Published:Updated:

நித்திக்கு சித்தி பையன் நான்!

எஸ்.கலீல்ராஜாபடங்கள் : பா.கந்தகுமார்

நித்திக்கு சித்தி பையன் நான்!

எஸ்.கலீல்ராஜாபடங்கள் : பா.கந்தகுமார்

Published:Updated:
##~##

''சாமி கெட்டப்ல திருவண்ணா மலையில் ஒரு கலாட்டா ட்ரிப்?''- ஐடியா சொன்ன தும் குதித்தோடி வந்துவிட்டார் சிங்கம்புலி. ''பறக்க வைக்குறது, புகார் கொடுக்குறதுனு சாமியாருகதான் பரபரப்பா இருக்காங்க. நாமளும் சாமிகளைப் பாத்து ஏடாகூடமா ஏதாவது கேட்கலாம்!'' என்றவர்... காவி வேட்டி, துண்டு, ருத்ராட்ச மாலை என்று  சாமியார் கெட்டப்போடு ஆட்டத்துக்கு ரெடி ஆனார்.

கிரிவலப் பாதையில் வானத்தைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார் பழநி சாமி. ''எதனால சாமியார் ஆனீங்க பாஸு?''- இது சிங்கம்புலியின் விசாரணை. ''என் சொந்த ஊரு திண்டிவனம். காடு, கழனியை வித்து புள்ளைங்களைப் படிக்கவெச்சேன். நல்லாத்தான் இருந்தாங்க. ஒரு பத்து ரூபா கேட்டதுக்கு கடைசிப் பையன் அசிங்கமாப் பேசிட்டான். 'என்னடா வாழ்க்கை?’னு வெறுத்திருச்சு. இங்கே கிளம்பி வந்துட்டேன். ஆறு மாசமாச்சு. இங்கே சாப்பாட் டுக்குக் கஷ்டம் இல்லை. எட்டு வேளை சாப்பாடு போடுறாங்க. சாமியார் ஆகிட்டேன்ல. இனிமே காசும் சேரும். எல்லாரும் ஓடி வருவாங்க. ஆனா, இனிமே நான் யாருக்கும் காசு தர்றதா இல்லை!''- சொல்லும்போதே சாமியின் கண்களில் 'ஒளிமய எதிர்காலப்’ பளபளப்பு. ''நீங்க எதுக்கு சாமி ஆனீங்க?''- சிங்கம்புலியிடம் கேட்டார் பழநி. ''ஆசாமியா இருக்கப் பிடிக்கலை. அதான் சாமி ஆகிட்டேன்!'' என்றார் சிங்கம்புலி. என்ன புரிந்ததோ, ''சரியாச் சொன்னீங்க'' என்றார் பழநி சாமி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நித்திக்கு சித்தி பையன் நான்!

மதுரையைச் சேர்ந்த கார்த்திகேய கனி, சடை முடியோடு சிரிக்கிறார். ''திருவண்ணா மலை எனக்கு நாலாவது இடம். 'உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்’னு அண்ணாமலையார்கிட்ட சொல்லிட்டேன். பொண்டாட்டி புள்ளைங்க, சொத்துலாம் இருக்கு. ஆனா, வாழ்க்கை என்பதே சிற்றின்பம்தானே. இறைவன் தொண்டே பேரின்பம் ஆச்சே. அண்ணாமலையாருக் குத் தொண்டு பண்றதால, பஸ்ஸுக்குக் காசு இல்லாதவங்களுக்கு, சாப்பிடக் காசு இல்லாதவங்களுக்கு உதவி பண்றேன். இந்தா நூறு ரூபா... நல்ல வீடியோ பஸ்ஸாப் பார்த்து ஏறிப் போ!'' என்று சிங்கம்புலியை அனுப்பிவைத்தார் கார்த்திகேய கனி.

''உன்னைப் பார்த்தா சாமி மாதிரி தெரியலையே... பளபளன்னு ஷேவ் பண்ணி இருக்கே. டிரெஸ் புதுசா இருக்கு. கார்ல வந்து இறங்குற!'' என்று ஒரு சாமி தாடை தேய்த்து டவுட் கிளப்ப, ''நான் நம்ம நித்திக்கு சித்தி பையன்!'' என்று சிங்கம்புலி சொல்ல, ''நமசிவாயம்!'' என அதிர்ச்சியாகி, அவரச அவசரமாக இடத்தைக் காலி செய்தார் அந்த சாமி.

நித்திக்கு சித்தி பையன் நான்!

இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் தெப்பக் கரையில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ''இங்கே பாருங்க... நான் தியானம் செஞ்சு அப்படியே வானத்துல பறக்கப்போறேன்'' என்று உதார்விட்டபடியே சிங்கம்புலி எம்பிக் குதிக்க, ''அப்படியே பறக்கும்போது, எங்களை ஸ்கூல்ல இறக்கி விட்டுடுங்க'' என்று அவரது தோள் பிடித்துக்கொண்டார்கள் மூவரும். ''இந்த வயசுலயே விவரமா இருக்கீங்களே. இனிமே சாமியாருக்கு எல்லாம் கஷ்ட காலம்தான்!'' என்றபடியே அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்தார் சிங்கம்புலி.  

வழக்கம்போல முத்துகிருஷ்ணன் என்கிற சாமியைக் கலாய்க்க அமர்ந்தார் சிங்கம்புலி. ஆனால், ''உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லவா? என் கண்ணுல மூணாவது திரை விலகிட்டு இருக்கு!'' என்று சிங்கம்புலிக்குக் கிலி கிளப்பினார் முத்துகிருஷ்ணன். ''ஏதாவது இலவசக் கண் மருத்துவ முகாம்ல காட்ட வேண்டியதுதானே!''- சிங்கம்புலி சொல்ல, ''நீங்க டுபாக்கூர் சாமியா? நான் சொன்னது அகம், புறம்னு ரெண்டு திரை. மாயம் மூணாவது திரை. அது விலகினா, பிரபஞ்சத்தின் எல்லா ரகசியமும் தெரியும். மூன்றாவது திரை விலகுறதுக்காக என் கண்களை, மின்சாரம், நெருப்பு இந்த ரெண்டுக்கும் நடுவுல போட்டுவெச்சிருக்கேன். கேமரா லென்ஸ் வழியா பார்த்தா கண்களில் நெருப்பு கங்கு மாதிரி தெரியும்!'' என்று இன்னும் டெரர் பில்டப் ஏற்றியவர், 'அவன்-இவன்’ விஷால்போல கண் இமைகளை 'அங்கிட்டும் இங்கிட்டுமா’கச் சுழற்றினார். ''சாமி, நீங்க கண்ணைச் சுத்துறீங்களோ இல்லையோ... எனக்குத் தலை சுத்துது!'' என்று எஸ்கேப் ஆன சிங்கம்புலி, படுத்துக்கிடந்த இரண்டு மூன்று சாமியார்களைச் சுற்றி உட்காரவைத்துக் கொண்டார்.

நித்திக்கு சித்தி பையன் நான்!

''வாழ்க்கையைப்பத்தி ஒரு வரியில பதில் சொல்லுங்க?''- சிங்கம்புலி கேட்க, ''சிவம் இல்லைன்னா சவம்!''- பட்டென்று பதில் சொன்னார் பாஸ்கரன்.

''சாமி, ரைமிங்டைமிங்ல  பின்றீங்களே. கடைசியா எப்போ சந்தோஷமா இருந் தீங்க?'' என்று சிங்கம்புலி கேட்க, ''எப்போ சோகமா இருந்தேன்னு தெரியலையே!'' என்றார்.

நித்திக்கு சித்தி பையன் நான்!

''ஏன் சாமியார் ஆனீங்க?'' என்ற கேள்விக்கு, ''ஒரு மனிதன் புல், பூண்டு, நாய், பேய், எலி, புலின்னு 84 லட்சம் தடவை பிறப்பு எடுப்பான். இதை இந்தியில ஸ்வராசி லேக் 84னு சொல்வாங்க. இந்தப் பிறவியோட முக்தி அடைஞ்சிரலாம்னு நினைச்சு சாமியார் ஆகிட்டேன். முடிவு தெரியலைன்னா, இதுதான் முதல் பிறப்பு. முடிவு தெரிஞ்சிருச்சுன்னா, இதுதான்கடைசிப் பிறப்பு. எது ஆரம்பம், எது முடிவுன்னு அவனே முடிவு செய்வான்!'' என்று சுப்ரமணி சொல்லி நிறுத்தி, சிங்கம்புலியை ஆழமாகப் பார்த்தார்.

மெரண்டு மெர்சலாகி 'சாமியார்’ வேடத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் சிங்கம்புலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism