Published:Updated:

“ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு!”

க.நாகப்பன், படம்: பொன்.காசிராஜன்

“ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு!”

க.நாகப்பன், படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

 ''படம் ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் எனக்கு அலாரம்தான். வாரா வாரம் அலாரம் சவுண்ட் என்னை விரட்டிட்டே இருக்கு!'' - உற்சாகமாகப் பேசுகிறார் விஷால்.

'' 'பாண்டிய நாடு’ படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்க ரொம்ப சிரமப்பட்டேன். இப்படி ஒரு கேரக்டர்ல நடிப்பது எனக்குப் புதுசு. 'அவன் இவன்’ல பெண் வேடத்துல ஒரு பாட்டுக்கு நடிக்கும்போதுகூட அவ்ளோ கஷ்டப்படலை. என்னடா, இவ்ளோ பில்ட்-அப் கொடுக்கிறேன்னு யோசிக்கிறீங்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதைப்படி, சண்டைக் காட்சிகள்ல நான் ஷோல்டர் விறைக்காம, முஷ்டி முறுக்காம சும்மா நிக்கணும். என் கேரியர்ல ஆக்ஷன் காட்சிகள்ல அப்படி நான் வெறுமையா நின்னதே இல்லை. ஒரு பதட்டத்தோடவே நிக்கணும். எந்த ஒரு பொருளை கையில எடுக்கும்போது நம்பிக்கையே இல்லாம எடுக்கணும். இப்படி நான் நடிச்சதே இல்லை. ஒரு வாரம் டைம் எடுத்துக்கிட்டு, மனசுல இருந்த ரெகுலர் விஷயங்கள் எல்லாத்தையும் அழிச்சுட்டு, புதுசா நடிச்சிருக்கேன். அப்படிப் பார்த்தா, 'பாண்டிய நாடு’ எனக்கு இன்னோர் அறிமுகம்னு சொல்லலாம்!''

“ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு!”

''நீங்க, 'ஜெயம்’ ரவி, ஜீவானு உங்க செட் ஹீரோக்கள் எல்லாமே ஹிட் கொடுக்க முடியாமல் சிரமப்படுறீங்களோ!''

''சினிமால வெற்றிக்குனு எந்த ஃபார்முலாவும் இல்லை. எல்லாரும் ரிஸ்க் எடுத்துத்தான் உழைக்கிறோம். சில சமயம் அதுக்கான பலன் கிடைக்கும்; சில சமயம் கிடைக்காது. ஷூட்டிங் நடக்கிறப்ப, அதை பங்க் பண்ணிட்டு நாங்க ஊர் சுத்தலையே. அப்படிச் சுத்தினா, நீங்க தப்பு சொல்லலாம். நாங்க எங்க வேலைகளில் சின்சியரா இருக்கோம். கார்த்தி, ஆர்யானு எல்லாருமே நண்பர்களா இருந்தாலும், படத்தின் மேக்கிங், எங்க உழைப்பு மேல நம்பிக்கை வெச்சு, ஒரே சமயத்தில் நாங்க நடிச்ச படங்களை ரிலீஸ் பண்றோம். எல்லார் படங்களும் ஹிட் ஆகணும். அதுதான் எல்லாரோட ஆசையும்!''

“ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு!”

'' 'விஸ்வரூபம்’ பிரச்னைல குரல் கொடுத்தீங்க.. ஆனா, 'மதகஜராஜா’ ரிலீஸ் பிரச்னையில் உங்களுக்கு ஆதரவா யாரும் வரலைனு வருத்தம் இல்லையா?''

'' 'மதகஜராஜா’ விஷயத்துல கடவுளே வந்து குரல் கொடுத்திருந்தாலும், ஒண்ணும் நடந்திருக்காது. அரசியல் தலையீடு, தடைனு அந்தப் படத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே! அது ஒரு தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்னை. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தோட பிரச்னைக்கு யார் குரல் கொடுக்க முன்வந்திருந்தாலும், வேணாம்னு சொல்லியிருப்பேன். ஒரு ஹீரோவா, படத்தை ரிலீஸ் பண்ண முடிஞ்ச அளவுக்கு முயற்சிகள் பண்ணிப்பார்த்தேன். ஆனா, முடியலை. ஒண்ணு மட்டும் சொல்வேன், 'மதகஜராஜா’ எப்போ ரிலீஸ் ஆனாலும் சக்சஸ் ஆகும்!''

''நடிகர் சங்கப் பிரச்னைகள் என்ன ஆச்சு?''

''எனக்கு யாருடைய நாற்காலியும் தேவை இல்லை. நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப்போறதும் இல்லை. 'நான் தூண்டிவிடுறேன். தனி அணியை உருவாக்கப்போறேன்’னு திட்டுறாங்க. நிஜமா நான், நடிகர் சங்கத்தைப் பத்தி வருத்தப்படும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவன். ஃபிலிம் சேம்பருக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் சொந்தமா பில்டிங் இருக்கு. ஆனா, நடிகர் சங்கத்துக்கு பில்டிங் வேணும்னு கேட்கிறேன், அவ்ளோதான். இதில் நான் எந்த அரசியலும் பண்ணலை. கேள்வி கேட்டதுக்குப் பதில் கிடைச்சது. அது செயல்பாட்டுக்கு வர்ற வரைக்கும் கேள்வி கேட்பேன். அவ்வளவுதான்!''