Published:Updated:

நெல்லையின் முதல் படைப்பு!

நெல்லையின் முதல் படைப்பு!

நெல்லையின் முதல் படைப்பு!

நெல்லையின் முதல் படைப்பு!

Published:Updated:
##~##
''மா
சத்துக்கு ஒரு என்கவுன்ட்டர் செய்தி வர்ற காலம் இது. எல்லா ரவுடிகளும் சொல்லிவெச்ச மாதிரி நெற்றிப் பொட்டில் குண்டு வாங்கி விழுந்து கிடக்குறாங்க. கையில் கட்டுப்போட்டு போலீஸ்காரங்க மருத்துவமனையில் படுத்திருப்பாங்க. இதில் யார் சரி... யார் தப்பு? ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போடுகிற பையனுக்கு, கொலைகள் செய்யுற தைரியம் எப்படி வருது? - இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும்... 'நெல்லை சந்திப்பு’!'' - சீரியஸாகப் பேசுகிறார் இயக்குநர் நவீன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது பழிக்குப் பழி கதையா?''

''அப்படிச் சொல்ல முடியாது. நம் எல்லோர் கனவும் பாசஞ்சர் ரெயில் பயணம் மாதிரி அமைதியான ஒரு வாழ்க்கைதான். இன்னொரு பக்கம், எக்ஸ்பிரஸ் மாதிரி அதிரவைக்கும் வன்முறை வாழ்க்கை முறை நமக்கு வாய்த்திருக்கு. இந்த இரண்டு வாழ்க்கையும் இணையுற இடம்தான் 'நெல்லை சந்திப்பு’. ஓர் இளைஞனுக்கு எதனால் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் வருதுங்குற கேள்விக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கோம்!''

நெல்லையின் முதல் படைப்பு!

''அதிரடியான கதைக்குப் புது முகங்கள் செட் ஆகிட்டாங்களா?''

நெல்லையின் முதல் படைப்பு!

''இந்தக் கதையின் தேவை இமேஜ் இல்லாத நடிகர்கள். அமைதியும் ஆவேசமும் நிறைந்த முகங்களைத் தேடினோம். ரோஹித், பூஷன்னு ரெண்டு பேர் சிக்கினாங்க. மேகா நாயரும், 'வால்மீகி’ தேவிகாவும்தான் ஜோடி. திருநெல்வேலி மக்களின் அன்பும், பண்பும், வாழ்க்கையும் பதிவாகியிருக்கிற முதல் படைப்புன்னு சொல்லலாம்!''

''இயக்குநர்களை மீண்டும் நடிகர்களாக்கி இருப்பதாகக் கேள்விப்பட்டோமே?''

''இயக்குநர்களால் நிச்சயம் நல்ல நடிகர்களாக மாற முடியும். சமீபத்திய உதாரணம் மிஷ்கின். நெல்லை சந்திப்பில் டைரக்டர் சரவண சுப்பையா, தயாரிப்பாளர் தேனப்பன் ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க. தயாரிப்பாளர் தேனப்பனுக்கு நடிகராகவும் நல்ல எதிர்காலம் காத்திருக்கு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism