Published:Updated:

மிஷ்கின் மிரட்டினாரா?

மிஷ்கின் மிரட்டினாரா?

மிஷ்கின் மிரட்டினாரா?

மிஷ்கின் மிரட்டினாரா?

Published:Updated:
##~##

''அப்போ நான் குட்டிப் பையனா இருந்தேன். இப்போ குட்டியா இருந்தாலும் கொஞ்சூண்டு பெரிய பையன் ஆயிட்டேன்!''- சிரிக்கிறான் அஸ்வத் ராம். இருக்காதாபின்னே? 'நந்தலாலா’ படத்தில் நடிக்கும்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த அஸ்வத், இப்போது ஐந்தாம் வகுப்பில். ஸ்கூல் டூர்போவ தாக டிமிக்கி கொடுத்துவிட்டு, புகைப்படத்தில் மட்டுமே பார்த்த அம்மாவைக் கண்டுபிடித்து, ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று கிளம் பும் அகி என்கிற அகிலேஷ்தான் அஸ்வத் ராம்!

''படத்தில் அவன் அம்மாவைப் பிரிஞ்சு ரொம்பக் கஷ் டப்படுவான். ஆனா, உண் மையில் ஷூட்டிங் சமயத் தில் அவனைப் பிரிஞ்சுநான் தான் மூணு மாசம் கஷ்டப் பட்டேன்!'' என்று சிரிக்கிறார் அஸ்வத் ராமின் அம்மா சுஜாதா. அப்பா சரவணன், கஜகஸ்தானில் இன்ஜினீயராக இருக்கிறார். ''மூணு மாசம் முழுக்க அவனோட அப்பா தான் அஸ்வத்தோடு இருந் தார். காலையில் எழுந்த தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை 'அஸ்வத் சாப்பிட்டானா?’, 'அஸ்வத் தூங்கி னானா?’, 'இப்போ தம்பி என்ன செய்றான்?’னு அவர்கிட்டே கேட்டுக்கிட்டே இருப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஸ்வத்துக்குச் சின்ன வயசுல இருந்தே நடிப்பில் ஆர்வம். நாங்க 2006-ல் சிங்கப்பூர்ல இருந்தோம். அப்போ அங்கே இருந்த தமிழ்ச் சங்கப் போட்டிகளில் ஆத்திசூடி ஒப்பிச்சு, பாரதியார் வேஷம் போட்டுப் பல பரிசுகள் வாங்கி இருக்கான்.

மிஷ்கின் மிரட்டினாரா?

சென்னை வந்ததும் 'ஆல்கெமிக்ஸ் கிட்ஸ் தியேட்டர்’னு குழந்தைகளுக்கான நாடகக் குழுவிலும் இருந்தான். மிஷ்கின் 'நந்தலாலா’வுக்காக ஒரு பையனைத் தேடுறார்னு கேள்விப்பட்டதும், அவரைப் பார்த்தோம். அஸ் வத்தைப் பார்த்ததும் அவருக்குப்பிடிச்சு போச்சு. 'ஏதாவது வசனம் பேசு’ன்னு சொன்னவுடனே, தாயோட இதயத்தைக் காதலிக்காக வெட்டி எடுத்துட்டுப் போற மகனோட கதையை அழகா நடிச்சுக் காட்டினான். மிஷ்கின்அசந்துட் டாரு!'' என்று சொல்லிக்கொண்டே போன சுஜாதாவை மறித்தது அஸ்வத் தின் குரல். ''அம்மா, என்னைக் கொஞ் சம் பேசவிடேன். அங்கிள் என்னைத் தான் பேட்டி எடுக்க வந்தார்!'' என்று மெலிதாக அதட்டி, 'நந்தலாலா’ அனு பவங்களை அடுக்கத் தொடங்கினான். ''அந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே! காதலி 'உன் அம்மாவோட இத யம் வேணும்’னு சொன்னவுடனே, அந்த கெட்ட பையன் தன் அம்மாவோட இதயத்தை வெட்டி எடுத்துட்டுப் போவான். போற வழியில் கல்லு தடுக்கி தடுமாறி விழப்போவான். 'மகனே, பார்த்துப் போ’னு அப்பவும் அம்மா வோட இதயம் துடிக்கும். அதைக் கேட்டு, மகன் கண் கலங்கிடுவான். அந்தக் கதையைத்தான் மிஷ்கின் அங்கிள்கிட்ட சொன்னேன். 'யூ ஆர் செலெக்டட்’னு சொல்லி, சாக்லேட் கொடுத்து அனுப்பிட்டார். அதுக்கு அப்புறம்தான் தெரியும், அது தாய்ப் பாசம் பத்தின கதைன்னு!'' என்று சொன்ன அஸ்வத்திடம், ''மிஷ்கின் மிரட்டினாரா?'' என்று கேட்டேன்.

''ச்சே... ச்சே..! அவருக்கு ரொம்பக் கோபம் வரும். அசிஸ்டென்ட் டைரக்டர்ஸைத்தான் திட்டுவாரு. ஆனா, அது கொஞ்ச நேரம்தான். கொஞ்ச நேரத்துல சிரிக்க ஆரம்பிச்சிடுவாரு.  ஆச்சர்யமான விஷயம், ஷூட்டிங்ல ஒருநாள்கூட என்னை அவர் திட்டினதே இல்லை. ஏன்னா, நான் தப்பே பண்ணலையே. சிரிக்காதீங்க அங்கிள்... சீரியஸாத்தான் சொல்றேன். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி 40 நாள் ரிகர்சல் பார்த்துட்டுத் தான் போனோம். என்னை மிஷ்கின் அங்கிள், 'ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்’னுதான் கூப்பிடுவார். நான் நடிச்ச மேக்ஸிமம் ஸீன்ஸ் ஒரே டேக்ல ஓ.கே ஆனது. அத னால லஞ்ச்ல சிக்கன் கேட்டாலும், ஐஸ்க்ரீம் கேட்டாலும் எனக்கு மட்டும் உடனே கிடைக்குமே!'' என்று சிரிக்கிறான் அஸ்வத்.

மிஷ்கின் மிரட்டினாரா?

''அக்டோபர் 23, 2008-ல் சத்தியமங்கலம் காட்டுக்குள் நடிச்சுட்டு இருக்கோம். 24-ம் தேதி அம்மாவுக்குக் குட்டிப் பாப்பா பிறந்திடுச்சுன்னு போன். நானும் அப்பாவும் உடனே கிளம்பி சென்னை வந்து அனன்யா பாப்பாவையும் மம்மியையும் பார்த்துட்டு, ராத்திரியே மறுபடி ஷூட்டிங் போயிட்டோம். எனக்கு ஷூட்டிங்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. மிஷ் கின் அங்கிளோட அசிஸ்டென்ட் டைரக் டர்ஸ், ஸ்நிக்தா ஆன்ட்டி, எனக்கு அம் மாவா நடிச்ச லீனா ஆன்ட்டி, லாரி டிரைவர் அங்கிள்... இப்படி நிறைய ஃப்ரெண்ட்ஸ். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்ட நான் இங்கிலீஷ் பேசற ஸீன்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் தியேட்டர்ல விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ஷூட்டிங்லதான் நான் முதல் தடவை லாரியில போனேன். செம ஜாலி. க்ளைமாக்ஸ்ல 'போடா மென்டல்’னு நான் சொல்ற ஸீன்ல உண்மையிலயே மிஷ்கின் அங்கிள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாரு. நானும்கூட அழுதேன். படத்தில் தலையைக் குனிஞ்சுகிட்டே நடிக்கணும்னு சொன்னப்போ, முதல்ல எனக்கு சிரிப்பு வந்துச்சு. பிறகுதான் 'உனக்குப் படத்தில் அம்மா இல்லைல்ல, அதான் சோகமா தலையைத் தொங்கப்போட்டிருக்கே’னு மிஷ்கின் அங்கிள் எக்ஸ்பிளைன் பண்ணாரு.

படம் ரெண்டு வருஷம் லேட் ஆனதுதான் எனக்கு, அப்பா, அம்மாவுக்குலாம் வருத்தம். பெரிய ஸ்க்ரீன்ல முதன்முதல்ல என்னைப் பார்க்கிறப்போ, எனக்கே சந்தோஷமா இருந்தது. ஆர்யா அங்கிள், டைரக்டர் பாண்டிராஜ் அங்கிள், சசி குமார் அங்கிள்னு எல்லோரும் பாராட்டினாங்க. ஷூட்டிங்குக்காகவே எங்க ஸ்கூல்ல லீவு கொடுத்து, எனக்குத் தனியா எக்ஸாம் நடத்துனாங்க. அவங்களுக்கும் தேங்க்ஸ்!'' என்று தெளிவாகப் பேசிய அஸ்வத்திடம், ''அடுத்தடுத்து படங்களிலே நடிப்பியா?'' என்று கேட்டேன்.

''நல்ல கதையா இருந்தா, நடிப்பேன்'' என்றான்.

பார்றா... பார்றா!

படங்கள் : என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism