என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!

நா.கதிர்வேலன்

##~##

''சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது. இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''- நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன்.

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!

 ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?''

'' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசையும். தென்னிந்தியாவே தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு இருந்த காலகட்டம் அது. இந்து சமுத்திரத்தின் கரையில் அமைந்து இருந்த சேர தேசத்தில்தான் போர்ச்சுக்கீசிய கப்பலோட்டி வாஸ்கோடகாமா வந்து சேர்ந்தார். காவிய நாயகனாகவும், கடல் வழி மார்க்கம் கண்டுபிடித்த மகானாகவும் நாம் போற்றும் வாஸ்கோடகாமாவின் உண்மையான முகம் வேறு மாதிரியானது. அவரது நோக்கம், ஆரம்பத்தில் வாணிபம்தான். அரேபியர்களும் சீனர்களும் நம்மிடம் கையேந்தி நின்ற காலம் அது. இன்று வளைகுடா தேசத்தில் எண்ணெய்க்கு என்ன மதிப்போ, அதுபோல அன்று நம் தேசத்தின் மிளகுக்கு மதிப்பு இருந்தது. ஒரு பிடி மிளகுக்காக இந்தியா அடிமை தேசம் ஆன வரலாறுதான் இந்த 'உருமி’. 15-ம் நூற்றாண்டில் நாம் எதிர்கொண்ட அடக்குமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. அன்று இருந்த அந்நியர் வடிவில் இன்று பல இந்தியர்களே இருக்கிறார்கள். அந்நிய முதலீடுகளுக்காக நாட்டைக் காவு கொடுக்கிறோம். நாடு அந்நிய சக்திகளுக்கு அடைக்கலமாகிவிட்டது. இந்த நேரம்தான் இந்த சினிமாவுக்கான அவசியம் என்று நினைத்தேன். மாற்றம் தேடும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் இந்த 'உருமி’!''

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!

''ஆர்யா, பிரபுதேவா, பிரித்விராஜ், ஜெனிலியா, வித்யாபாலன்னு பெரிய கூட்டணியை எப்படிப் பிடிச்சீங்க?''

''எல்லோருமே என் நண்பர்கள். எனக்காக எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க. அடர்ந்த காடுகளில், வசதி

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!

இல்லாத இடங்களில் தங்கினாங்க. ஜாலியா வந்துட்டுப் போற ஜெனிலியா, நாலு வாரம் குதிரைஏற்றம், வாள் பயிற்சி கத்துக்கிட்டார். இப்படி எல்லாருமே படத்துக்காகக் கஷ்டப்பட்டு இருக்காங்க. தமிழ் சினிமாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. அதன் முதல்கட்டம்தான் 'உருமி’!''

''நீங்கள் 'சிலோன்’ படத்தை இயக்குவது எந்த அளவில் இருக்கிறது?''

''நிச்சயமாக 'சிலோன்’ படத்தை இயக்குவேன். எனக்கான கனவுப் படம். இது போராளிக் குழுக்களின் கதையோ, புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பதிவோ அல்ல; மூன்று சிவிலியன்கள்பற்றிய எனது பார்வை. அந்த சினிமாவுக்காக நீண்ட காலமா உழைச்சுட்டு இருக்கேன்!''