என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

நடிகைகளை குறை சொல்லாதீங்க!

இர.ப்ரீத்தி,படம் : ஜி.வெங்கட்ராம்

##~##

ஸ்ரேயா... எங்கேப்பா? ''இங்கேதான்ப்பா!''  என 'ரௌத்திரம்’ மூலம் மீண்டும் தமிழில் தலை காட்டுபவருடன் சாட் செய்ததில் இருந்து...  

 ''என்ன... ஆளையே காணோம்?''

''சும்மா சொல்லலை. தெலுங்கு, ஆங்கிலம்னு பிஸியா நடிச்சுட்டு இருக்கேன். எந்த மொழியிலும் பெர்ஃபார்ம் பண்ணும் டேலன்ட் இருக்கு எனக்கு. அதான்  தமிழ்ப்பக்கம் வர முடியலை!''  

'' 'ரௌத்திரம்’னு தலைப்பே மிரட்டுதே... இந்தப் படத்திலாவது உங்க கேரக்டருக்கு வெயிட்டேஜ்இருக்குமா?''

''நிச்சயமா! இது, சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை.  படத்தில் ஜீவா ஒரு வக்கீல். நான் லா காலேஜ் ஸ்டூடன்ட். தினமும் நியூஸ் பேப்பர்ல படிக்கிற விஷயங்களை ஸ்க்ரீனில் பெர்ஃபெக்ட்டா கொண்டுவந்திருக்கார் இயக்குநர் கோகுல். சென்னையின் ரியல் டெரர் ஸ்பாட்களில்தான் ஷூட் பண்ணாங்க. சென்னை இவ்வளவு சென்சிட்டிவ்வான சிட்டியானு ஆச்சர்யமா இருந்துச்சு!''  

நடிகைகளை குறை சொல்லாதீங்க!

''இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்பி பொம்மை மாதிரியே வந்துட்டுப் போறதா ஐடியா?''

''திறமை இல்லைன்னா, சினிமாவில் யாராலும் நிலைச்சு நிக்க முடியாது. 'மிட் நைட் சில்ரன்’ படத்தில் என்னை ஒரு சேரிப் பொண்ணு மாதிரி மாத்தி இருக்காங்க தீபா மேத்தா. ஒரு நடிகையின் திறமையை சரியாப் பயன்படுத்துறது இயக்குநர்களின் கையில்தான் இருக்கு. அதனால் இனிமே நடிகைகளை மட்டும் குறை சொல்லாதீங்க!''

'' 'ஒஸ்தி’ படத்துல நயன்தாரா மறுத்த 'அயிட்டம் ஸாங்’கில் இப்ப நீங்கதான் சிம்புகூட ஆடுறீங்களா?''

''இல்லை. அது ஃபால்ஸ் நியூஸ்.  அந்தப் படத்தில் ஆடச்சொல்லி சிம்பு என்னிடம் பேசவில்லை!''