விகடன் பொக்கிஷம்
Published:Updated:

2011 - ன் கார் காலம்!

2011 - ன் கார் காலம்!

##~##
''சி
வாஜி சார் தொடங்கி சிம்பு வரை சினிமா ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு 'கார்’னா... அவ்வளவு
2011 - ன் கார் காலம்!
இஷ்டம். எவ்வளவு பெரிய பிரபலமா இருந்தாலும், முதல் சம்பளத்தில் வாங்கிய காரை இன்னும் பத்திரமாக வைத்திருப்பார்கள் பல சினிமா வி.ஐ.பி-க்கள். இதுதான் 'கார் காலண்டர்’ ஐடியா.

ரெண்டு வருஷமாவே மனதில் இருந்த எண்ணம்... இப்போதான் கியர் தட்டிக் கிளம்பியது!'' - மென்மையாகச் சிரிக்கிறார் ஜி.வெங்கட்ராம். தென்னிந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்’ புகைப்படக் கலைஞர்.  

''ஆர்ட்டிஸ்ட்டுகள்கூட 'சூப்பர்ப்... தேதி சொல்லுங்க’னு அட்டென்டன்ஸ் கொடுத்துட்டாங்க. ஆனா, வின்டேஜ் கார்களைத் தேடிப் பிடிக்கத்தான் ரொம்பவே சிரமப்பட்டேன். வின்டேஜ் கார் காதலர்கள் எம்.எஸ்.குகன், டி.டி.கே.அருண் வாசு, ரஞ்சித் பிரதாப், ஸ்ரீகுமார் கை கொடுத்தாங்க!'' என்று பூரிப்பவர் ஸ்டார், கார் அனுபவத் துளிகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

2011 - ன் கார் காலம்!

 விக்ரம், செம ஸ்டைலிஷ். 1962-வது வருட செவர்லே இம்பாலாவுடன் போஸ் கொடுத்தார். ஆறரை அடி நீள ஸீட்டுடன் பிரமாண்டமான ரதம். காருக்குள்ளே கேஷ§வலாகக் கால் நீட்டி, உட்கார்ந்து போஸ் கொடுத்துட்டுப் பறந்துட்டார். அவ்வளவு பரபரப்பிலும் ஐந்து நிமிடங்கள் என்னை போஸ் கொடுக்க வைத்தார் விக்ரம்!

 சூர்யாவுக்கு 1956-வது வருட எம்.ஜி கார். 'மும்பையில் இந்த கல்ச்சர் இருக்கு. இங்கே நீங்கதான் முதல்ல பண்றீங்கன்னு நினைக்கிறேன். வின்டேஜ் கார்கள்பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட்டால், ரொம்பவே சந்தோஷம்’னு சொன்னார். ஒவ்வொரு போட்டோவுக்கும் 'சூப்பர்ப்... சூப்பர்ப்’னு பாராட்டுக்கள்!  

2011 - ன் கார் காலம்!

சிம்பு, ஆர்யா இருவரும் என் செல்லங்கள். அவங்களுக்கு மட்டும் வின்டேஜ் பைக்குகள். ஃபேமஸ் ஜேம்ஸ்னு 1944-ம் வருட பைக் சிம்புவுக்கு. மனுஷனுக்கு பைக்கை விட்டுட்டுப் போகவே மனசு இல்லை!

2011 - ன் கார் காலம்!

 கார்த்திக்கு ஸ்டுடிபேக்கர் பிரசிடென்ட் கார். 1956-வருட மேக். எம்.எஸ்.குகனோட கலெக்ஷனில் கம்பீரக் குதிரை இந்தக் கார்!

 சென்னை, ஹைதராபாத்னு பறந்துட்டு இருந்த த்ரிஷா, இந்த ஷூட்டுக்காக ஒருநாள் முழுக்க பின்னி மில்லில் இருந்தார். 1931 மாடல் டாட்ஜ் பிரதர் காரின் ஹெட்லைட்டை ஒளிரவெச்சு ஷூட் பண்ணோம். இப்போ, த்ரிஷாவுக்கும் எனக்கும் அதுதான் ரொம்பப் பிடிச்ச போட்டோ!  

2011 - ன் கார் காலம்!
2011 - ன் கார் காலம்!

 'கொச்சினுக்கு வந்துடுங்க வெங்கட்’னு சொன்னார் நயன்.ஆனா, அங்கே காரே கிடைக்கலை. 'ஓ.கே’ன்னு உடனே சென்னை வந்தவருக்கு காத்தி ருந்தது ஜாகுவார் எஸ் டைப் கார். 1939-ம் வருட மாடல். 'வாவ்... அப்ப டியே கொச்சின் வரை ஒரு டிரைவ் போயிட்டு வரவா?’ன்னு கேட்டாங்க. 'மவுன்ட் ரோடு தாண்டாது மேடம்!’னு சொல்லி காரைக் காப்பாத்தினோம்!  

 'காவலன்’, 'வேலாயுதம்’ காரணமா விஜய், 'மங்காத்தா’ வேலைகளால் அஜீத், 'அவன் இவன்’ ஷூட்டிங்கால் விஷால்... மூணு பேரும் வரலை. அடுத்த வருஷம் அவங்களையும் பிடிச்சுரலாம்!