Published:Updated:

அஜித்துக்கு வில்லன் ஆர்யா!

எம்.குணா

தீபாவளிக்கு வெடிக்க அதிர்வெடியாக ரெடியாகி நிற்கிறது 'ஆரம்பம்’. நாளுக்குநாள் அஜித் ரசிகர்களுக்கு ஃபீவர் ஏற்றும் 'ஆரம்பம்’ படத்தின் பேக்ரவுண்ட் டிரெய்லர் இங்கே...

•   'ஸ்வார்டு ஃபிஷ்’, 'டை ஹார்ட்’ போன்ற ஹேக்கர் தொடர்பான ஹாலிவுட் படங்களின் சாயலில் வந்திருக்கும் 'ஆரம்பம்’ படத்தின் உண்மையான வில்லன்.. ஆர்யா. படத்தில் அஜித்துக்கு இந்திய உளவு நிறுவனமான 'ரா’ அதிகாரி வேடமாம். இதற்காக ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரிகள் பலரைச் சந்தித்து, அவர்களது வொர்க்கிங் ஸ்டைலை கேட்டுத் தெரிந்துகொண்டு இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு வில்லன் ஆர்யா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  தமிழ்நாட்டுக்கு மட்டும் 2,500 பிரின்ட்டுகள் ரெடியாகி இருக்கின்றன. 'த்ரிஷாவின் காதலர்’ என்று கிசுகிசுக்கப்படும் ராணாவுக்கு படத்தில் முக்கிய கேரக்டர் என்பதால், தெலுங்கிலும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. தவிர, ஷாரூக்கானுடன் 'அசோகா’, கடந்த ஆண்டு வெளியான 'இங்கிலீஷ் விங்லீஷ்’ என இந்தி பக்கமும் அஜித்துக்கு சிறிய அறிமுகம் இருப்பதால், இந்தியிலும் படத்தை நேரடியாகவே வெளியிட இருக்கிறார்கள்.

•  அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி... என ஸ்டார் பட்டாளம் நிறைந்த 'ஆரம்பம்’ படத்தின் உரிமையை வாங்க முன்னணி தமிழ் சாட்டிலைட் சேனல்கள் போட்டிப்போட, கமுக்கமாக 15 கோடி ரூபாய்க்கு சாட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டது ஜெயா டி.வி.