Published:Updated:

''நீ அடிச்சது வலிக்கவே இல்லை!''

ம.கா.செந்தில்குமார்படம் : வி.செந்தில்குமார்

''நீ அடிச்சது வலிக்கவே இல்லை!''

ம.கா.செந்தில்குமார்படம் : வி.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''ஒரு ராத்திரி நேரம்... ஷங்கர் சார்கிட்ட இருந்து போன். 'மனோ, உடனே கிளம்பி டேராடூன் வாங்க’னு மட்டும் சொல்லிட்டு வெச்சுட்டார். 'ஆஹா... 'நண்பன்’ ஷூட்டிங். டேராடூனுக்கே கூப்பிடுறாரு... நிச்சயம் பெரிய ரோலா இருக்கும். பிச்சு உதறி பட்டையைக் கிளப்பிடணும்’னு அரக்கப்பரக்க ஓடுறேன். டெல்லி போய், அங்கே இருந்து 16 மணி நேரம் பயணிச்சு டேராடூன் ஸ்பாட்டுக்குப் போனேன். விசிட்டிங் கார்டு சைஸ்ல ஒரு பேப்பர் கொடுத்தாங்க. 'பிரின்சிபால் என்னை வரச் சொல்லி இருக்காரா?’னு அதுல எழுதி இருந்தது. 'அதைப் பேசிட்டு நீங்க கிளம்பிடலாம் மனோ... டேக் போலாமா?’னு சிரிச்சுட்டே கேக்குறார் ஷங்கர் சார். 'இதை நான் சென்னையில இருந்து போன்லயே சொல்லியிருப்பேனே’னு பரிதாபமா நான் மூஞ்சியை வெச்சுக்கிட்டுக் கேட்கவும் யூனிட்டே வெடிச்சுச் சிரிச்சுருச்சு. சினிமாவைவிட நிஜ வாழ்க்கையில்தாங்க நமக்கு இந்த மாதிரி ஏகப்பட்ட காமெடி நடக்கும்!''- சிரிக்காமல் மனோ பாலா சொல்ல, அவரை முறைத்துக்கொண்டே, ''இதுக்கு

''நீ அடிச்சது வலிக்கவே இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாம் காரணம் கே.எஸ்.ரவிக்குமார் சார்தான். அவர்கிட்ட போய் பஞ்சாயத்து வைக்கணும்!'' என்று முணுமுணுக்கிறார் அவரது மகன் ஹரி. ''இந்தச் சவடால்தானே வேணாம்கிறது. ரவி சார்தான் நாம அடிக்கிற கூத்தைப் பார்த்துட்டு 'நட்புக்காக’ படத்தில் என்னை முதன்முதலா நடிக்க வெச்சார். அந்த ஒரு படத்தோட ஒதுங்கிடலாம்னு நினைச்சேன். ஆனா, சினிமா நம்மளை விடலை. நான்லாம் இத்தனை படத்துல நடிச்சு ஏரியாவுல பப்ளிகுட்டியோட சுத்திட்டு இருக்குறது இந்தப் பயலுக்குப் புடிக்கலை. அதான், பொருமுறான்!'' என்று பூரிக்கிறார் மனோபாலா. தந்தை - மகன் இடையேயான ஆடு- புலி ஆட்டத்தை அமைதியாக ரசிக்கிறார் மனோபாலாவின் மனைவி உஷா.

 கமலுடன் ஆத்மார்த்த நட்பு, பாரதி ராஜாவின் பட்டறையில் பயிற்சி, ரஜினி நடித்த 'ஊர்க் காவலன்’ படம் உள்ளிட்ட 41 படங்களின் இயக்கத்தினைத் தொடர்ந்து இப்போது நடிகனாக 425 படங்கள்! வருடத்தின் அனைத்து நாட்களும் ஏதேனும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் கழிகிறது இவருக்கு.  

''நீ அடிச்சது வலிக்கவே இல்லை!''

''அப்போ கமல், சந்தான பாரதி, ராபர்ட் ராஜசேகர், பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம்னு ஆழ்வார்பேட்டை கமல் வீட்டில் நேரம் போறதே தெரியாமல் உலக சினிமா, இலக்கியம் பேசிட்டு இருப்போம்.   அப்போ நான் ஓவியக் கல்லூரி மாணவன். 'முள்ளும் மலரும்’ வெளியானப்ப மகேந்திரன் சார்கிட்ட உதவி இயக்குநராக சேர ஆசைப்பட்ட என்னை, 'பாரதிராஜாகிட்ட சேரு’னு அனுப்பி வெச்சார் கமல்.

