Published:Updated:

ஒரு ரகசியம் சொல்லவா?

இர.ப்ரீத்தி

ஒரு ரகசியம் சொல்லவா?

இர.ப்ரீத்தி

Published:Updated:
##~##

'ஆந்திரக் குதிரை’ அடையாளம் மறந்து 'சிம்பிள் ஏஞ்சல்’ என்று கொண்  டாடத் தோன்றுகிறது அனுஷ்காவை!

 ''வாழ்த்துக்கள்... கிளாமரே இல்லாமல், செம ஹோம்லியா 'தெய்வத் திருமகள்’ படத்துல கலக்கிட்டீங்க...''

''தேங்க்ஸ்... ஒரு நடிகைனா, எல்லா ரோலும் பண்ணணும். 'அருந்ததி’யும், 'தெய்வத் திருமகள்’ கேரக்டரும் எனக்குப் பயங்கர சவால் கொடுத்தவை. சவால்ல பாதி தாண்டிட்டேன்னு நினைக்கிறேன். ஷூட்டிங்ல நான், விக்ரம், சாரா... நாங்க மூணு பேருமே ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். டெய்லி நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். ஐ மிஸ் தெம்!''

ஒரு ரகசியம் சொல்லவா?

''உண்மை சொல்லணும்... 'தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரம், அனுஷ்கா, சாரா... யார் பெர்ஃபார்மன்ஸ் பெஸ்ட்?''

''இதில் உண்மை சொல்ல என்ன யோசிக்கணும்? கண்ணை மூடிட்டு சொல்வேன்... விக்ரம் - சாரா தான் படத்தோட ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ். அதுவும் அந்த க்யூட் குட்டி சாரா... சான்ஸே இல்லை!

ஒரு ஷாட்டுக்கு அவ்வளவு எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுப்பா. எல்லார்கிட்டயும் ரொம்ப சீக்கிரமே ஒட்டிப்பா. பிரேக் சமயங்களில் 'ஆன்ட்டி விளையாட வாங்க...’னு என்னை ஒரு வழி பண்ணிடுவா. அழகுக் குட்டிச் செல்லம்!''

ஒரு ரகசியம் சொல்லவா?

''விளம்பரப் படங்களில் நிறைய நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?''

''இந்தக் கேள்விக்கும் உண்மை சொல்லவா? சினிமாவைவிட விளம்பரங்கள் மூலமா நல்ல ரீச் கிடைக்குது. விளம்பரத்தில் நடிச்சா, தினமும் நாலு தடவையாவது நம்ம முகத்தை மக்கள் பார்த்துதான் ஆகணும். ஆனா, சினிமாவில் அப்படி இல்லை. அதைவிட, சில நாள் கால்ஷீட்டுக்கே ரொம்ப நல்ல சம்பளம் தர்றாங்க. யாருக்குத்தான் விளம்பரத்தில் நடிக்கப் பிடிக்காது.ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஒரு நடிகைக்கு வேற என்ன கிரெடிட் வேணும்!''

''அனுஷ்காவின் அழகு ரகசியம் ப்ளீஸ்...''

 ''அழகா இருக்கணும்னு நான் என்னிக்குமே மெனக்கெட்டது இல்லை. நிறையத் தண்ணீர், காலையில் யோகா இது மட்டும்தான் நான் ரெகுலரா கடைப்பிடிக்கும் விஷயங்கள். யோகா உடம்பையும் மனசையும் ஃபிட்டா வெச்சுக்க உதவும். தண்ணீர், ஸ்கின்னைப் பளபளப்பா வெச்சுக்கும். இது ரெண்டும் சரியா இருந்தாலே, முக அழகு ஃப்ரீ!''

''சினிமா ஸ்டார்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும்போதுதான், உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சதாமே... உண்மையா?''

''யெஸ்!

நான் அவங்கவங்க வீட்டுக்கே போய் யோகா சொல்லிக் கொடுப்பேன். அப்படி என்னிடம் யோகா கத்துக்கிட்டவர் தெலுங்குப் பட இயக்குநர் பூரி ஜெகன்னாத். அவர் மூலமாத்தான் நாகர்ஜுனாகூட 'சூப்பர்’ பட வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, பல வாய்ப்புகள். என் ஃபேவரைட் படம் 'லக்ஷயம்’தான். அதில் எதைப்பத்தியும் கவலைப்படாத, செம ஜாலியான கேரக்டரில் நடிச்சிருப்பேன். உண்மையிலேயே என் கேரக்டரும் அதுதான். அப்படி கேரக்டர்கள் கிடைச்சா, ஆசை ஆசையா நடிச்சுட்டே இருப்பேன்!''

'' 'தெய்வத் திருமகள்’, 'அருந்ததி’ இரண்டில் எந்தப் படத்தோட பெர்ஃபார்மன்ஸ் பெர்சனலா உங்களுக்குப் பிடிக்கும்?''  

''எனக்கு ரெண்டுமே பிடிக்கும். பொதுவா, என் அம்மா-அப்பா நான் நடிச்ச படம் பார்த்துட்டு எந்த

ஒரு ரகசியம் சொல்லவா?

கமென்ட்டும் சொல்ல மாட்டாங்க. 'அருந்ததி’ படம் அவங்களோட சேர்ந்து பார்த்தேன். படம் முடிஞ்சதும் அப்பா, என் தலையில் கைவெச்சு, 'ஸ்வீட்டி... கீப் இட்-அப்’னு சிரிச்சுட்டே பாராட்டினார். சந்தோஷத் தில் உடனே அழுதுட்டேன். நான் நடிச்சதிலேயே என் அப்பா, அம்மா ரெண்டு தடவை பார்த்த படம் 'அருந்ததி’ மட்டும்தான். ஐ லைக் அருந்ததி... ஐ லவ் அருந்ததி!''

''இனிமேலாவது தமிழ்ல நிறையப் படங்கள் நடிப்பீங்களா?''

''நிச்சயமா! அடுத்து கார்த்தியோட ஒரு படம் கமிட் ஆகி இருக்கேன். ஒரு ரகசியம் சொல்லவா? செல்வராகவனோட ஒரு படம் பண்ணப்போறேன். சீக்கிரமே அறிவிப்பு வரும். அடுத்து, தெலுங்கில் நாகார்ஜுனாகூட ஒரு படம். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்கா பிஸி!''