Published:Updated:

''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு!''

ம.கா.செந்தில்குமார்

''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு!''

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''என் பெயர் எனக்கே மறந்து போகும் அளவுக்கு இப்பவும் எங்கே சென்றாலும், 'மைனா... மைனா’னு உருகுறாங்க. ஒரே படத்தில் இவ்ளோ உயரமான்னு ஆச்சர்யமா இருக்கு.  தமிழ் சினிமாவுக்கு நன்றி!''- ஐஸும் நைஸுமாகப் பேசுகிறார் அமலா பால். விக்ரம், ஆர்யா, அதர்வா என சீனியர் - ஜூனியர் ஹீரோக்களுடன் வலம் வரும் பியூட்டி.

 ''ரொம்ப அழகாயிட்டீங்களே?'' என்றால், ''இப்போ பல பேர், 'முன்னைக்கு இப்ப ரொம்ப அழகா இருக்கீங்க’னுதான் பேச்சையே தொடங்குறாங்க. 'மனசு தெளிவா இருந்தா, நம்மை அறியாமலேயே நாம அழகாயிடுவோம்’னு சொல்வேன்'' என்பவர், ''அது சரி. அப்படின்னா, முன்ன நான் சுமாராத்தான் இருந்தேனா?'' - கேள்வியையே பதிலாக்கிச் சிரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பரபரனு பிக்கப் பண்ணீட்டீங்க. என்ன மந்திரம் அது?''

''அது 'மைனா’ மந்திரம். என் குரு பிரபு சாலமன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். அவரின் அடுத்த படத்தில் நான் இல்லையாம். புது ஹீரோயினாம். 'சார்,  அடுத்த படத்துல ஒரு கெஸ்ட் ரோலாவது கொடுங்க’னு கேட்டு இருக்கேன். 'பார்க்கலாம்’னு சொல்லி இருக்கார்.''

''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு!''

''என்ன சொல்றார் விக்ரம்?''

''விக்ரம், அனுஷ்கா, நாசர்னு, யார் படங்களை எல்லாம் பார்த்து வளர்ந்தேனோ, 'தெய்வத் திருமகள்’ படத்தில் அவர்களுடன் சேர்ந்து நடிப்பது என் பாக்யம். ஹேர் ஸ்டைல் தொடங்கி டயலாக் டெலிவரி வரை விக்ரம் டிப்ஸ் தருவார். ரிலாக்ஸ் டைமில் 'தெய்வத் திருமகள்’ கேரக்டர் கிருஷ்ணாவாவும், விக்ரமாவும் மாறி மாறி அவர் பேசுறது ரொம்பவே ஸ்பெஷல். விக்ரம் நான் மிகவும் மதிக்கக்கூடிய நடிகர்.''

''அனுஷ்கா, சமீரா ரெட்டி என அடுத்தடுத்து டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள். ஏதேனும் சுவாரஸ்யம் உண்டா?''

''ஆமா! அடுத்தடுத்த படங்களும் இப்படியே அமைந்தாலும் நடிப்பேன். தமிழ், தெலுங்கு எனப் பிச்சு உதறும் கிளாமர் குயின் அனுஷ்காவை நான் டி.வி. பாடல்களில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரின் பெர்சனல் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல்தான் சமீராவும். அவங்களே எந்த ஈகோவும் இல்லாமல் என்னுடன் சேர்ந்து நடிக்கும்போது, நமக்கு எதுக்கு ஈகோ?''

''ஆர்யாதான் உங்களின் பெஸ்ட் ஃப்ரெண்டு என்கிறார்களே?''

''இந்தப் பேட்டிக்கு இந்தக் கேள்விதான் தலைப்பா? 'வேட்டை’ ஷூட்டிங் நாட்கள்...  ஏதோ, பாட்டி, தாத்தா, அம்மா, அப்பானு பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருப்பதுபோல் ஒரு ஃபீலிங். டைரக்டர் லிங்குசாமி பக்கா புரொஃபஷனலிஸ்ட். ஃபுல் சார்ஜ் பேட்டரிபோல் ஸ்பாட்டில் எப்பவும் ஆக்டிவ்வாக வலம் வருவார். மாதவன் சாரும், 'காரைக்குடி ஸ்லாங் பேசு’, 'இப்படி நடி’, 'அப்படிப் பாரு’னு டிப்ஸ் தந்துட்டே இருப்பார்.''

''உங்களுடன் நடிக்கும் ஹீரோக்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஒரு வரியில் சொல்லுங்கள்?''

''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு!''

''விக்ரம் - அமானுஷ்யன். ஆர்யா - சுகர் கேன். அதர்வா - என் குட் ஃப்ரெண்ட்.''

''ஓ, அப்போ அதர்வாதானா?''

'' 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படப்பிடிப்பு தொடங்கி 15 நாளுக்குப் பிறகு, நானும் அதர்வாவும், செல் நம்பர்களை ஷேர் பண்ணிட்டோம். நல்ல ஃப்ரெண்ட். நல்ல டான்ஸர். ஒரே வயசுக்காரங்க என்பதால், லவ் ஸீன்ஸ், டூயட் எல்லாம் கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்கு. இந்தப் படத்தில் 'சாருலதா’னு நான் ஒரு அமெரிக்க ரிடர்ன் கேர்ள். செம ஃப்ரீக்கி கேரக்டர். 'தெய்வத் திருமகள்’ படத்தில் மெச்சூர்டு, 'வேட்டை’யில் வில்லேஜ் கேர்ள்னு அழகழகான கேரக்டர்கள்!''

''சினிமாவில் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?''

''டைரக்டர் விஜய்..அப்புறம் 'அவன் இவன்’ ஜனனி அய்யர். மாடலிங் பண்ணும்போதே நானும் ஜனனியும் செம ஃப்ரெண்ட்ஸ். நாங்க ஒண்ணு சேர்ந்தா ஊர் தாங்காது நண்பா!''