Published:Updated:

“அப்பாதான் எனக்கு பெரிய சவால்!”

எம்.குணா

“அப்பாதான் எனக்கு பெரிய சவால்!”

எம்.குணா

Published:Updated:
##~##

படத்தில் சிம்பு ஹீரோ கிடையாது; ஆண்ட்ரியா ஹீரோயின் கிடையாது. ஆனால், 'இங்கே என்ன சொல்லுது’ பட ஸ்டில்களில் இருவரிடையே அவ்வளவு அன்னியோன்னியம்!  

''எப்பவும் மீடியா கவனத்திலேயே இருக்கணும்னுதான் தனுஷ§டன் மோதல், ஹன்சிகாவுடன் காதல்னு நீங்களே ஏதாவது பரபரப்பு கிளப்பிவிடுறீங்களா?'' - முதல் கேள்வியிலேயே 'ஆங்ரி பேர்ட்’ ஆகிவிட்டார் சிம்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பிரதர்... அது ஏன் என்கிட்ட மட்டும் இந்தக் கேள்வியைக் கேக்கிறீங்க? என்னைப் பத்தி தினமும் தலைப்புச் செய்தி ஓடிட்டு இருக்கா என்ன? ஆறு வயசுக் குழந்தையா இருக்கிறப்பவே 'எங்க வீட்டு வேலன்’ படத்துல நடிச்ச காசுல, இந்திய அரசாங்கத்துக்கு இன்கம்டாக்ஸ் கட்டினவன் நான். 'காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோவா அறிமுகமான வரைதான் 'டி.ராஜேந்தர் மகன்’னு எனக்கு ஒரு அடையாளம் இருந்தது. அதுக்கு அப்புறம் அந்த அடையாளத்தை நான் பயன்படுத்தியதே இல்லை. 'சிம்பு’ மட்டும்தான் என் விசிட்டிங் கார்ட்!

சினிமாவில் என் மேல் அன்பு காட்டினவங்களைவிட, அம்பு விட்டவங்கதான் ஜாஸ்தி. என்னைக் கிண்டலடிச்ச மாதிரி இதுவரை எந்த நடிகரையும் மீடியா விமர்சிச்சது இல்லை. 'அந்த நடிகையோட சுத்துறேன்... அவங்க அக்காவோட சுத்துறேன்’னு ஏதோ பிளேபாய் ரேஞ்சுக்கு கேவலப்படுத்தினாங்க. 'சிம்புவா..? அவன் திமிர் பிடிச்சவன் ஆச்சே! நம்பினவங்க வாழ்க்கையை அழிச்சுடுவானே’னு அவதூறு கிளப்பிக் காலி பண்றாங்க. 'நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணேன்?’னு இப்போ வரைக்கும் எனக்குப் புரியலைங்க!''

“அப்பாதான் எனக்கு பெரிய சவால்!”

''உங்களால் ஷூட்டிங் தாமதமாகுது, மத்தவங்க கால்ஷீட்டும் வீணாகுதுனு வர்ற புகார்களில் உண்மை இல்லைனு சொல்றீங்களா?''

''ஏங்க... நான் நடிச்சு எப்போ கடைசியா படம் ரிலீஸ் ஆச்சுனு எனக்கே மறந்துபோச்சுங்க. இந்த வயசுல கடகடனு படம் பண்ணாம ஆறு மாசத்துக்கு ஒரு படம் பண்றது என் கேரியருக்கு நல்லதானு நீங்களே சொல்லுங்க! என் படத்தைத் தயாரிக்கிறவங்க, சரியா பிளான் பண்ணாம சொதப்பிட்டு, எல்லாப் பழியையும் என் மேல் போடுறாங்க. படப்பிடிப்பு நடத்த பணம் இல்லாத புரொடியூசர்ஸ், அவங்க பிரச்னையை மறைச்சு, 'சிம்பு ஷூட்டிங்குக்கு வரலை, அதனாலதான் ஷூட்டிங் கேன்சல் ஆச்சு. இதனால புரொடக்ஷனுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்’னு கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம சொல்றாங்க. இப்படி நான்தான் மத்தவங்களை நம்பி நிறைய ஏமாந்திருக்கேன். அதனால், இப்போ என் அப்பாவோட தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் தயாரிச்சு நடிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இந்தப் படம் எவ்வளவு சீக்கிரம் முடியுதுனு பாருங்க. அப்புறம் என் மேல குத்தம் சொன்ன எல்லார்கிட்டயும் வெச்சுக்கிறேன் கச்சேரியை!''

“அப்பாதான் எனக்கு பெரிய சவால்!”

''விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விமல், சிவானு ஏகப்பட்ட ஹீரோக்கள் உருவாகிட்டாங்களே... இவங்கள்லாம் இருக்கிறப்ப, 'சிம்புவை மிஸ் பண்றோம்’னுகூட நினைக்கத் தோணலையே?''

''நீங்க குறிப்பிட்ட ஹீரோக்கள் நடிச்ச எல்லாப் படங்களையும் பார்த்துட்டுதான் இருக்கேன். அந்த லிஸ்ட்ல என் மனசுல இடம் பிடிச்சவர் விஜய் சேதுபதி மட்டும்தான். ஒவ்வொரு படத்துலயும் ஏதோ ஒண்ணு வித்தியாசமா பண்ணி ஸ்கோர் பண்ணிடுறார். எடுத்துவெக்கிற ஒவ்வோர் அடியையும் நின்னு நிதானமா வெக்கிறார். அது அழுத்தமா இருக்கு. முக்கியமா, சினிமா உலகத்தோட இன்னொரு முகத்தை தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு நடிக்கிறார். சினிமால நிறையப் பேர், திறமை, உழைப்பு எதுவுமே இல்லாம, ஒரு படம் ஓடினதும் தலைகீழா ஆடுறாங்க; சில பிரபலங்களோட சேர்ந்து லாபி பண்ணிட்டு தன் தகுதிக்கு மீறி ஆடுறாங்க; விளம்பரம் பண்ணிக்கிறாங்க. ஆனா, இங்கே எப்பவும் திறமை, உழைப்பு மட்டும்தான் நிலைச்சு நிக்கும். அது இல்லாதவங்க எவ்வளவு சீக்கிரம் மேலே வந்தாங்களோ, அதைவிட வேகமாக் கீழே விழுந்துடுவாங்க!''

“அப்பாதான் எனக்கு பெரிய சவால்!”

''உங்க தம்பியும் சினிமாவுக்கு வந்துட்டார். ஆனா, இன்னும் உங்க அப்பா டி.ஆர். முமைத்கானோட டான்ஸ், டி.வி. ஷோ டான்ஸ்னு நின்னு விளையாடுறாரே!''

'' 'ஆர்யா சூர்யா’வில் அப்பா ஆடினது செம டான்ஸ். என்னால அவர் வயசுல இந்தளவுக்கு எனர்ஜியா ஆட முடியுமானு தெரியலை. என்னை வெறுப்பேத்தணும்னே, அடாவடி ஸ்டெப்ஸா போடுறார். அவரைச் சமாளிச்சுட்டாலே, வேற எந்த ஹீரோவையும் நான் சமாளிச்சிருவேன்!''

'' 'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்’னு சொல்வாங்க... நீங்க வீட்டைக் கட்டிட்டீங்க... எப்போ கல்யாணம்?''

''தங்கச்சி இலக்கியாவுக்கு வரன் கிட்டத்தட்ட கன்ஃபர்ம். சீக்கிரம் டேட் சொல்லிருவோம். அப்புறம் என் மனசுக்குள்ள எப்போ, 'டேய் சிம்பு தாலியைக் கட்டுடா’னு குரல் கேக்குதோ, அடுத்த நிமிஷமே டும் டும்தான்!''