Published:Updated:

தகராறு - சினிமா விமர்சனம்

தகராறு - சினிமா விமர்சனம்

தகராறு - சினிமா விமர்சனம்

தகராறு - சினிமா விமர்சனம்

Published:Updated:
##~##

த்தம், சத்தம், சம்பவம்... என விறுவிறு தகராறு!

திருட்டு நண்பர்கள் அருள்நிதி, பவண்ஜி, முருகதாஸ், சுலில் குமார் டீம், ஊருக்குப் புதிதாக வந்த இன்ஸ்பெக்டர், தாதா அருள்தாஸ், கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் ஆகிய மூவரின் விரோதத்தைச் சம்பாதிக்கிறது. திடீரென சுலில் குமார் மர்மமாகக் கொல்லப்பட, நண்பனைக் கொன்றவனைத் தேடுகிறார்கள் மற்ற மூவரும். அந்த முக்கோண விரோதக் கூட்டணி மிச்ச மூவரையும் தூக்க ஸ்கெட்ச் போடுகிறது. நண்பர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழக்கவழக்கமான அருவா, மாப்ள நட்பு, குடி, கூத்து நிறைந்த மற்றுமொரு மதுர சினிமாதான். அதில் சின்னச் சின்னத் தகராறுகள் எப்படிப் பெரிய வில்லங்கமாக உருமாறுகின்றன என்று சஸ்பென்ஸ் ரூட் பிடித்த வகையில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் விநாயக். முந்தைய பல 'மதுர சினிமா’க்களை நினைவுபடுத்தினா லும், சஸ்பென்ஸ் சேஸிங்கிலும் க்ளைமாக்ஸ் ரகசியத்திலும் ஸ்கோர் செய்கிறார்கள்.

பூர்ணாவிடம் அசடு வழிந்து போங்கு வாங்கும் இடங்களில் கலகலக்க வைக்கிறார் அருள்நிதி. சுலில் குமார், பவண் இருவரும் திருட்டு சண்டியர் பாத்திரங்களுக்கு நச்.

தகராறு - சினிமா விமர்சனம்

அத்தனை பெரிய கண்களைக் கொண்டு எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளையும் சுலபமாக நமக்குக் கடத்திவிடுகிறார் பூர்ணா. படத்தில் வரும் ஒரே பெண் கேரக்டராகக் கிடைத்த 'ஒன் வுமன் ஷோ’ வாய்ப்பில் டிஸ்டிங்ஷன் தட்டுது பொண்ணு!

அஞ்சுக்கும் பத்துக்கும் திருடுபவர்கள் சில்லறைப் பிரச்னைகளால் என்கவுன்டர் வரை போவதும், கொலை செய்தவன் இடது கைப் பழக்கம் உள்ளவன் என்கிற ஒரு லீடை வைத்துக்கொண்டு சந்தேகத்தில் பின்தொடர்வதும் சற்றே நீளம் என்றாலும்... ஓ.கே! ஆனால், சொல்லிவைத்த மாதிரி எல்லா வில்லன்களும் 'நான் அப்படிப் பண்ணுவேனா?’ என்று மறுப்பதும், அனைத்து வில்லன் கும்பலிலும் ஓர் இடது கை பார்ட்டி இருப்பதும்... ஹி... ஹி!

தகராறு - சினிமா விமர்சனம்

பிரவீன் சத்யாவின் அதிரடிக்கும் பின்னணி இசை, சஸ்பென்ஸ் டெம்போவுக்குப் பக்கபலம். தில்ராஜின் ஒளிப்பதிவு இரவு மதுரையை திக்திக் திகிலுடன் படம் பிடித்திருக்கிறது.

தாறுமாறாக அலைபாயும் திரைக்கதையை, ஆங்காங்கே இழுத்துப் பிடித்து க்ளைமாக்ஸ் முடிச்சு மூலம் கரை சேர்க்கிறார்கள். ஆனால், இப்படியான வம்பு, தும்புத் தகராறுகளை கொஞ்சம் நிறுத்திக்குவோமே!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism