பாலிவுட் கான்களின் செல்ல மான்... அசின்!

'கஜினி’க்குப் பிறகு சல்மானு டன் அசின் ஜோடி போட்டு ஆடிய 'ரெடி’ பாக்ஸ் ஆபீஸில் வெடி வெடிக்கும் உற்சாகம் அசினிடம் தெரிகிறது...

''ஹாய்... எப்படி இருக்கீங்க?''

''சூப்பர்! பாலிவுட்ல ரெக்கார்ட் பிரேக் கலெக்ஷன் சினிமா வரிசையில் 'கஜினி’, 'ரெடி’ ரெண்டு படங்களும் டாப் 5 இடங்களுக்குள் இருக்கு. இந்தியிலும் என் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகிறதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன். அப்புறம், தமிழ்நாடு எப்படிப்பா இருக்கு. ஐ மிஸ் சென்னை!''

''தமிழ்ல 'காவலன்’ நடிச்சீங்க... சல்மான் உங்க ஃப்ரெண்ட். அவர்கூட இந்தி ரீ-மேக் 'பாடிகார்ட்’லயும் நீங்களே நடிச்சு இருக்கலாமே?''

''சல்மானோடு 'லண்டன் ட்ரீம்ஸ்’, 'ரெடி’ன்னு ரெண்டு படங்கள் தொடர்ந்து பண்ணியாச்சு. தொடர்ந்து நடிச்சா, ரசிகர்களுக்கு காம்பினேஷன் போர் அடிச்சிரும். அதான் குட்டி பிரேக். திரும்பவும் சேர்ந்து நடிப்போம்!''

''இந்தி ஹீரோக்களைப்பத்திச் சொல்லுங்க?''

''இந்தி சினிமாவில் என்னைப் பிரமிக்கவைக்கிறவர் அக்ஷய் குமார். அங்கே எல்லா ஹீரோக்களும் 10 மணிக்கு மேலதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. ஆனா, அக்ஷய் 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார். அவ்வளவு சின்சியர்!''

''தமிழ் சினிமாவுக்குத் தொடர்ந்து தேசிய, சர்வதேச அங்கீகாரங்கள் கிடைச்சுட்டு வருது. ஆனா, நீங்க என்னமோ 'நல்ல கதை அமைஞ்சாதான் நடிப்பேன்’னு சொல்லிட்டே இருக்கீங்க. ஏன், எதுவும் அமையலியா?''

''நல்ல கதை மட்டும் கிடைச்சாப் போதாது. அதில் என் கேரக்டர் எப்படி இருக்குன்னு பார்க்கணும். யார் ஹீரோ, எந்த புரொடியூசர்ங்கிறதும் முக்கியம். புரொடியூசர் சரி இல்லைன்னா, படம் பாதியிலேயே நின்னுடும். பிரேக் விழுந்திருச் சுங்கிறதுக்காக, ஏதேதோ படங்களில் நடிச்சு, நம்ம இமேஜை டேமேஜ் பண்ணிக்க முடியாது!''

''உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கே. நீங்கள் ஏன் பாடக் கூடாது?''

''தேங்க்ஸ்! கே.எஸ்.ரவிக்குமார் சார் 'தசாவதாரம்’ படத்துல 'முகுந்தா முகுந்தா’ பாட்டை என்னைத்தான் முதல்ல பாடச் சொன்னார். 'கஜினி’ படத்திலும் 'ரஹத்துல்லா’ பாட்டை முருகதாஸ் பாடச் சொன்னார். ஆனா, இப்போதைக்கு நடிப்பில் மட்டும்தான் கவனம். பாடுறதுல்லாம் அப்புறம்!''

''எப்போ பார்த்தாலும் மொபைல்ல சாட் பண்ணிட்டே இருக்கீங்க. கிட்டத்தட்ட அதுக்கு அடிக்ட் ஆகிட்டீங்கன்னு நியூஸ் வருதே?''

''பாலிவுட்ல பாப்புலரா இருந்தா, தினம் ஒரு கிசுகிசு வரும். ஸோ... நான் பாப்புலரா இருக்கேன்னு அர்த்தம். ரொம்ப சந்தோஷம்!''

''அப்புறம் எப்போ கல்யாணம்?''

''நல்லாத்தானே பேசிட்டு இருக்கேன். காதல்பத்தியும் யோசிக்கலை. கல்யாணம்பத்தியும் யோசிக்கலை. நான் இப்போதைக்கு சிங்கிள்!''