அப்போ 'சிவப்பு ரோஜாக்கள்’ பட வேலைகள் நடந்துட்டு இருந்த சமயம். பாரதிராஜாகிட்ட சேர்ந்தேன். அந்தப் படம் முடிஞ்சதும் தன் அடுத்த படத்துக்கான டிஸ்கஷனில், கதையைச் சொல்லிட்டு, எங்க எல்லார்கிட்டயும் கருத்து கேட்டார் பாரதிராஜா. 'நல்லா இல்லை. இந்தப் படம் ஓடாது’னு நான் பளிச்சுனு சொல்லிட்டேன். 'என்னையா இப்புடிச் சொல்ற’னு கேட்டார் பாரதிராஜா. அப்பதான் எங்க யூனிட்ல இருந்து பாக்யராஜ் மனஸ்தாபத்தால பிரிஞ்சிருந்த நேரம். 'நீங்க வெளியில இருந்துதான் கதை வாங்கி படம் பண்ணிட்டு இருக்கீங்க. அப்படி இருக்கும்போது பாக்யராஜ் மாதிரி ஸ்க்ரிப்ட் நாலெட்ஜ் உள்ளவங்களை வெளியே அனுப்பி இருக்கலாமா’னு கேட்டேன். 'அவன் போனதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்’னு கேட்டார். அப்புறம் நானே சமாதானம் பேசி பாக்யராஜை அழைச்சுட்டு வந்தேன்.

அப்படியே உக்காந்து மூணே நாள்ல பாக்யராஜ் எழுதின ஸ்க்ரிப்ட்தான் 'புதிய வார்ப்புகள்’. படத்துல நடிக்க எல்லாரும் ஃபிக்ஸ் ஆகிட்டாங்க. ஹீரோ மட்டும் சிக்கலை. யோசிச்சுட்டே இருந்த பாரதிராஜா, 'யோவ், அவனை அழைச்சிட்டுப் போய் வாத்தியார் கெட்டப் போட்டு போட்டோ எடுத்துட்டு வாய்யா’னு பாக்யராஜை நோக்கிக் கை காட்டினார். இப்படித்தான் பாக்யராஜ் என்ற நடிகர் உருவானார். 'அலைகள் ஓய்வதில்லை’ க்ளைமாக்ஸில் ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் இறந்து போற மாதிரி ஸீன் வெச்சிருந்தார் இயக்குநர். ஆனால் பூணூல், சிலுவையை அறுத்துட்டு அவர்கள்  ஒண்ணு சேர்ற மாதிரி வைக்கலாம்னு நாங்க எல்லாரும் சொன்னோம். பெரிய போராட்டத்துக்குப் பிறகே அந்தக் காட்சியை ஓ.கே. பண்ணார் இயக்குநர்!''

''உங்க மனைவிக்கு, மகனுக்கு நீங்க நடிச்சதுல பிடிச்ச படங்கள் என்ன?''

''அய்யோ... அதை ஏன் கேக்குறீங்க? நான் நடிச்ச காமெடி ஸீன்கள் டி.வி-யில் வரும்போது எல்லாம், 'உனக்கு ஏம்ப்பா இந்த வேண்டாத வேலை’னு அலுத்துக்குவான் என் பையன். இன்ஜினீயரிங் படிக்கிறாப்ல. ஆனா, 'தலைநகரம்’ படத்துல வடிவேலு என்னைப் பார்த்து சொல்ற டயலாக் மட்டும் சாருக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி என் நெஞ்சில் தட்டி, 'என்னை அடிச்சிட்டேனு பெருசா பீத்திக்காத. நீ அடிச்சது வலிக்கவே இல்லை. நல்ல டாக்டராப் பாரு’ம்பான். கர்னாடக சங்கீதம்

''நீ அடிச்சது வலிக்கவே இல்லை!''

கத்துக்கிட்டு கச்சேரிகள் செஞ்சுட்டு இருக்கான். வீட்டம்மாவுக்கு நாம எந்தப் படத்துல நடிக்கிறோம்னுலாம் கவலை கிடையாது. வீட்ல இருந்து லேட்டா கிளம்பிப் போய் சீக்கிரம் திரும்பிடுற மாதிரி வேலைக்குப் போகச் சொல்லிட்டே இருப்பாங்க.

இந்த 40 வருச சினிமா வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்துட்டேன். இப்பவும் வாடகை வீட்டில்தான் இருக்கேன். ஏதோ மெதுவான்னாலும் நம்ம வண்டி ஓடிட்டே இருக்கு. விகடன்ல வாலி சார் எழுதினது நமக்கும் பொருந்தும். 'அடக்கமாகும் வரை அடக்கமாக இரு’!''- நிறைவாகச் சிரிக்கிறார் மனோபாலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism