Published:Updated:

''எனக்கு இன்னும் விருதுகள் வேணும்!''

நா.கதிர்வேலன்படம் : என்.விவேக்

''எனக்கு இன்னும் விருதுகள் வேணும்!''

நா.கதிர்வேலன்படம் : என்.விவேக்

Published:Updated:
##~##

சினிமாவில் நேர்த்தியைத் தேடும் இயக்குநர்களின் முதல் சாய்ஸ்... எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். எம்.எஃப்.ஹுசேன், மணிரத்னம், சந்தோஷ் சிவன், ஷாஜி கருண், விஷால் பரத்வாஜ், ஃபர்ஹான் அக்தர் என இந்திய சினிமாவின் முத்திரை இயக்குநர்களின் அணியில் தவறாமல் இடம் பிடிப்பவர். எட்டு தேசிய விருதுகள், ஐந்து கேரள அரசு விருதுகள், இரண்டு நந்தி விருதுகள், துபாய் சர்வதேசத் திரைப்பட விழா விருது என்று விருதுகளால் நிரம்பி வழிகிறது வீடு.  

 ''இங்கே இன்னும் எடிட்டிங் வெளியே தெரியாதபடிதானே இருக்கு?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு எடிட்டர் வெளியே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல படத்தில் எடிட்டிங்கும் வெளியே தெரியாது. இயக்குநரின் ரசனை, காட்சிப்படுத்துதல், அவர் சொல்ல விரும்பியதை, வேகமும் தரமும் குறையாமல் தருவதுதான் ஒரு எடிட்டரின் வேலை. கேரக்டரின் தன்மை, அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும் என்பது எடிட்டரின் கையில்தான் இருக்கு. சுருக்கமா, எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படத்தின் சரியான திரைக்கதை உருவாகும்!''

''எனக்கு இன்னும் விருதுகள் வேணும்!''

''எடிட்டிங் ஸ்டைல் மாறிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எப்படி எல்லாவற்றுக்கும் செட் ஆகுறீங்க?''

''என் தந்தை சஞ்சீவி சினிமாவில் எடிட்டரா இருந்தவர். அவரிடம்தான் தொழில் கத்துக்கிட்டேன். இந்தி, மலையாளம், அஸ்ஸாம், தெலுங்கு, சிங்களப் படங்களில் வேலை பார்த்து இருக்கேன். 25 கோடி பட்ஜெட் படமும் பண்ணிஇருக்கேன். 25 லட்சத்தில் கதை சொல்ல வர்றவங்களையும் பார்த்திருக்கிறேன். எந்தப் படமா இருந்தாலும் என் ஈடுபாடு ஒரே மாதிரிதான். எத்தனை பெரிய டைரக்டரா இருந்தாலும் எடிட்டருக்கு ஒரே ஃபார்முலாதான். ஒரு எடிட்டர், படம் பார்க்க வர்ற ரசிகனைப்போல ஜட்ஜ் பண்ணணும். படத்தின் கேரக்டர் மாதிரியே ஃபீல் பண்ணணும்!''

''ஒரு நல்ல எடிட்டருக்கான தகுதி என்ன?''

''முதலில் சினிமாவின் மேல் அன்பு, காதல் இருக்கணும். அதே அளவுக்குப் பொறுமை இருக்கணும். ஒரு படத்தோட டைரக்டர் என் ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடி, அவர் எடுத்துவெச்சிருக்கிற அத்தனை டேக்குகளையும் பார்த்துடுவேன். அவர் 'வேண்டாம்’னு ஒதுக்கிவெச்ச டேக்குகளைக்கூட விட்டுவைக்க மாட்டேன். அதிலும் சில வைரங்கள் கிடைக்கும்!''

''மணிரத்னம், மிருணாள் சென், அபர்ணா சென், விஷால் பரத்வாஜ், நந்திதா தாஸ்னு வெரைட்டியான இயக்குநர்களுடன் வேலை பார்த்திருக்கீங்க... பெர்சனல் அனுபவங்கள் கொஞ்சம் சொல்லுங்க?''  

''மணிரத்னம் கூட 'அலைபாயுதே’, 'கன்னத்தில் முத்தமிட்டால்’, 'யுவா’, 'குரு’ன்னு நிறையப் படங்கள் பண்ணியிருக்கேன். தான் கஷ்டப்பட்டு ஷூட் பண்ணினது எல்லாமே படத்தில் வரணும்னு மணி நினைக்க மாட்டார். ஆனா, அந்த ஃப்ளேவர் ரசிகர்களுக்குப் போய்ச் சேரணும்னு தீர்க்கமா இருப்பார். ஒவ்வொரு தடவை தேசிய விருது எனக்கு அறிவிக்கப்படும்போதும், முதல் போன்கால் அவர்கிட்ட இருந்துதான் வரும். மிருணாள் சென் ரொம்ப சிம்பிள். தானே கடைக்குப் போய் சிகரெட் அடிச்சுட்டு, டீ குடிச்சுட்டு வருவார். விஷால் பரத்வாஜ், ஏற்கெனவே பிரபலமான மியூஸிக் டைரக்டர். அவரோட படங்கள் எல்லாம் டார்க் காமெடியாவே இருக்கும். சந்தோஷ் சிவன், ஸ்பாட்டிலேயே வரிசையை மாற்றி ஓர் ஒழுங்கையும் அழகையும் கொண்டுவந்துடுவார். அவரோடு ஆரம்ப காலத்தில் இருந்து வேலை செய்கிறேன். நந்திதா தாஸின் முதல் படம் 'ஃபிராக்’கை நான்தான் எடிட் செய்தேன். நல்ல சினிமாக்கள் வெளியானால், 'அவசியம் பாருங்கள்’னு போன் செய்து சொல்வார்!''

''உங்களுக்கு அதிகபட்ச சவால் தந்த படங்கள் எவை?''

'' 'வானபிரஸ்தம்’. கதகளியின் பின்னணியி உருவாக்கப்பட்ட தத்துவார்த்தமான படம். கதகளி நீண்ட நேரம் ஆடப்படும் நடனம். அதைச் சுருக்கமாக, சினிமாவுக்கு ஏற்றபடி கொண்டுவருவது சவாலாக

''எனக்கு இன்னும் விருதுகள் வேணும்!''

இருந்தது. அடுத்து 'ஃபிராக்’. பல கோணங் களில் சொல்லப்பட்ட கதை!''

''இவ்வளவு தேசிய, மாநில விருதுகளுக்குப் பிறகு, உங்களுக்கு விருதுகள் பழகிப்போயிருக்குமே?''

''படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷம் கழிச்சு அடுத்த படத்தில் பிஸியா இருக்கும்போது, நியூஸ் வரும். 'அப்படியா!’னு த்ரில்லிங்கா இருக்கும். சின்ன சந்தோஷத்தோடு 'இந்த வேலையை இன்னும் அழகா செய்யணும்’னு தெம்பு கிடைக்கும். அதனால், இன்னும் எனக்கு விருதுகள் வேணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism