Published:Updated:

சென்னைக்கு ngy போட்டா மதுரைத் தமிழ்!

இது தாப்ஸி Tamiழ்நா.கதிர்வேலன், எஸ்.கலீல்ராஜாபடங்கள் : கே.ராஜசேகரன்

சென்னைக்கு ngy போட்டா மதுரைத் தமிழ்!

இது தாப்ஸி Tamiழ்நா.கதிர்வேலன், எஸ்.கலீல்ராஜாபடங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

வெள்ளாவி தேவதை தாப்ஸி சென்னையில்! 'எந்த ஹீரோ பிடிக்கும்?’, 'ஒரு நடிகையாக உங்க லட்சியம் என்ன?’ போன்ற 'பாரம்பரியப் பேட்டி’ இல்லாமல், அவரைக் கலாய்த்துக் கலாட்டா செய்தால் என்ன என்று தோன்றியது. அவருக்கு சென்னைத் தமிழ்ப் புலவர் சிவாவை வைத்து தமிழ் கற்றுக் கொடுக்கும் 'சமூக நோக்குடன்’ களம் இறங்கினோம்!

ஜி.ஆர்.டி. ஹோட்டலில் தமிழ் வாத்தியாராக சிலேட், சாக்பீஸ் சகிதம் சிவா தயாராக, ஜீன்ஸ் டாப்ஸ் மாணவியாக தாப்ஸி ஆஜர்! சிலேட்டில் சிவா பெரியதாக 'அ’ எழுத, ''வாட் இஸ் திஸ்?'' என்று ஆச்சர்யமாகக் கேட்டார் தாப்ஸி. ''இது இங்கிலீஷ்ல ஏ மாதிரி. அ ஃபார் அமிதாப் பச்சன். தமிழ் கலாசாரப் படி அ ஃபார் அல்வா!'' என்றார் சிவா.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னைக்கு ngy போட்டா மதுரைத் தமிழ்!

சிலேட்டில் வணக்கம் எழுதிய சிவா, ''இது வணக்கம். வீட்டுக்கு யாரும் சொல்லாமக் கொள்ளாம வந்துட்டா, அதிர்ச்சியா இருக்கும்ல. அப்போ யூஸ் பண்ணிச் சமாளிக்கலாம். போன் எடுத்ததும் வணக்கம் சொல்லிட்டா, 'எதுக்குடா காலங்காத்தால போன் பண்ணி இம்சை பண்றே’னு கேட்காம இருப்பாங்க. ரொம்ப மரியாதையான வார்த்தை. ஸ்கூல் குழந்தைங்கதான் இப்போ இதை கரெக்டா யூஸ் பண்றாங்க. இதுக்கு இணையான வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கு. அது wanna come. அர்த்தம் வேற... உச்சரிப்பு ஒண்ணுதான்!'' என்று சிவா மொக்கை போட்டுக்கொண்டே செல்ல, இடைமறித்தார் தாப்ஸி. ''மச்சான்... எனக்கு  தமிழ் ஸ்மால் ஸ்மால் தெரியும். ஆட்டோ ஏறினா முன்னாடி போ... பின்னாடி போ... ரைட் போ... லெப்ஃட் போ... யூ டர்ன் எடுன்னு சொல்லி கரெக்டா ஸ்பாட் வந்திருவேன்'' என்றார் பெருமை பொங்க.  

சென்னைக்கு ngy போட்டா மதுரைத் தமிழ்!

''நீங்க சொன்னதுல ரெண்டு அப்ஜெக்ஷன் இருக்கு யுவர் ஆனர். ஒண்ணு, மச்சான்ங்கிற வார்த்தையை தமிழ்நாட்டு மக்கள் நமீதாவுக்கு எழுதிக்கொடுத்துட் டாங்க. ரெண்டாவது, நீங்க சொன்ன மாதிரி ஓட்டினா, ஆட்டோ எங்கே கிளம்புச்சோ, கடைசியில அங்கேதான் வந்து நிக்கும்!''- சிவா சொல்ல... ரொம்ப சீரியஸாகக் கேட்டுக்கொண்டார் தாப்ஸி.

தாப்ஸி என்று சிலேட்டில் எழுதிய சிவா, அதை அப்படியே எழுதச் சொன்னார். கண்கள் மினுங்க, அதை அப்படியே காப்பி பண்ணினார் தாப்ஸி. ''நீங்க நல்லா தமிழ் கத்துக்கிறீங்களோ இல்லையோ... சீக்கிரமே நல்ல டிராயிங் மாஸ்டர் ஆகிடலாம். குட் கேர்ள்!''- பாராட்டுப் பத்திரம் வாசித்தார் சிவா. ''இதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு நடிகைக்கு நீங்க தமிழ் கத்துக் கொடுத்திருக்கீங்களா?'' என்று தாப்ஸி கேட்க, ''பேர் சொல்ல மாட்டேன். ஒரு நடிகை போன் பண்ணி, 'ஏதாவது கெட்ட வார்த்தை சொல்லிக் கொடு... வெளியில போனா திட்ட யூஸ் ஆகும். தமிழ் தெரியலைன்னு தெரிஞ்சா, உங்க ஆளுங்க ஓவராப் பண்ணுவாங்க’ன்னு சொன்னார். 'உன் முகம் மங்களகரமா இருக்கு’, 'உன்னைக் கட்டிப் பிடிச்சுப் பாராட்டணும்போல இருக்கு...’ இந்த ரெண்டையும் கெட்ட வார்த்தைன்னு சொல்லி கத்துக் கொடுத்தேன். மறு நாள் அந்த நடிகை போன் பண்ணி,  'என்னப்பா உங்க ஊர் ஆட்டோ டிரைவர் கெட்ட வார்த்தை சொன்னா, இப்படிப் பல்லைக் காட்டுறாங்க. ரொம்ப நல்லவங்களா இருக்காங்கப்பா’னு ஆச்சர்யமாக் கேட்டாங்க. எப்படிலாம் தமிழர் களைக் காப்பாத்தி இருக்கேன் தெரியுமா?''- சிவா சொல்ல, ''கேட்டதுமே என்னைப் பிடிச்சுப் போற மாதிரி ரெண்டு தமிழ் வார்த்தை சொல்லிக் கொடுங்க சிவா!'' என்று கோரிக்கை வைத்தார் தாப்ஸி.

''சாப்டியானு கேளுங்க... உடனே அன்பு மழை பொழியும். ஏன்னா, பாதித் தமிழன் உடம்புல ரத்தத் துக்குப் பதிலா ரசம்தான் ஓடிட்டு இருக்கு. அடுத்து 'சரக்கு அடிக்கலையா’னு கேளுங்க. உயிரை விட்ருவாங்க. ஏன்னா, இங்க பாதிப் பேர் 'கிளாஸ்’மேட்தான்!''- சிவா சொல்ல, என்ன புரிந்ததோ சிரித்துவைத்தார் தாப்ஸி.

''வெள்ளாவி வெச்சு வெளுக்குறதுன்னா என்னன்னு தெரியுமா?''- சிவா கேட்க, ''நான் கேட்டேனே... சன் லைட் படாம, ஒரு பாக்ஸ்ல ஸ்டீம் விட்டு குளோத்ஸ் வாஷ் பண்றதுன்னு சொன்னாங்க!'' தாப்ஸி தமிங்கிலீஷில் பின்னியெடுக்க, ''நீங்க சொல்றதைக் கேட்டா, என்னைத் துவைச்சுத் தொங்கவிட்ட மாதிரி இருக்கு. ஆனா, தமிழ் கத்துக்கணும்கிற உங்க ஆர்வத்தைப் பாராட்டுறேன்!''- சிவா சொல்ல, ''பாஸ்... தமிழ்நாட்டுல பொண்ணுங்க யாரும் சினிமாவுல ஹீரோயினா நடிக்க வர்றது இல்லை. நாங்கதான் பெரிய மனசு பண்ணி நடிக்குறோம். அதனால எங்களைக் கிண்டல் அடிக்காம பத்திரமா பார்த்துக் கோங்க!'' என்று ஜாலி வார்னிங் கொடுத்தார் தாப்ஸி.

சென்னைக்கு ngy போட்டா மதுரைத் தமிழ்!

''முதன்முதலா தமிழ்ல பேசிக் கேட் டப்போ எப்படி இருந்துச்சு?''- சிவா கேட்க, '' 'ஆடுகளம்’ ஷூட்டிங்குக்கு மதுரை வந்தப்போதான் முதன்முதலா தமிழ் கேட்டேன். 'வந்தான் வென்றான்’ படத்துக்காக சென்னை வந்தப்போ ஆர்வமா கவனிச்சேன். சென்னையில டிபஃரன்ட்டா தமிழ் பேசுறாங்க. என்ன வித்தியாசம்னு கேட்டா, 'ப்ளைனா பேசுனா, சென்னைத் தமிழ். வார்த்தை முடியும்போது ஸீரீஹ் போட்டுப் பேசுனா அது மதுரைத் தமிழ்’னு சொன்னாங்க. இதுபோக, இன்னும் நாலஞ்சு டிபஃரன்ட் தமிழ் இருக்காமே?''- தாப்ஸி கேட்க, ''அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லைங்க... நீங்க தமிழ்ல 'ஐ லவ் யூ’ங்கிற வார்த்தையை மட்டும் கத்துக்கிட்டீங்கன்னா போதும். எங்கேயும் எப்போதும் சமாளிக்கலாம்!'' என்று ட்ரிக்ஸ் சொல்லிக் கொடுத்தார்.    

'' 'வந்தான் வென்றான்’ படத்துல உங்களுக்குப் பெரிய பெரிய டயலாக் போர்ஷன்னு கேள்விப்பட்டேன். எப்படிச் சமாளிச்சீங்க?''- சிவா கேட்க, தாப்ஸி முகத்தில் குதூகலம். ''ஆமாங்க, 'வந்தான் வென்றான்’ அருமையாக வந்திருக்கு.  நான் ரசிச்சு ரசிச்சு செய்த படம். டைரக்டர் கண்ணன் சூப்பர். படம் முழுக்க நான் நிறையப் பேசிட்டே இருப்பேன். பல நேரம் ஜீவா அமைதியா இருப்பார். அந்த மாதிரி ஷூட் பண்ணும்போது ஜீவா வேணும்னே கண்ணை உருட்டி உருட்டிப் பார்ப்பார். எனக்குச் சிரிப்பை அடக்க

சென்னைக்கு ngy போட்டா மதுரைத் தமிழ்!

முடியாது. ஆனா, டைரக்டர் திட்டுவாரேனு சீரியஸா பேசி முடிச்சேன். சின்னப் பொண்ணை எவ்வளவு கஷ்டப்படுத்துறாங்கப்பா!''- செல்லமாக அலுத்துக்கொண்டார் தாப்ஸி.

''சரி 'ஆடுகளம்’, 'வந்தான் வென்றான்’னா என்ன அர்த்தம்?''- சிவா கேட்க, ''வந்தான் வென்றான்னா, என்ட்ரி கொடுத்ததும் ஹிட் அடிச்சுட்டான்னு அர்த்தம். களம்னா, கிரவுண்ட். காலம்னா, டைம். ஆடுன்னா, ப்ளேயிங்னு அர்த்தம். அதுக்கு கோட்னு இன்னொரு அர்த்தம் இருக்கு. கரெக்டா?''- தாப்ஸி தடதடக்க, ''ஆஹா! இவ்வளவு தெரிஞ்சுக்கிட்டுதான் என்கிட்ட தமிழ் கத்துக்கிட்டீங்களா? சிவாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கிறார் தாப்ஸி''ன்னு டைட்டில் மாத்திருங்க சார்!''- தாப்ஸியிடம் பம்மிப் பதுங்குகிறார் சிவா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism