Published:Updated:

தல Vs தளபதி

எம்.குணா

தல Vs தளபதி

தமிழகமே பொங்கல் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, தியேட்டர்களில் மட்டும் 'தல-தளபதி’ தீபாவளி!

சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு (போக்கிரி- ஆழ்வார்) அஜித்-விஜய் இருவரின் படங்களும் ஒரே சமயத்தில் வெளியாக, 'வாய்க்கால் வரப்பு’த் தகராறுகளுடன் அள்ளு தெறிக்க இருக்கிறது திரையரங்குகள். இரண்டு படங்களிலும் சேர்க்கப்பட்டிருக்கும் மாஸ் மசாலா குறித்த டிரெய்லர் இங்கே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரேக்ளா ரேஸ் அஜித்!

தான் திருமணம் செய்துகொண்டால், மனைவி தன்னை தம்பிகளிடம் இருந்து பிரித்துவிடுவாள் என்ற எண்ணத்தில் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருப்பாராம் அஜித். ஆனால் அவரது தம்பிகளோ, காதலில் விழுந்து கல்யாணத்துக்குத் தவிக்கிறார்கள். அண்ணன் கல்யாணம்

##~##
செய்தால்தானே தங்கள் ரூட் க்ளியர் ஆகும் என்று அஜித்துக்குப் பெண் தேடுகிறார்கள். இதை லீடாக வைத்துக்கொண்டு பாசம், பங்காளி மோசம் என்று கிளை பிரியும் கதை.

'மங்காத்தா’, 'ஆரம்பம்’ படங்களில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதற்கேற்ப அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது. ஆனால், 'வீரம்’ படம் 'விநாயகம்’ கேரக்டருக்கு சின்ன வயது. அத்தனை சின்ன வயதிலேயே நரை முடி இருப்பதற்கான காரணத்தை ஒரு ஃப்ளாஷ்பேக்கில் விவரிப்பார்களாம்.

தினமும் யாருடனாவது வம்பு இழுத்து அடிதடி, சண்டை போடுவது 'விநாயகம் பிரதர்ஸி’ன் வழக்கம். அதனால் போலீஸ், கோர்ட், ஜாமின், பெயில்... என்று அடிக்கடி அலைய வேண்டியிருப்பதால், வீட்டிலேயே ஒரு வக்கீலைப் பராமரிக்கிறார்கள். அந்த 'வீட்டோட வக்கீல்’ சந்தானம்!

ரஜினி 'முரட்டுக்காளை’யில், கமல் 'சகலகலா வல்லவன்’ படத்தில் மாட்டுவண்டி ஓட்ட, அஜித் 'வீரம்’ படத்தில் ரேக்ளா ரேஸ் விட்டு ஜமாய்த்திருக்கிறார்!

'ஜில்லா’ கல்லா கட்டுது நல்லா!

ரியா தாதா மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய். அடிதடி பஞ்சாயத்துகளில் தன் தந்தைக்கு ஆதரவாகக் களம் இறங்குகிறார் விஜய். அந்தத் தகராறுகளை அடக்கி ஒடுக்க வரும் சப்-இன்ஸ்பெக்டர் காஜல், ரௌடிகளுடன் முட்டல் மோதல், காஜலுடன் முத்தம் காதல்... இதுதான் 'ஜில்லா’!

தல Vs தளபதி

' 'திருப்பாச்சி’, 'சிவகாசி’ மாதிரி ஆல் கிளாஸ் படமா இருக்கணும். எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ள வேண்டாம். பாட்டு, ஃபைட்டுனு அடுத்தடுத்து பக்கா பேக்கேஜாக இருக்கட்டும்!’ என்று விஜய் சொல்ல, சீன் பை சீன் அவரது ஆசைப்படியே டிசைன் செய்திருக்கிறது 'ஜில்லா’ யூனிட்.

தல Vs தளபதி

ஷூட்டிங் பிரேக்கில், கேரவனில் பாட்டு கேட்பது அல்லது புத்தகம் படிப்பது விஜய்யின் பொழுதுபோக்கு. காஜல், உடனே மொபைல் பட்டனைத் தட்டிப் பேசத் தொடங்கிவிடுவாராம். காஜலின் உறவினர் ஒருவர் விளம்பரப் பட இயக்குநராக இருக்கிறார். அவருடன் இணைத்து காஜலைக் 'கிஸ்கிஸ்’கிறது யூனிட்!

சேனல் ரைட்ஸுக்கு ஏக அடிபிடி. இறுதியில் செம பல்க் தொகை கொடுத்து சன் டி.வி. படத்தின் உரிமையைத் தட்டியிருக்கிறது.