Published:Updated:

எப்பவும் நான் ஹிட்டு... இப்போ போனாலும் துட்டு!

வடிவேலு பளிச்கவின்மலர்படங்கள் : வீ.நாகமணி

எப்பவும் நான் ஹிட்டு... இப்போ போனாலும் துட்டு!

வடிவேலு பளிச்கவின்மலர்படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
##~##

'ரகசிய விருந்தினர்’ என்று எதிர்பார்ப்புக் காத்திருப்புக்குப் பின், விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் முன் சடாரெனத் தோன்றினார் வடிவேலு. மாண வர்களிடையே ஆச்சர்ய அதிர்ச்சி அலை!  

 ''இம்புட்டு படிச்ச புள்ளைங்களைப் பார்த்தா, எங்க ஆத்தா ஆத்தாத்துப் போவா! 'யெய்யா வடிவேலு... அல்லாம் படிச்ச புள்ளைங்க... பாத்து சூதானமாப் பேசிக்கோ’னு என் காதைக் கடிக்கும். நான் நல்லாப் படிக்கலையேங்குற கவலை எனக்கு எப்பமும் உண்டு. ஒங்கள மாதிரி படிச்சவங்க நெறஞ்சிருக்கிற இந்த சபையில நிக்கவே எனக்குக் கூச்சமா இருக்கு. அதே சமயம், பெருமையாவும் இருக்கு. ஒரு பத்திரிகைக்காரன் சுட்டிக்காட்டுறதைப் பார்த்து, தப்பு பண்ணவன் திருந்தணும்... தற்கொலை பண்ணிக்கக் கூடாது. நீங்கள்லாம் தப்பு பண்ணினவன் திருந்துற மாதிரிதான் எழுதுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு. சரிப்பா... கேள்விகளைச் சட்டுபுட்டுனு கேளுங்க!'' என்று உற்சாகமாக மாணவர்களை எதிர்கொண்டார் வடிவேலு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்பவும் நான் ஹிட்டு... இப்போ போனாலும் துட்டு!

''அரசியல் ஆர்வம் காரணமாக சினிமாவில் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த இடைவெளி உங்களை வருத்தப்பட வைத்துள்ளதா?''

''ஒருத்தன் டாக்டருகிட்டப் போயி 'எனக்கு மனசு சரியில்ல... ஏதாச்சும் பண்ணி என்னைச் சரியாக்குங்க’னு கேட்டானாம். அந்த டாக்டரும் ரொம்ப அக்கறையா, 'பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடக்குது. அதுல ஒரு பஃபூன் வருவான். ரொம்பக் கோட்டிக்காரன். சேட்டைன்னா சேட்டை, உங்க வீட்டு சேட்டை... எங்க வீட்டு சேட்டை இல்லை. நல்லா விழுந்து விழுந்து சிரிக்கவைப்பான். சர்க்கஸுக்குப் போயி அவனை வேடிக்கை பாருங்க. உங்க கவலைகளைக் கொஞ்ச நேரமாச்சும்  மறந்து சிரிப்பீங்க’ன்னு சொன்னாராம். 'போயாங்கோ... அந்த பஃபூனே நாந்தான்!’னு சொன்னானாம் அந்த ஆள். அந்த பஃபூன் கதைதான் இப்போ என் னதும். இம்புட்டு நாள் நாட்டைச் சிரிக்க வெச்சுட்டு இருந்தேன். இப்பம் என் வீட்டைச் சிரிக்கவெச்சுட்டு இருக்கேன். வீட்ல கொஞ்சம் சுப காரியங்கள் இருக்கு. அதெல்லாம் முடிச்சுட்டுத் திரும்பி வருவான் இந்த வடிவேலு. ஒண்ணு சொல்றேன் கண்ணுகளா... சினிமாவுக்கு நான்தான் இடைவெளி விட்டுருக்கேன். சினிமா என்னை விடலை. சினிமாவுல எப்பவும் நான் ஹிட்டு... இப்போ போனாலும் துட்டு!''

எப்பவும் நான் ஹிட்டு... இப்போ போனாலும் துட்டு!

''  'உயிர்’ படம் வெளியான சமயம், அதை விமரிச்சு ரொம்பக் காட்டமா கருத்துத் தெரிவிச்சு இருந்தீங்க. ஆனா, 'கிரி’ படத்துல பேக்கரி காமெடியும் ஆபாசமாத்தானே இருந்துச்சு. நீங்க ஏன் அப்படி நடிக்கிறீங்க?''

''நீங்க சொல்றது சரிதான். அது கொஞ் சம் அதிகமாத்தான் இருந்தது. நானே விருப்பம் இல்லாம செஞ்ச ஸீன் அது. அப்பவே டைரக்டர்கிட்ட ஆபாசமா இருக்குன்னுதான் சொன்னேன். அதான் நான் சொன்னதும் அர்ஜுன் என்னைக் காறித் துப்புற மாதிரியும், 'கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேனோ’னு வசனம் வெச்சோம். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா, பிள்ளைங்களா... அந்த ஸீனுக்கு நீங்க சிரிக்கலைன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்? ஒவ்வொரு தியேட்டரும் அதிர்ந்து குலுங்குச்சே!''

''சினிமாவில் கோவை சரளாகிட்ட அடி வாங்குற மாதிரி, வீட்ல உங்க மனைவிகிட்ட அடி வாங்கி இருக்கீங்களா?''

''வாங்காம பின்னே! புருசனை அடிக்காத பொண்டாட்டி இந்த உலகத்துல இன்னும் பொறக்கலப்பா. அடி விழுந்தா, சும்மா மடேர் மடேர்னு விழும் பார்த்துக்கங்க. எல்லாம் வாங்கி முடிச்சுட்டு, அப்படியே பச்சப் புள்ள மாதிரி மூஞ்சியை வெச்சுக்கிட்டு, வராண்டாவுல இருக்குற வங்களை வெளியே கிளப்பிவிட்டுருவேன். வலி தாங்காமக் கத்துனா, யாருக்கும்கேட்கக் கூடாதுல!''

''உங்க ரோல் மாடல் யார்?''

''எனக்கு ரோல் மாடல்னு யாரும் கிடையாது. தங்கவேலு அண்ணன் காமெடி பிடிக்கும். கலைவாணர், சந்திரபாபுன்னா பார்த்துட்டே இருக்கலாம். நாகேஷ், சுருளிராஜன்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

எப்பவும் நான் ஹிட்டு... இப்போ போனாலும் துட்டு!

வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சார்லி சாப்ளின்னு எல்லாருமே எனக்குப் பிடிச்ச நடிகர்கள். எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் எனக்குள்ள இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆனா, இவங்கள்ல ஒருத்தர் மாதிரியும் என் நடிப்பு இருக்காது. எனக்கு மிமிக்ரி பண்ணவும் தெரியாது. புலிகேசி கேரக்டர்கூட 'உத்தமபுத்திரன்’ சிவாஜி ஐயாவோட இன்ஸ்பிரேஷன்தான். ஆனா, அதுல வடிவேலுதான் தெரிஞ்சு இருப்பான். நான் அதில் கவனமா இருப்பேன்!''

''நீங்க பேசுன நகைச்சுவை வசனங்களிலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது எது?''

''ககக போ!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism