Published:Updated:

“தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்!”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

“தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்!”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

 '' 'ஹீரோயின்கூட எப்ப டூயட் பாடி ஆடுவே... பறந்து பறந்து வில்லன்களை எப்போ அடிக்கப்போற?’ - நான் நடிச்ச ரெண்டு படங்களையும் பார்த்துட்டு பாராட்டுறாங்களோ இல்லையோ, இந்தக் கேள்விகளை மட்டும் உறவினர்களும் நண்பர்களும் கேட்பாங்க. ஆனா, சினிமா பத்தின என் ஐடியாவே வேற!'' - அழகாகப் பேசுகிறார் ஸ்ரீ. 'நம்பிக்கை அறிமுகம்’ என 'வழக்கு எண் 18/9’ மூலம் கிடைத்த பாராட்டை 'ஓநாயும் ஆட்டிக்குட்டியும்’ படத்திலும் தக்கவைத்திருக்கும் ஸ்ரீ, தற்போது நடிக்கும் படத்தின் பெயர்... 'சோன்பப்டி’!

''வித்தியாசமா யோசிக்கிறீங்களே... இங்கே ஹீரோவா நிலைச்சு நிக்கணும்னா அப்பப்போ கமர்ஷியல் படங்களும் நடிக்கணுமே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் ஹீரோவே இல்லை... அப்புறம் ஏன் அந்த யோசனை? 'வழக்கு எண்’ படத்துக்குப் பிறகு நிறைய ஸ்கிரிப்ட் கேட்டேன். அதில் முக்கால்வாசி, 'வழக்கு எண்’ சாயல்லயே இருந்துச்சு. சில ஸ்கிரிப்ட் பரபர ஆக்ஷனோட ஹீரோயிசத்தை மையப்படுத்தி வந்துச்சு. அந்தக் கதையைச் சொன்னப்போ, 'ஏய்... படம் பரபரனு சூப்பராப் போகுமே... ஏன் நீ நடிக்கலை’னு நண்பர்கள் ஆச்சர்யப்பட்டாங்க. ஆனா, 'ஹீரோ’வா நடிக்கிற ஸ்கிரிப்ட் வேண்டாம். அந்த ஸ்கிரிப்ட்டில் நான் ஒரு கேரக்டரா இருக்கணும். அது ரசிகர்களிடம் நல்லா ரீச் ஆகணும் அவ்வளவுதான். எனக்கு திருப்தி தர்ற மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட்கூட கிடைக்காத சலிப்பில், 'நடிப்பெல்லாம் நமக்கு சரியா வராது. வேற வேலைக்குப் போகலாம்’னு இ-பப்ளிஷிங் நிறுவனத்தில் இன்டர்வியூ முடிச்சுட்டு, வேலைக்குச் சேரப் போயிட்டேன். அப்போதான் மிஷ்கின் சார்கிட்ட இருந்து அழைப்பு. 'உன் படம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உன்கூட ஒரு படம் பண்ணணும்னு நினைக்கிறேன்’னு என்னை 'ஆட்டுக்குட்டி’ ஆக்கினார். காத்திருத்தலுக்கான பலன் கிடைச்சது!

“தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்!”

'வழக்கு எண்’ படம் கொடுத்த மரியாதையை அடுத்த படத்துல கெடுத்துக்கக் கூடாதுனு உறுதியா இருந்தேன். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துட்டு பாலாஜி சக்திவேல் சார் பாராட்டினதுதான், பெரிய சந்தோஷம். அதுவும் ஷாட் பை ஷாட் ரொம்ப விரிவாப் பாராட்டினார்!''

''சீரியஸ் படங்களில் மட்டும்தான் ஸ்ரீ நடிப்பார்னு உங்க மேல ஒரு இமேஜ் விழுந்துடுமே?''

''தெரியலை. 'வழக்கு எண்’, 'ஆட்டுக்குட்டி’... ரெண்டையும் நான் தேர்ந்தெடுக்கலை. அந்த ஸ்கிரிப்ட்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்துச்சு. அதே சமயம் கமர்ஷியல் படங்களில் நடிக்கக் கூடாதுனு எந்தக் கொள்கையும் வெச்சுக்கலை. ஆனா, அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு நான் பொருந்தணும். ரசிகர்களும் உறுத்தல் இல்லாம ரசிக்கணும். இது என்னோட நியாயமான எதிர்பார்ப்பு!''

''அப்படி ஒரு படமா 'சோன்பப்டி’?''

''க்ரைம் ப்ளஸ் காமெடிக் கதை. நல்ல என்டர்டெய்னர். ரொம்பத் தெளிவான ஸ்கிரிப்ட். காட்சிகளில் தம், தண்ணினு டாஸ்மாக் சமாசாரங்கள் எதுவும் கிடையாது. அதுவே இந்தப் படத்தில் நான் நடிக்கிறதுக்கான ஒரு முக்கியக் காரணம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism