Published:Updated:

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

Published:Updated:
##~##

'சைலன்ட்மேக்கிங்’கில் செல்வராகவன், 'ஜூனியர்’ மணிரத்னம்! சத்தமே இல்லாமல் 'மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் பெரும்பகுதியை முடித்துவிட்டார். சினிமா, பெர்சனல், தனிமை குறித்தெல்லாம் பேசிய இனிமையான சந்திப்பில் இருந்து...

'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு அமைதி ஆகிட்டீங்க. ஆனா, விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்கள் மாதிரி உங்களைப்பத்தி தினம் தினம் செய்திகள் உலா வருதே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முதல் படத்தில் இருந்தே எனக்கு எந்தப் பூங்கொத்தும் வரலையே! 'மாலை நேரத்து மயக்கம்’ பெரும் பகுதியை முடிச்சுட்டேன். தெலுங்கிலும் படம் பண்றேன். ஒரு டைரக்டர் அவ்வளவுதானே பண்ண முடியும். ஹீரோவா இருந்தா, ஒரே நேரத்தில் மூணு படம்கூட நடிக்கலாம். இன்னிக்கு வரைக்கும் ஒரு படத்தோட வெற்றி, தோல்விக்கு டைரக்டர் மட்டும்தான் பதில் சொல்லணும். எல்லோருக்கும் எல்லா உண்மையும் தெரியும். வெற்றி, தோல்வி எல்லாத்தையும் முதல் இரண்டு, மூணு படங்களிலேயே கடந்துட்டேன். இன்னிக்கு நான் நல்ல படம் எடுக்கணும்கிற முடிவில் மட்டும்தான் இருக்கேன். 13 வருடங்கள் இங்கே இருந்துட்டு தரத்தில், ரசனையில், உள்ளடக்கத்தில் முன்னேற்றத்தைப் பார்க்கணும். என் படம் எப்போ ரிலீஸ் ஆனாலும், இரண்டு மாநிலங்களில் முதல் நாள், முதல் ஷோவை கியூவில் நின்னு பார்க்குறாங்க. அதுக்கு மேல என்ன வேணும். வெற்றி, தோல்வி எல்லாம் 'தங்க விதி’. யார் அதை இதுவரை கண்டுபிடிச்சது?''

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

''செல்வராகவன்-தனுஷ் கூட்டணி ஹிட் காம்பி னேஷன். இப்போ ஆண்ட்ரியாவும் இருக்காங்க. 'மாலை  நேரத்து மயக்கம்’ செல்வா ஸ்பெஷல் காதல்தானா?''

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

''டீன் - ஏஜ் லவ்தான். காதல் இங்கே நிறைய விதங்களில் வந்தாச்சு. ஆனால், ஆத்மார்த்தமா நேசிக்கிறதை சினிமாவில் நாம அநேகமாக செய்றது கிடையாது. காதல்னு நினைக்கி றோம். அது பாதி நேரத்தில் ஹார்மோனில் போயிடுது. ஆனா, உள்ளே ஒரு ஆத்மா இருந்து, மனசு உருகி லவ் பண்ணினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு காதல். 'மாலை நேரத்து மயக்கம்’லேயே ஒரு மயக்கம் இருக்கே!

ஃபிலிம் மேக்கருக்கு ஒரு நல்ல பயணம் அவசியம். ஒரு கட்டத்துல ஸ்க்ரிப்ட்டில் ஆர்ட் வரணும். ஸீன் தெரியக் கூடாது. ஒரு பெயின் டிங்கோட பூரணத்துவம் தெரியணும்.  தனுஷ், ஆண்ட்ரியா இரண்டு பேருக்கும் இதில் கிடைக்கப்போற இடம் பெரிசு. இது கம்ப்ளீட் டீன் - ஏஜ் படம்!''

''திடீர்னு கௌதம் மேனன் 'விண்ணைத்தாண்டி வருவாயா’ கொடுத்து உங்கள் இடத்தை எடுத்துக்கிட்ட ஃபீல். உண்மையா?''

''இங்கே எனக்குன்னு என்ன நிரந்தர நாற்காலியா போட்டு வெச்சிருக்காங்க? காதல் படங்கள்னா நான்தான்னு நினைச்சதே கிடையாது. இளமைக்கு நான் மட்டுமே அத்தாரிட்டியும் இல்லையே. என் கேரியர் முடியும்போது, நான் எடுத்த படம் ஒவ்வொண்ணும் நாலஞ்சு ஸ்டெப் முன்னாடி போயிருக்கணும். அதைத் தவிர, வரலாற்றில் நிலைச்சு நிற்பதற்கோ, தொடர் ஹிட்டுகளுக்காகவோ செய்யப்பட்ட முயற்சிகளா மட்டுமே என் படங்கள் இருக்கக் கூடாது!''

''மறுபடியும் யுவனுடன் நீங்க இணையப் போறீங்களா?''

''ஆமாம். நான், தனுஷ், யுவன் கூட்டணி எப்பவும் பேசப்பட்டிருக்கு. நாங்க எல்லோரும் சேர்ந்துதான் வந்தோம். பிரிவுக்குப் பின்னாடி சேரும்போது இன்னும் அழகா இருக்கு. பிரிஞ்சதுகூட நல்லதுதான். கொண்டாடிக்கிட்டு இருக்கிற நண்பர்கள் கொஞ்சம் பிரிந்து சேர்ந்தால் நல்லா இருக்கும்னு தோணுது. இனிமேல் எந்நாளும் யுவனோடு பிரிவு இல்லை!''

''அருமையான காதல். கல்யாணம். இப்போ தனிமை. கஷ்டமா இல்லையா?''

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

''விவாகரத்துக்கு முன்னாடியே இரண்டு மாசம் தனியாகத்தான் இருந்தேன். தெலுங்கில் ஒண்ணு, தனுஷ் படம், இந்தியில் ஒண்ணுன்னு மூணு படத்துக்கு நான் கதை எழுதி ஆகணும். அதுக்கே நேரம் சரியா இருக்கும். என் ஃபேமிலி, தங்கச்சி, தம்பி எல்லோரும் என்னை நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. என்னைத் தனியா விடலை. தனிமையா இருந்த மாதிரி தெரியலை. தனிமையை எல்லோரும், எல்லா மனுஷங்களும் அவசியம் அனுபவிக்க ணும். அப்பதான் நாம் செய்த நல்லது, கெட்டது எல்லாம் வரிசையா ஞாபகத் துக்கு வரும்!''

''சோனியாகூட பேசுவீங்களா?''

''நல்லா! எங்க பிரிவு அவ்வளவு அருமையா... இயல்பா இருந்தது. கோர்ட்டில்தானே பிரியணும். அதனால், அங்கே போய் பிரிஞ்சோம். இல்லாவிட்டால், ஒரு காபி ஷாப்பில், ஒரு நல்ல காபி சாப்பிட்டு, கை குலுக்கிப் பிரிஞ்சிருப்போம். நாங்க சண்டை போடறது கிடையாது. நான் பேசுவேன். அவங்களும் பேசுவாங்க. 'எப்படி இருக்கே... என்ன பண்றே?’னு ஒரு நண்பன் மாதிரி பேசிக்குவோம். எங்கள் பிரிவில் சண்டை, சச்சரவு கிடையாது. அவங்களும் சந்தோஷமா இருக்காங்க. நானும்!''

''சோனியா சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. உங்க டிப்ஸ் உண்டா அவங்களுக்கு?''

''சோனியாவுக்குத் தனித்தன்மை பிடிக்கும். தானே முடிவெடுக்கிறது இன்னும் பிடிக்கும். ஏதாவது அட்வைஸ் கேட்டால் சொல்வேன். முன்னே இருந்ததைவிட இப்போ பெட்டர் ரிலேஷன்ஷிப். எனக்கு அவங்களைவிடவும் தோழின்னு யாரும் இருந்தது கிடையாது. இப்ப அவங்களே, 'நாம் ஃப்ரெண்ட்ஸாகவே இருந்துஇருக்கலாம் செல்வா’ன்னு சொல்றாங்க!''

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

''இந்த முடிந்துபோன திருமணத்துல நீங்க கத்துக்கிட்டது என்ன?''

''நிச்சயம் முதல் இரவில் இருந்து வாழ்க்கை ஆரம்பிக்கலை. எனக்கு என்னவோ கல்யாணம் பண்ணி ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் நிஜ வாழ்க்கையே ஆரம்பிக்குதுனு தோணுது. அதை நல்ல படியாகக் கடந்துவிட்டால் போதும். விட்டுக்கொடுத்தல் அவசியம். அதை சோனியாவும் கத்துக்கலை. நானும் கத்துக்கலை. அதற்குள்ளே காலம் கடந்துபோச்சு. எங்களுக்கு அடுத்த திருமணம் நிச்சயம் பெர்ஃபெக்டா இருக்கும்!''

மறுபடியும் காதல் கொண்டேன்! - செல்வராகவனின் இரண்டாவது காதல்

''அப்போ, இப்போ காதல்..?''

''யெஸ்! இப்போ இரண்டு மாசமா சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒரு பெண்ணை விரும்புறேன். சமயம் வரும்போது நானே உங்களுக்கு அறிமுகம் செய்றேன். 'மாலை நேரத்து மயக்கம்’ல ஆத்மார்த் தமான காதல்னு சொன்னேன் இல்லையா... அது அவங்ககிட்டே இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். 24 மணி நேரமும் சினிமாவில் இல்லா மல், இரண்டு மணி நேரம் அவங்களுக்காகச் செலவிடுறேன். வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கேன்னு ரெண்டு மாசமாத்தான் தெரியுது. இந்த வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கு. 21 வயசில் சினிமாவுக்கு வந்தேன். பீச்சில் போய் காதலியோடு உட்கார்ந்தது இல்லை. அவ தோள் மேலே சரிஞ்சு சாய்ஞ்சு சினிமா பார்த்தது இல்லை. இப்போ 33 வயசாச்சு. 21 வயசுல என்ன செய்வாங்களோ... அதை எல்லாம் ஒண்ணுவிடாம இப்போ செய்துட்டு இருக்கேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism