Published:Updated:

“சொல்லித் தீராத காதல் சொல்லவும் தீராதது!”

க.நாகப்பன்

“சொல்லித் தீராத காதல் சொல்லவும் தீராதது!”

க.நாகப்பன்

Published:Updated:
##~##

''இப்போ ஒரு ஹிட் படம் கொடுக்கிறது சாதாரணம் இல்லை. அதுவும் முதல் படம்னா உயிரைக் கொடுத்து வேலை செய்யணும்'' - சின்ன டென்ஷன், நிறைய ஆர்வம் எட்டிப்பார்க்கின்றன 'வடகறி’ இயக்குநர் சரவணராஜன் பேச்சில். இவர், வெங்கட் பிரபு பட்டறையில் இருந்து வந்திருக்கும் இன்னொரு புதுவரவு!

''உங்க குரு 'பிரியாணி’ கிண்டிட்டு இருக்கும்போது, நீங்க 'வடகறி’ செய்யலாம்னு வந்துட்டீங்களா?''

''ஆமாம்ல... சினிமா இயக்குநர் ஆகணுங்கிறது என் சின்ன வயசுக் கனவு. ஆனா, டான்ஸ் மாஸ்டராத்தான் அறிமுகம் ஆனேன். 'சரோஜா’, 'சந்தோஷ் சுப்ரமணியம்’, 'கந்தசாமி’, 'திருதிரு துறுதுறு’, 'கோவா’னு பல படங்களில் டான்ஸ் மாஸ்டரா வேலை பார்த்தேன். வெங்கட் பிரபு 'கோவா’ ஷூட்டிங் போகும்போது, 'நிறைய மான்டேஜ் ஷாட்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. நீயும் வா’னு கூப்பிட்டார். அங்கே என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, 'மங்காத்தா’, 'பிரியாணி’ படங்கள்ல அசோசியேட்டா சேர்த்துக்கிட்டார். நம்பிக்கை வந்திருச்சு. படம் பண்ண வந்துட்டேன்!''

“சொல்லித் தீராத காதல் சொல்லவும் தீராதது!”

'’எப்படி இருக்கும் வடகறி?''

''வடையைப் பிய்ச்சுப் போட்டு உடனே ஈஸியா செய்றதுதான் வடகறி. செம டேஸ்ட்டா இருக்கும். அதுமாதிரிதான் என் 'வடகறி’யும் சிம்பிளா, செம டேஸ்ட்டா இருக்கும். உலக சினிமா, உங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கிற படம்னு நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. நிறையப் பிரச்னைகளோட வர்ற ரசிகர்கள், எல்லாக் கவலைகளையும் மறந்து ரிலாக்ஸ் ஆகிற மாதிரி ஒரு படம் பண்ணிருக்கேன். அவ்ளோ சுவாரஸ்யமான காமெடியும் த்ரில்லும் இருக்கும்!''

''கதையைச் சொல்லிடலாமே?''

''ஒரு மிடில் கிளாஸ் பையன், பெரிய லெவலுக்கு வர ஆசைப் படறான். அதுக்காக முயற்சி செய்யும்போது அவன் வாழ்க்கையில நடக்கும் காமெடியை, த்ரில் மிக்ஸ் பண்ணிச் சொல்லிருக்கேன். இந்தப் படத்தில் காமெடி பேசப்படுற அளவுக்கு காதலும் பேசப்படும். ஏன்னா, சொல்லித் தீராத காதல் சொல்லவும் தீராதது!'

“சொல்லித் தீராத காதல் சொல்லவும் தீராதது!”

''ஜெய், படத்துக்காக எப்படி மாறியிருக்கார்?'

'' 'சுப்பிரமணியபுரம்’, 'எங்கேயும் எப்போதும்’, 'ராஜா ராணி’னு ஜெய் கிராஃப் இப்போ அழகா வளருது. அதில் 'வடகறி’யும் சேர்ந்துக்கும். அவர், மெடிக்கல் ரெப் கேரக்டர்ல சென்னைப் பையனா நடிச்சிருக்கார். தன் நடிப்பை டெவலப் பண்ண மெனக்கெடுறார். அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிட்டார்னுதான் சொல்லணும்!''

“சொல்லித் தீராத காதல் சொல்லவும் தீராதது!”

'' 'சுப்பிரமணியபுரம்’ ஜெய்-ஸ்வாதி ஜோடியை அஞ்சு வருஷ இடைவெளிக்குப் பிறகு ஒண்ணா சேர்த்திருக்கீங்க?''

''ஆமாம். 'சுப்பிரமணியபுரம்’ படத்துல வர்ற 'கண்கள் இரண்டால்..’ பாட்டை ரசிக்கும் அத்தனை பேருக்கும் 'ஜெய்-ஸ்வாதி கெமிஸ்ட்ரி’ எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்குனு தெரியும். அந்த கெமிஸ்ட்ரியை இதில் இன்னும் அதிகப்படுத்தி இருக்கேன். அதுல ரெண்டு பேரையும் பிரிச்சிட்டாங்க. அதுக்கு பிராயசித்தமா இதில் அவங்களை ஒண்ணு சேர்த்திருக்கேன்!''

''வெங்கட் பிரபுகிட்ட என்னென்ன கத்துக்கிட்டீங்க?'

''நாங்க வேலை செய்றதே ஜாலியான அனுபவம். ஆர்ட்டிஸ்ட், மியூசிக் டைரக்டர், டெக்னீஷியன்னு எந்த வித்தியாசமும் இல்லாம தோணுற ஐடியாவைச் சொல்வோம். அதை எல்லாரும் எந்த ஈகோவும் இல்லாம ஏத்துப்பாங்க. எந்தச் சண்டை நடந்தாலும் பத்து நிமிஷத்துல அதை காமெடியா மாத்திடுவோம். டென்ஷன் இல்லாம வேலை பார்த்தா, பிளட் பிரஷர் வராது; வேலையும் நல்லா நடக்கும். இதுதான் சார் உண்மை!''