Published:Updated:

தகப்பன்தான் முதல் ஹீரோ!

தகப்பன்தான் முதல் ஹீரோ!

தகப்பன்தான் முதல் ஹீரோ!

தகப்பன்தான் முதல் ஹீரோ!

Published:Updated:
##~##
''கூ
ட்டுக் குடும்பத்தை எவ்வளவு தூரம் மறந்துட்டோம் நாம்! தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை என்று முறை கொண்டாடி வந்தது நம்ம தலைமுறைக்கு மேலே யாருக்காவது ஞாபகம் வருமா? இதனால் எவ்வளவு இழந்திருக்கோம். வாழ்க்கையின் சாராம்சம் கூட்டிக் கழிச்சுப்பார்த்தா என்ன இருக்கும் சொல்லுங்க? அந்தக் குறையை நீக்குற மாதிரி மூணு தலைமுறை ஆட்களைவெச்சு ஒரு படம் எடுத்திருக்கோம். ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா, பிரபு - அனுபமா, ஆதி - பூர்ணான்னு மூணு ஜோடி. எல்லோரும் விரும்பி சந்தோஷமா பார்க்கக்கூடிய வாழ்க்கையை அவங்க வாழ்ந்து காட்டியிருக்காங்க!''- அமைதியாகச் சிரிக்கிறார் இயக்குநர் விஜய் பிரகாஷ். 'ஆடுபுலி’ படத்தின் இயக்குநர். தெலுங்கு வி.வி.நாயக்கின் சீடர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகப்பன்தான் முதல் ஹீரோ!

''இன்னும் முழு குடும்பத்துக்கான ரசிகர்கள் இருப்பதாக நம்புகிறீர்களா?''

தகப்பன்தான் முதல் ஹீரோ!

''நாம என்ன இப்போ வியாழன் கிரகத்துக்கா இடம் பெயர்ந்துவிட்டோம். இப்பவும் உறவுகள் பிரிஞ்சா கண்ணீர் வருது இல்லையா! எங்கோ கோவையில் அக்காவும் தம்பியும் கொல்லப் படும்போது, நாம சிந்துற கண்ணீருக்கு என்ன பெயர்? ஒவ்வொரு மனுஷனுக் கும் தகப்பன்தான் முதல் ஹீரோ. ஆனா, பாருங்க இப்ப எங்கே பார்த்தாலும் அப்பாவை காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க. ஒரு படத்துல அதுக்கும் மேலே போய், தூக்கிப் போட்டு மிதிக்குறாங்க. ஆழமா யோசித்து, நம் கனவில் இருக்கிற அப்பாவையும் மகனையும் காட்டி இருக்கோம். அழகான கூட்டுக் குடும்பத்தில் இருந்து எதிர்பாராமல் விலக நேரிடுகிற ஆதி, மீண்டும் எப்படிச் சேர்ந்தார்ங்கிறது கதை. 'வருஷம் 16’ படத்தைக் கைதட்டி

தகப்பன்தான் முதல் ஹீரோ!

ரசிச்சஎல்லோரும் 'ஆடுபுலி’ ஆட்டத்தையும் நிச்சயம் ரசிப்பாங்க!''

''ஆனா, ஆதிக்கு ஹீரோவா முரட்டுத்தன இமேஜ்தானே இருக்கு?''

''அதான் 'ஈரம்’ படத்திலேயே அந்த வேஷத்தைக் கலைச்சுட்டாரே. 'மிருகம்’ல அவர் நின்னது அசல் மிருகம் மாதிரியே இருந்தது. 'ஈரம்’ல பார்த்தது கனகச்சிதமான போலீஸ் அதிகாரி. 'அரவான்’ படத்தில் எருமை மேலே அவர் ஏறி நிற்கிறதைப் பார்த்தாலே கதி கலங்கலையா? நிச்சயம் ஆதி இன்னும் மிளிர்வார்!''

''பூர்ணாவுக்கு நல்ல கேரக்டரா... இல்லை, பழக்கமான டூயட் தோழியா?''

''படத்தின் இளமை டிபார்ட் மென்ட்டுக்கு அவங்கதான் பொறுப்பு. கொஞ்சநஞ்சம் இருந்த மலையாள வாடை யும் போய், சுந்தரத் தமிழில் பின்றாங்க. ஏதோ நயன்தாரா, அசின், அமலா, பூர்ணான்னு மலையாளக் கிளிகள்தான் தமிழ் சினிமாவைக் காப்பாத்திட்டு வர்றாங்க. தமிழ்ப் பெண்கள் நடிக்கவே மாட்டோம்னு இருக்காங்களே, என்ன செய்ய?!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism