்டேன். தனுஷோட 'இரண்டாம் உலகம்’, சிம்புவோட 'ஒஸ்தி’ன்னு நான் இப்போ பிஸி!''

தாஸ் தாஸ் ஷ்ரதா தாஸ்...

ஒஸ்தி ராணி

ஷ்ரதா தாஸ்: பூர்வீகம் வங்கம். வளர்ந்தது மராட்டியம். 'சித்து ஃப்ரம் ஸ்ரீகாகுலம்’ மூலம் தெலுங்கு தேசத்துக் குத் தரிசனம் தந்தவர்.

''நான் ஜர்னலிசம் படிச்ச நடிகை. 2010-ல் 'மாரோ சரித்ரா’ ரீ-மேக் எனக்கு பிரேக் கொடுத்தது. அடுத்தது 'ஆர்யா 2’, 'டார்லிங்’, 'நாகவள்ளி’னு எல்லாமே சூப்பர் ஹிட்தான். இப்போ நான் நடிச்ச 'லாகூர்’ படம் சர்வதேசப் பட விழா வரைக்கும் போய் அவார்டு வாங்கியிருக்கு. இனிமே ஷ்ரதா ரவுண்ட்தான்!''

தகதிமிதா ரீமா

ஒஸ்தி ராணி

ரீமா கல்லிங்கல்: 'ரிது’ படம் மூலம் உள்ளம் கொள்ளைகொண்ட நேந்திரம் பழம். இந்த திருச்சூர் அழகிக்குத் தெரிந்தது எல்லாம் நடனம்... நடனம்... நடனம்!

''முதல் வகுப்பு படிக்கும்போதே பரதநாட்டிய கிளாஸ் போக ஆரம்பிச்சிட்டேன். 'ஹேப்பி ஹஸ்பென்ட்ஸ்’, 'பெஸ்ட் ஆஃப் லக்’, 'ஆர்குட் ஒரு ஓர்மகுட்’னு நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். தமிழை மட்டும் விட்டுவெச்சிருக்க முடியுமா? 'யுவன் யுவதி’ மூலமா அட்டென் டன்ஸ் கொடுக்குறேன்!''

நினைவெல்லாம் நித்யா

ஒஸ்தி ராணி

நித்யா மேனன்: சுருள் கேசத்தால் கேரளாவைச் சுருட்டிவைத்து இருக்கும் அகல விழியழகி. 'ஆகாஷ கோபுரம்’ மூலம் மல்லுவுட்டின் ஆகாயம் தொட்டவர். '180’  மூலம் தமிழில் காலிங் பெல் அடித்துக் காத்திருக்கிறார். ''ப்ளஸ் டூ படிக்கும்போது 'டூரிஸம்’ மேகஸின்ல கவர்பேஜ் போட்டோ வந்தது. அதைப் பார்த்துட்டு, மோகன்லால் 'ஆகாஷ கோபுரம்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். கல்யாணி மாலிக் இசையில் இரண்டு பாடல் பாடி இருக்கேன். தெலுங்கில் 'உருமி’, மலையாளத்தில் 'கர்மயோகி’ பண்ணிட்டு இருக்கேன்!

ரா... ரா... ராதிகா

ஒஸ்தி ராணி

ராதிகா பண்டிட்: கன்னடத்தின் டாப் ஹீரோக்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்... ராதிகா பண்டிட். இரண்டு முறை தொடர்ந்து ஃபிலிம் ஃபேர் விருது வென்ற நடிப்பு நாயகி.

'' 'நந்த கோகுலா’, 'சுமங்கலி’ங்கிற சீரியல்களில் அறிமுகம் ஆனேன். அப்புறம் கிடைச்சது 'மோக்கின மனசு’ வாய்ப்பு. புனீத் ராஜ்குமாரோட 'ஹுடுகாரு’ சான்ஸ் கிடைச்சது. முதல்முறையா புனீத்தோட ஜோடி சேர்ந்த புதுமுகம்தான். இப்போ  'அதூரி’, 'சாகர்’, 'கலிபட்டா’னு அரை டஜன் படங்கள் பண்றேன்!''

டெல்லி மல்லி

ஒஸ்தி ராணி

அர்ச்சனா கவி: டெல்லி கொடுத்த கேரள மல்லி. 'நீலத்தாமரா’வில் அறிமுகமான அழகு அம்மாஞ்சி.

'' 'நீலத்தாமரா’ மூலமா எனக்குச் சிறந்த புதுமுக விருது கிடைச்சது. அதன் மூலமா கேரள மக்கள் மனசில் இடம் கிடைச்சது. அடுத்து நடிச்ச 'மம்மி அண்ட் மீ’ நல்ல நடிகைனு பேர் வாங்கித் தந்தது. இப்போ 'அரவான்’ மூலமா தமிழுக்குத் தலை காட்டுறேன். டெல்லி சப்பாத்தி, கேரளப் புட்டு வரிசையில் காரசாரமா வத்தக் குழம்பு சாப்பிட வர்றேன். நல்லா, டேஸ்டா செஞ்சு கொடுப்பீங்களா என் இனிய தமிழ் மக்களே..?''

கிளாமர் பார்பி

ஒஸ்தி ராணி

ஷர்மிளா மந்த்ரே: நம்ம ஆர்யாவின் கேர்ள் ஃப்ரெண்ட். கன்னடத்து கிளாமர் பார்பி.

''நான் சினிமா ஃபேமிலியைச் சேர்ந்தவ. பெங்களூரு 'சங்கம்’ தியேட்டர் எங்களுடையதுதான். அதனால்தான், சினிமா என் ரத்தத் திலேயே ஊறிடுச்சு. 'சஜ்னி’யில் அறிமுகம் ஆனேன். அடுத்தடுத்து 'நவக்ரஹா’, 'வெங்கடா இன் சங்கடா’, 'சுயம்வரா’ நடிச் சுட்டேன். இப்போ நம்ம காட்டுலதான் மழை. சீக்கிரம் தமிழ்ப் பக்கம் வருவேன். எனக்கும் ஒரு துண்டு போட்டுவைங்க!''

செனோரிட்டா என்ரிட்டா

ஒஸ்தி ராணி

என்ரிட்டா ரே: சாண்டல் வுட்டின் லேட்டஸ்ட் சாண்டல். ராஜஸ்தானில் பிறந்த ரசகுல்லா. ஆங்கிலம், பெங்காலி, இந்தி, கன்னடம் என ரேவுக்கு எல்லா மொழிகளும் ரா...ரா!

''டென்டிஸ்டுக்குப் படிச்சேன். இருந்தாலும் மாடலிங் மேல் தீராத காதல். 'வேகன் ஆர்’, 'ஃபேரவெர்’, 'கேட்பரீஸ்’, 'டி.வி.எஸ். ஸ்கூட்டி’னு ஒரு டஜன் விளம்பரங்களில் நடிச்சுட்டேன். 'ஜங்லி’தான் எனக்கான கூக்ளி. இப்போ 'ஜனுமா ஜனமடலு’, 'பாரிஜாதா’, 'பரமாத்மா’னு எக்கச்சக்க படங்கள். அதனால, என்னை எதிர்பார்க்காதீங்க தமிழ் மக்களே!''