Published:Updated:

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Published:Updated:
##~##

ரு மலைக் கிராமத்து மக்களின் பாசத்தை சம்பாதித்துவைத்திருக்கும்  அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது 'கொலையாளி’ முத்திரை விழுகிறது. 'யார் உண்மையான கொலையாளி?’ என்ற பதில் தேடும், 'ஜன்னல் ஓர’ப் பயணம்!

பழநி டு பண்ணைக்காடு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன், நடத்துநர் விமல். ஊரின் மரியாதைக்குரிய பிரமுகர் ராஜேஷின் மகனை, விமல் ஒரு விபத்தில் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறை செல்கிறார். அந்த மர்மத்தின் முடிச்சை ஓட்டுநர்-நடத்துநர் கூட்டணி எப்படி அவிழ்க்கிறது என்பதே மீதிக் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலையாளத்தில் ஹிட் அடித்த, 'ஆர்டினரி’ படத்தை அப்படியே ஜன்னல் ஓரப் பார்வையாகத் தந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். மலையாள வெர்ஷனை அப்படியே ரீமேக்காமல், தமிழ்நாட்டு அரசியல் சூழல், மின்வெட்டு, பேசாத பிரதமர் என டாபிக்கல் டச் சேர்த்த வகையில் ஜாலியாகப் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.

'ரேடியேட்டர் சூடா இருக்கு. தண்ணி ஊத்திட்டு வந்துறேன்’ என்று சலம்பும் பார்த்திபன், முதல்முறை நடத்துநர் விமல், 'எனக்காக ஆபீஸர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க’ என்று உதார்விடும் மனீஷா, காலையில் பட்டை பூசும், மாலையில் 'பட்டை’ போடும் கிருஷ்ணமூர்த்தி,

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

'எனக்கு வேலை செஞ்சா வியர்க்கிற வியாதி’ என்று திரியும் சிங்கம்புலி, முரட்டு முன்கோபி விதார்த், காதல் வழியக் காத்திருக்கும் பூர்ணா, 'அடக்க அமைதி’ ரமணா, 'டூல்ஸ் கிட்’ சந்தானபாரதி என பிரத்யேகக் குணாதிசயங்களுடன் வரும் கதாபாத்திரங்களே படத்தின் பலம்.

பெண்களைப் பார்த்தால் உதார் கியர் தட்டுவதும், தங்கையைப் பற்றி நினைத்தால் மெல்ட் ஆவதுமாக பாத்தி கட்டி விளையாடி இருக்கிறார் பார்த்திபன். முதல் ட்ரிப்புக்கு முன் கண்ணாடியில், 'டிக்கெட்... டிக்கெட்’ என்று ரிகர்சல் பார்த்துச் சிரிக்கவைக்கும் விமல், கொலையாளி முத்திரைக்கான பரிதவிப்பின்போது பரிதாபப்படவும் வைக்கிறார்.

'ஆத்துல தண்ணி வரலைன்னா, இந்த டிரைவர் மெடிக்கல் லீவு போட்டுட்டுப் போயிருவாரு’, 'எந்த நல்ல காரியம் பண்ணும்போதும் பிராந்தி குடிக்கணும்னு என் அப்பா சொல்லியிருக்கார்’ என்று பிராந்திக்கு அடிபோடும் சிங்கம்புலியிடம், 'பிராந்தி குடிக்கிறதே நல்ல காரியம்தான். அதனால அதை யாருக்கும் கொடுக்காதேனு எங்கப்பா சொல்லியிருக்காரு’ என்று பார்த்திபன் சதாய்ப்பது என பல சந்தர்ப்பங்களில் காமெடி காம்போ வசனங்கள் களை கட்டுகின்றன.

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

ஆனால், என்னதான் கிராமமாகவே இருந்தாலும், அந்த நாலைந்து கேரக்டர்கள் மட்டுமே உலாத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்களா என்ன? ஒரு நண்டு, சிண்டுகூட ஸ்க்ரீனில் காணேமே பாஸ்?  

சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில், 'இவர்தான் அவராக இருக்குமோ’ என்று நம்மை நம்பவைத்து ஏமாற்றுவதற்காகவே ஒரு கேரக்டர் இருக்கும். அந்த க்ளிஷே இதிலும் உண்டு. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலையும் மலை சார்ந்த பசுமையும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொள்கிறது.

காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் என்ற முயற்சியில், இந்த 'ஜன்னல் ஓரப்’ பயணம் கொஞ்சம் சுவாரஸ்யம்தான்!

- விகடன் விமர்சனக் குழு