Published:Updated:

சீக்கிரமே நான் சித்தப்பா!

ம.கா.செந்தில்குமார்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

சீக்கிரமே நான் சித்தப்பா!

ம.கா.செந்தில்குமார்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

''ரோட்ல போகும்போது என் முகத்தைப் பார்த்ததுமே டவுட் ஆகி நின்னுடுவாங்க. நான் கணேஷானு செக் பண்ண, 'சார் கொஞ்சம் பேசிக் காட்டுங்க...’னு கேட்பாங்க. 'ஏங்க... நான் அவரு இல்லைங்க...’னு கோபமா சொல்வேன். ஆனா, உடனே வாய்ஸ் வெச்சுக் கண்டுபிடிச்சு, 'கணேஷ் சார்... ஜெஸ்ஸி டயலாக் பேசிக் காட்டுங்க’னு விடாம நச்சரிப்பாங்க.  

 ரஜினி, கமல், டி.ஆர்., சிவகுமார், வி.எஸ்.ராகவன் வரிசையில் என் வாய்ஸையும் இப்போ எல்லாரும் மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல கோபம் வந்துச்சு. சரி... மக்கள் என்ஜாய் பண்ணட்டும்னு விட்டுட்டேன். நமக்கு வாய்ஸ்தான் வரம் தலைவா!'' - கரகர குரலில் கலகலவெனப் பேசுகிறார் கணேஷ். 'விண்ணைத் தாண்டி வருவாயா?’, 'வானம்’ படத்தில் சிம்புவோடு கரகர காமெடி செய்தவர்.  

''நீங்க நடிக்க வந்த கதை சொல்லுங்க?''

''நான், மதன், கௌதம் மேனன் மூணு பேரும் நண்பர்கள். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படங்களை இயக்கித் தயாரிக்கலாம்னு, 'வேட்டையாடு விளையாடு’, 'பச்சைக்கிளி முத்துச்சரம்’, 'வாரணம் ஆயிரம்’ படங்கள் பண்ணோம். 'விண்ணைத் தாண்டி வருவாயா’ பண்ணிட்டு இருக்கும்போது, அந்த கேமராமேன் கேரக்டருக்குச் சரியான ஆள் சிக்கலை. 'நீங்களே பண்ணுங்க’னு சொன்னார் கௌதம். 'நமக்கு புரொடக்ஷன் சைடே போதும்ஜி’னு சொன்னேன். ஆனா, விடாம நடிக்கவெச்சுட்டார். ரஷ் பார்த்தா... தகதகனு மின்னுற சிம்புவுக்குப் பக்கத்துல பேசிக் டச்கூட இல்லாமல் கறுப்பா, குள்ளமா நின்னுட்டு இருக்கேன். 'தேவை இல்லாம இப்படி இழுத்துவிட்டுட்டீங்களே கௌதம்’னு புலம்பினேன். ஆனா, அந்த குள்ளம் ப்ளஸ் குரல்தான் இப்போ எனக்கு அடையாளமே கொடுத்திருக்கு!''  

சீக்கிரமே நான் சித்தப்பா!

''வாய்ஸ் உள்ள ஆள்னு சொல்றது உங்க விஷயத்துல உண்மை ஆகிருச்சுல்ல?''

''ஆமா! தமிழ்நாட்டுக்கே வாய்ஸ் கொடுக்கிறவரே, என் குரலுக்கு ஃபேன் ஆகிட்டார் தெரியுமா? 'விண்ணைத் தாண்டி வருவாயா’ பார்த்துட்டு வெளியே வந்த ரஜினி சார், 'அந்த கேமராமேனைக் கூப்பிடுங்க’னு சொன்னார். உடனே, படத்தோட கேமராமேன் மனோஜ் பரமஹம்சா வைக் கூட்டிட்டுப் போய் நிறுத்தினாங்க. 'இவரு இல்லைங்க. கேமராமேன் கேரக்டர்ல நடிச்சவரைக் கூப்பிடுங்க’னு சொன்னார். நான் போய் நின்னதும், 'ரியலி அப்ரிஷியேட். சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்குவோம்’னு சொன்னார். 'இவருக்கே ஓ.கே. ஆகிருச்சுன்னா, தமிழ்நாட்டுக்கே ஓ.கே-தான்’னு குஷி ஆகிட்டேன்! ஆனா, பசங்கள்லாம் செம காண்டு ஆகிட்டாங்க. 'யோவ்! நானும் எவ்வளவோ படம் பண்ணி இருக்கேன். ஆனா, ஒரே படத்துல எப்படியா இம்புட்டு ஃபேமஸ் ஆன?’னு சந்தானம் கலாய்ச்சே கொன்னுடுவார். ஒரு நிகழ்ச்சியில் என்னை மேடைக்குக் கூப்பிட்டு, 'அடுத்ததா கணேஷ் கர்னாடக சங்கீதத்தில் பாடல்கள் பாடு வார்’னு சொல்லிட்டார். ஒண்ணு தெரியுமா... நான் கானா பாடினா கேட்க நல்லா இருக்கும்!''

''தொடர்ந்து நடிக்கும் ஐடியா..?''

'' 'வானம்’ நல்ல படம். ஆனா, மார்க்கெட்டிங்ல கோட்டை விட்டுட்டேன். தேர்தலுக்குப் பின்னாடி ரிலீஸ் பண்ணி இருந்தா, நல்ல ரீச் கிடைச்சு இருக்கும். என் அடுத்த புராஜெக்ட்டைத் தொடங்கப்போறேன். வர்ற வாய்ப்புகளில் நடிக்க ஆரம்பிச்சா, முழு நேர நடிகன் ஆக்கிருவாங்க ளோனு பயமா இருக்கு. சில நல்ல படங்களைத் தயாரிச்சுட்டு, அப்புறம் நடிப்புபத்தி யோசிக்கணும். இப்போ சிம்புகூட 'வேட்டை மன்னன்’, 'போடா போடி’னு ரெண்டு படங்கள் பண்ணிட்டு இருக்கேன். 'போடா போடி’யில் சிம்புவோட சித்தப்பா கேரக்டர். படம் பாத்தீங்கன்னா, 'சித்தப்பா’வா என்னை நீங்க ஏத்துப்பீங்க!''