Published:Updated:

''இங்கே எல்லோருமே திருடங்கதான்!''

இரா.சரவணன்

''இங்கே எல்லோருமே திருடங்கதான்!''

இரா.சரவணன்

Published:Updated:
##~##

பாடலாசிரியர், அ.தி.மு.க-வின் பிரசாரப் புள்ளி, 'டைனமிக்’ அமைப்பின் தமிழகத் தலைவர் எனப் பன்முகங்களோடு இயங்கும் சிநேகன்... இப்போது 'உயர்திரு 420’. பாடலாசிரியர் டு ஹீரோ பயணத்தில் ஃபர்ஸ்ட், பா.விஜய்... நெக்ஸ்ட், சிநேகன்.

 ''தலைப்பிலேயே ஏதோ சொல்ல வர்றீங்களே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த உலகத்தில் எல்லோருமே ஒரு விதத்தில் திருடங்கதான். 'அட, அழகா இருக்காங்களே’னு ஒருத்தரைப் பார்த்து நாம நினைக்கிறதே தப்புதான். எப்படின்னு கேட்கிறீங்களா? மனசுல நினைச்சதைச் சம்பந்தப்பட்ட ஆளுகிட்ட போய் சொன்னா, அது நேர்மை. எத்தனை பேர் அந்த நேர்மையோட இருக்கோம்? படத்தில் நான் கொஞ்சம் மரியாதையான திருடனா வர்றேன். முதலில், 'மாண்புமிகு 420’ன்னு பேர் வெச்சோம். அமைச்சர் பெருமக்கள் வருத்தப்படுவாங்களேன்னு மாத்திட்டோம்!''

''இங்கே எல்லோருமே திருடங்கதான்!''

''கவிஞர் பா.விஜய்க்கு போட்டியாதான் நீங்களும் ஹீரோ ஆகிட்டீங்களா?''

''என்னோட சினிமா என்ட்ரியை நீங்க 'யோகி’யிலேயே பார்த்திருப்பீங்க. அழகா முகம் காட்டி அப்ளாஸ் வாங்கணும்னு நான் ஹீரோவா வரலை. விஜய் நடிச்ச 'ஞாபகங்கள்’ படத்தை முதல் நாளே பார்த்துட்டு, அவருக்கு போன் பண்ணினேன். 'படத்தில் நீங்க கவிஞனாகவே நடிச்சதைத் தவிர்த்திருக்கலாம்’னு சொன்னேன். யாரையுமே போட்டியாப் பார்க்கிறதில் எனக்கு விருப்பம் இல்லை. நேற்றைய சிநேகனை நாளைய சிநேகன் ஜெயிக்கணும்... அவ்வளவுதான். இன்னும் சிலர், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துட்டதால், சிநேகன் அலப்பறை கொடுக்க ஆரம்பிச்சிட்டான்’னு சொல்றாங்க. என்னோட படத்தை தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கினோம். கலைஞனுக்கு ஆட்சி முக்கியம் இல்லை. காட்சிதான் முக்கியம்!

இந்தப் படம் எனக்கு ஒரு விசிட்டிங் கார்டுதான். 'அச்சம் தவிர்’னு அடுத்து ஒரு படம் பண்றேன். அது 12 கோடி ரூபா பட்ஜெட். அதுக்கு முன்னால், மக்கள்கிட்ட முகத்தைக் காட்டணும்னு இந்தப் படம்!''

''டைனமிக் அமைப்பைத் தொடங்கி, கட்டிப்பிடிக் கூத்துகளை அரங்கேற்றுவது நியாயமா?''

''எங்கள் பயிற்சியில் கட்டிப் பிடித்து அன்பு பாராட்டுவதும் ஒரு பயிற்சி. கட்டிப் பிடிப்பதே முழு நேர வேலை இல்லை. இஸ்லாமிய நாடாகிய மலேசியாவில் சட்டதிட்டங்கள் எவ்வளவு கெடுபிடியாக இருக்கும். எங்கள் பயிற்சி தவறானதாக இருந்தால், அங்கே இத்தனைக் காலம் அமைப்பை நடத்த முடியுமா? தி.மு.க-வுக்கு எதிரான ஆளாகப் பார்க்கப்பட்ட நான், கடந்த ஆட்சியிலேயே டைனமிக் கூட்டங்களை நடத்தத்தானே செய்தேன்? அதில் தவறு இருந்தால், தி.மு.க. அரசு சும்மா விட்டிருக்குமா? தமிழகத்தின் மிக முக்கிய போலீஸ் அதிகாரிகளில் 50 பேர் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள்!''

''இங்கே எல்லோருமே திருடங்கதான்!''

''தமிழ் கலாசாரத்தைச் சீரழிக்கத் துடிக்கும் வெளிநாட்டுக் கும்பலின் கைக்கூலியாக நீங்கள் மாறிவிட்டதாகச் சொல்கிறார்களே?''

''கடவுளே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல. அப்படி இருக்கையில், நான் எல்லாம் சும்மா... நம்மை வீழ்த்த முடியாதவன்தான்  விமர்சனம் பண்றான். சட்டையே பண்ணாமல் போனோம்னா, அவன் தானா செத்துடுவான்!''

'' 'சமச்சீர்க் கல்வி, தலைமைச் செயலக மாற்றம் என ஜெயலலிதாவின் திமிர் இன்னும் மாறவில்லை’ என தி.மு.க. வசை பாடுகிறதே... நீங்கள் ஜெ-யின் மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அம்மா எப்பவும்போலத்தான் இருக்காங்க. எல்லோரையும் அவங்க எவ்வளவு மரியாதையா நடத்துவாங்கன்னு அவங்களைச் சந்திச்சவங்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த அன்பு இப்போ பல மடங்காப் பெருகி இருக்கு. 'திமிர்’ங்கிற வார்த்தை இங்கே தப்பாப் பார்க்கப்படுது. அது அகம்பாவத்தோட பிரதிபலிப்பு இல்லை... தன்னம்பிக்கையோட ஆணிவேர். 'என்னால் முடியும்’கிற திமிர் ஆட்சியாளர்களுக்கு அவசியம். கொள்கை உறுதிகொண்ட அந்தத் திமிர் அம்மாகிட்ட நிறையவே இருக்கு. யாருக்காகவும் சமரசம் ஆகிப்போகாத அந்தத் திமிர் இன்னும் சிறக்கணும்!''