Published:Updated:

சொல்லாத காதல்!

சொல்லாத காதல்!

சொல்லாத காதல்!

சொல்லாத காதல்!

Published:Updated:
##~##
மிழ் சினிமாவில் புதிய முயற்சிகள் கனிந்திருக்கும் காலம் இது! ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழும் திருநங்கை களின் வாழ்க்கைப் போராட்டத்தை 'நர்த்தகி’ என்ற பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய பத்மா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'புன்னகைப்பூ’ கீதாவின் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில், பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளின் பங்களிப்புடன்  பிரமாதமாக வந்துள்ளது. தமிழ், இந்தி இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ்!'' - உற்சாகமாகப் பேசுகிறார் விஜய பத்மா.

கதை: ''மாமன் மகனைக் காட்டி,  'இவன் உனக்குத்தான்’ எனச் சொல்லிச் சொல்லியே வளர்க்கப்படும் பெண் அவள். ஒரு கட்டத்தில், மாமன் மகனுக்கும் காதல் வருகிறது, இவள் மீது அல்ல; இன்னோர் ஆண் மீது. ஏனெனில், அவன் தன்னைமன ரீதியாக ஒரு பெண்ணாக உணர்கிறான். இதை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில், தனது நெருங்கிய தோழி என அவன் கருதும் மாமன் மகளிடமே விஷயத்தைச் சொல்கிறான். அதுவரை தான் மனதில் காதலித்த மாமன் மகன் ஓர் ஆண் அல்ல என்பதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? இந்தச் சமூகம் என்ன செய்கிறது? அந்தத் திருநங்கையின் வாழ்க்கை எப்படி சுழற்றி அடிக்கப்படுகிறது என்பதை யதார்த்தமும் நகைச்சுவை யும் கலந்து சொல்லி இருக்கிறோம்!''

சொல்லாத காதல்!

குத்துப் பாட்டு: ''மனதளவில் பெண்ணாக உணரும் திருநங்கை, உடல் அளவிலும் பெண்ணாக மாற்றம் பெறுவதன் உச்சமாக 'நிர்வாண பூஜை’ என்று ஒன்று நடத்துவார்கள். இந்த பூஜைக்காக 100

சொல்லாத காதல்!

திருநங்கைகளை வரவழைத்தோம். ஷூட்டிங் குக்காக என்றாலும்கூட, சிறிய சடங்கைக்கூடப் பொய்யாகச் செய்யவில்லை அவர்கள். பாடலின் உள்ளடக்கம் அவர்களின் வலியைப் பேசும். ஆனால், அப்படி ஒரு குத்துப் பாட்டைச் சமீபத்தில் யாரும் கேட்டு இருக்க முடியாது!''

கொண்டாட்டம்: ''ஆற்றங் கரையில் பிறந்து, கடலோர நகரத்துக்குத் துரத்தி அடிக்கப்பட்டு, மறுபடியும் ஓர் ஆற்றங் கரையில் வசிக்க நேரும் ஒரு திருநங்கையின் இந்தக் கதையில், தண்ணீர் ஒரு பாத்திரமாகவே வருகிறது.

நேற்றைப்பற்றிய கவலைகள் இல்லாமல், நாளை பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் 'இந்தக் கணத்தை வாழ்வது’ என்றால், அது திருநங்கைகள் மட்டும்தான். அந்தக் கொண்டாட்டத்தை 'நர்த்தகி’ யின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் காணலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism