சினிமா
Published:Updated:

''எனக்கு ஸ்டெதஸ்கோப் பிடிக்காது!''

இர.ப்ரீத்தி

##~##

ப்ரணிதா - 'உதயன்’ படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி. பெங்களூரு வரவு. ''ப்ரணிதான்னா... கன்னடத்தில் 'சகலகலா வல்லி’னு அர்த்தம். 'பேர் சொல்ல ஒரு பிள்ளை’னு சொல்வாங்களே, அது மாதிரி நான் பேரைக் காப்பாத்தின பிள்ளை. ஸ்கூல் படிக்கும்போதே, நடிப்பு, டான்ஸ், படிப்புனு ஆல் ரவுண்டர். வீட்டில் அம்மா, அப்பா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். எனக்கும் எதுக்கு ஸ்டெதஸ்கோப்னு நினைச்சேன். பி.காம். சேர்ந்துட்டேன். எந்த இயர் படிக்கிறேன்னு மட்டும் கேட்காதீங்க, அப்புறம் வயசைக் கண்டுபிடிச்சிடுவீங்களே?''

''தமிழ் சினிமாவைப் பிடிச்சிருக்கா?''

''ரொம்பப்ப்ப் பிடிச்சிருக்கு. என்னுடைய முதல் என்ட்ரி, என் தாய்மொழி கன்னடம்தான். ஒரு சிரமமும் இல்லை. அப்புறமா தெலுங்குப் படங்கள். இருந்தாலும், எப்படா தமிழுக்குப் போவோம்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. 'உதயன்’ படத்துக்குக் கூப்பிட்டதும், யெஸ்னு  என்ட்ரி ஆயிட்டேன். எப்பா, தமிழில் எவ்வளவு பெரிய லெஜன்ட்ஸ் இருக்காங்க. மியூஸிக், டைரக்ஷன், சினிமாட்டோகிராஃபி, ஆக்டிங்னு தமிழ் சினிமாவை உலகமே அவ்வளவு ஆச்சர்யமாப் பார்க்குது. நானும் 'மைனா’ பார்த்துட்டு ரெண்டு நாள் தூங்கலை தெரியுமா?''

''எனக்கு ஸ்டெதஸ்கோப் பிடிக்காது!''

''ப்ரணிதா - 10 வரிகளுக்கு மிகாமல் சொல்லுங்க...''

''நான் ரொம்ப கூல். எனக்குக் கோபம் வராது. ஆடம்பரமா நகைகள் போட்டுக்கப் பிடிக்காது. ஜீன்ஸ், டி-ஷர்ட்தான் ஃபேவரைட். ஆனா, புடவை - தாவணி யில நான் ரொம்ப அழகா இருக்கேனாம். மியூஸிக் பைத்தியம். அப்புறம் நான் கேக் செய்றதில் எக்ஸ்பர்ட்!''

''மெழுகுச் சிலை ப்ரணிதாவின் அழகு ரகசியம் என்னவோ?''

''(சிரிக்கிறார்) தேங்க் காட்! நான் ப்யூர் வெஜிடேரியன் பொண்ணு. நான் ஜிம் போய் வொர்க் அவுட் பண்றது இல்லை. பேட்மின்டன், ஷட்டில் காக்னு ஏதாவதுஒரு விளையாட்டில் என்னை ஈடுபடுத்திட்டே

''எனக்கு ஸ்டெதஸ்கோப் பிடிக்காது!''

இருப்பேன். அதுதான் என்னை எப்பவும் ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கு.''

'' 'சகுனி’யில் கார்த்தி ஹீரோயினாமே, அடுத்த இன்னிங்ஸுக்குத் தயார் ஆகிட்டீங்களா?''

''கடவுளே... எனக்கே தெரியாத விஷயங்கள் உங்க காதுக்கு மட்டும் எப்படித்தான் வருதோ? இன்னும் அதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கலை. ஸோ... நோ மோர் கொஸ்டீன்ஸ்!''