ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழச் சாத்தியம்உள்ள ஓர் இளைஞனின் '180’ நாள் கள்தான் கதை.

அமெரிக்க வாழ் டாக்டரான சித்தார்த் துக்கு கேன்சர். ஆறு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்ற நிலை. தான் இறந்துவிட்டதாக மனைவி பிரியா ஆனந்தை நம்பவைத்துவிட்டு, சென்னை வந்துவிடுகிறார் சித்தார்த். உண்மை அறியாத நித்யா மேனன், சென்னையில் சித்தார்த்தைக் காதலிக்கிறார். ஒரு விபத்தில் சிக்கும் நித்யாவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டுசெல்கிறார் சித்தார்த். அங்கே ப்ரியா ஆனந்தைச் சந்தித்தாரா.. இல்லை, நித்யாவின் காதலை ஏற்றுக்கொண்டாரா?

முக்கோணக் காதல் கதையை அழகியலோடும் அளவுக்கு அதிகமான நிதானத்தோடும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஜெயேந்திரா. எதற்கெடுத்தாலும் இரண்டு விரல்கள் நீட்டி ஒன்றைத் தொடச் சொல்வது, விதவிதமான வேலைகள் பார்ப்பது என்று சித்தார்த் குறித்த சித்திரிப்புக் காட்சிகள் ஆரம்பத்தில் நிமிர்ந்து அமரவைக்கின்றன. போகப் போக, படம் ஒரே இடத்தில் சுற்ற ஆரம்பித்துவிடுகிறது.

சித்தார்த் - இளம் காதலன், மரண நாள் தெரிந்த நோயாளி என இரண்டையும் அத்தனை அழகாகச் செய்திருக்கிறார். மீண்டும் அமெரிக்கா சென்று, தன் மனைவி யைச் சந்திப்பதா, வேண்டாமா என்கிற ஊசலாட்டத்தில் சித்தார்த்தின் நடிப்பு... அபாரம்! மரணத்தை எதிர்நோக்கும் கணவனை எப்ப டித் தேற்றுவது என்று புரியாமல் புழுங்கித் தவிக்கும் ஒரு மனைவியின் பரிதவிப்பில் அத்தனை பாந்தம்... ப்ரியா ஆனந்த்.

பப்ளிமாஸ் ரிப்போர்ட்டராக நித்யா மேனன்(அறிமுகம்). தியேட்டரில் சித்தார்த்தோடு தனியாகப் படம் பார்க்க வர, சித்தார்த்தோ கூட்டத்தோடு வர, அவஸ்தை யில் நெளியும்போது... நினைவெல்லாம் நித்யா!

சில காட்சிகளே வந்தாலும் மௌலி, கீதா, பேப்பர் போடும் சிறுவர்களின் பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. ஷரத் இசையில் 'உவெசுலா ஊது’ பாடலும் படமாக்கப்பட்ட விதமும் மழைத் தூறல். 'நீ கோரினால் வானம் மாறாதா’ பாடல் இடைவிடாது நனைக்கும் சாரல். பாலசுப்ரமணியெத்தின் கேமரா, பாலே நடனம் ஆடி இருக்கிறது. சென்னை, காசி, அமெரிக்கா, பிரேசில் என்று வெவ்வேறு நிலக் காட்சிகளைக் காணாத கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது கச்சிதம்!

ஆமாம், ஒரு டாக்டருக்கு மரணம் குறித்து மற்றவர்களைவிட அதிகம் தெளிவு இருக்குமே... சித்தார்த்துக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி?

அழகான, இளமையான காதல் கதை. ஆனால், அவ்வப்போது அலுப்பாகவும் இருப்பதுதான் பிரச்னை!