Published:Updated:

“நமக்குப் பதில் தெரியாதுல்லா!”

“நமக்குப் பதில் தெரியாதுல்லா!”

“நமக்குப் பதில் தெரியாதுல்லா!”

''அண்ணாச்சி... 2014 நமக்கு யோக காலமுல்லா... வரிசையா நாம நடிச்ச 15 படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. அப்புறம் அம்மாவுக்கு உடம்பு நோவா இருந்துச்சு. நாலு லட்சம் செலவு பண்ணி அதையும் சரி பண்ணியாச்சு. அதனால இந்த வருஷ கிறிஸ்துமஸ் நமக்கு ரொம்பவே விசேஷமா இருக்கும் அண்ணாச்சி. அம்மா கையால வெட்டி ரெண்டு துண்டு கேக்கை வாயில போட்டா, அது தனி சொகம்லா. நாம டி.வி. ஷோவுக்காக ஊரு முழுக்க கேள்வி கேட்டுத் திரியிறோம். ஆனா, நாலாப்பு படிக்கிற என் மகள் ஜெஃப்ரி, 'அந்தப் புள்ளங்கள கேள்வியா கேக்குதல்ல... நான் ஒன்ன கேட்கிறேன். பதில் சொல்லு’னு என்னை தெனம் தெனம் குத்திக் குடையுறா. அட, நமக்கு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாதுல்லா!'' குதூகலமாகச் சிரிக்கிறார் இமான்.