தமிழ் சினிமாவின் ஹாட் கேக்ஸ் சிலரின் கிச்சுக்கிச்சு டாட் காம் இங்கே...

ப்ரணித்தா

''ஸ்கூல் டூர் கிளம்புறதுக்கு முதல் நாள் ஸ்கூல்லயே தங்கச் சொல்லிட்டாங்க. நாங்க வெளியே போகக் கூடாதுன்னு, 'பால்கனி கதவைத் திறந்தா பேய் வரும்’னு பயமுறுத்திட்டாங்க. நடு ராத்திரியில் பால்கனி கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு. எல்லாரும் பயந்து டாய்லெட்டுக்குள் ஓடி ஒளிஞ்சுக் கிட்டோம். தொடர்ந்து கதவு தட்டுற சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு. ஒரு டீச்சர் தூக்கம் கலைஞ்சு கதவைத் திறந்தாங்க. பார்த்தா, ஜூனியர் பொண்ணு ஒருத்தி குடிக்கத் தண்ணி கேட்டு நின்னுட்டு இருந்தா. எல்லாரும் அசடு வழிய, டாய்லெட்டை விட்டு வெளியே வந்தோம்!''

ரேஷ்மி

'' 'தேநீர் விடுதி’ படத்துல ஹீல்ஸ் போட்டு நடிச்சேன். நடக்கிற ஸீன்ல எல்லாம் 'படக்... படக்’னு சவுண்ட் வரும். அதனால, ஆதித் டயலாக் பேச வராமத் தடுமாறுவார். எல்லாரும் என்னைக் கிண்டல் அடிச்சுட்டே இருந்தாங்க. க்ளைமாக்ஸ் ஸீன்ல வேகமா நடந்து போய் திரும்பிப் பார்க்கணும். சவுண்ட் வராம நடந்து போகணும்னு நினைச்சு நடக்கிறேன்... யூனிட்டே அதிர்ற மாதிரி சவுண்ட் கேட்குது. பதற்றமாகி பூனை மாதிரி மெதுவா எட்டுவெச்சு நடந்தாலும் அப்படியே சவுண்ட் கேட்குது. என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே நின்னுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது... நான் நடக்கிற சவுண்டை ரெக்கார்ட் பண்ணி ஆதித் செம ப்ளே பண்ணி இருக்கார். அன்னிக்கு யூனிட்டுக்கு நான் தான் கைப்புள்ள!''

ப்ரியா ஆனந்த்

''180 பட போட்டோ ஷூட்டுக்கு போட்டோ எடுக்கும்போது, சித்தார்த், நித்யா ரெண்டு பேரும் கண்ணை மூடி போஸ் கொடுத்தாங்க. 'நீயும் கண்ணை மூடு... நான் சொல்ற வரைக்கும் கண்ணைத் திறக்காதே’னு ஜெயேந்திரா சொன்னார். 'டைரக்டரே சொல்றாரே’ன்னு கண்ணை மூடிக்கிட்டேன். போட்டோ ஷூட் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா, போட்டோவில் சித்தார்த்தும் நித்யாமேனனும் கண்ணைத் திறந்து அழகா சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்து இருக்காங்க. நான் மட்டும் தூங்குற எஃபெக்ட்ல இருந்தேன். 'அந்த ஸ்டில்ஸை வெளியே விடவா’ன்னு மொத்த யூனிட்டும் என்னை மிரட்டி எடுத்துட்டாங்க!''

ஓவியா

''கஜினி சூர்யாவுக்கே சவால் விடுற அளவுக்கு நான் செம மெமரி லாஸ் பார்ட்டி. கன்னடப் படத்தில் நடிக்கும்போது, அங்க டாப் ஸ்டார் ஒருத்தர் எனக்கு அறிமுகம் ஆனார். ஒரு அவார்டு ஃபங்ஷன்ல அவரே என்னைத் தேடி வந்து பேசினார். எனக்கு அவரை ஞாபகமே இல்லை. அதை வெளியே காட்டிக்காம, மையமாப் பேசிட்டு இருந் தேன். அவர் பேசிட்டுக் கிளம்பினதும் அவசரக்குடுக்கையா வேகமா திரும்பி அம்மாகிட்ட, 'யாரும்மா இவர்?’னு கேட்டேன். அது அவருக்கும் கேட்டுருச்சு. நான் அசடு வழிய... அவர் சிரிச்சுட்டார். ஃபங்ஷன் முடியுற வரை நான் நினைச்சு நினைச்சுச் சிரிச்சுட்டே இருந்தேன். அவர் யாருங்கிறது மட்டும் சஸ்பென்ஸ்!''