Published:Updated:

“நட்புதான் ஆண்களின் பூரிப்பு!”

ம.கா.செந்தில்குமார்

“நட்புதான் ஆண்களின் பூரிப்பு!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:

''பெண்ணுக்குத் தாய்மை சிறப்புனா, ஆணுக்கு நட்புதான் பூரிப்பு! 60 வருஷ நட்பு, 80 வருஷ நட்புனு அறியாப் பருவ நட்பை ஆயுசுக்கும் சுமக்கிறவங்க ஆண்கள். அப்படி ஆண்களுக்கு மட்டுமே உரித்தான மேன்மையான நட்பை புதுக் கோணத்தில் சொல்ல வர்றோம்!'' - நட்பு மேன்மையானது என்பதைக் குறிக்கும் வகையில் 'மேல்’ என்று தலைப்பைப் பிடித்து படம் இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் அருள்.

''தமிழ் சினிமாவுக்கு 'நட்பு’ புதுசு கிடையாது. உங்க படத்துல அப்படி என்ன ஸ்பெஷல்?''

“நட்புதான் ஆண்களின் பூரிப்பு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மூணு, நாலு நண்பர்கள், ஜாலி அரட்டை, ஹீரோயின் என்ட்ரி, நண்பர்களில் ஒருவன் ஹீரோயினைக் காதலிக்கிறான், ரெண்டு பேர் வீட்லையும் பிரச்னை, நண்பர்கள் உதவி பண்றாங்க... இப்படித்தானே இருக்கும் பெரும்பாலான நண்பர்கள் சினிமாக்கள். இடையிடையே டாஸ்மாக் சலம்பல்கள், நைட் எஃபெக்ட் குத்துப்பாட்டு, 'நண்பனுக்கு ஒண்ணுன்னா தோள் கொடுப்போம்’ பன்ச்... இவ்ளோதான் நட்பு படம். ஆனா, இந்த வழக்கமான விஷயங்கள் தவிரவும் நட்பு ரொம்ப ஆத்மார்த்தமானது. அதைத்தான் உணர்வுபூர்வமாச் சொல்லியிருக்கேன்!''

''படத்துல அப்புக்குட்டி தவிர, மற்ற எல்லாருமே புதுமுகங்களா இருக்காங்களே..!''

''அதுதான் எங்க ப்ளஸ். டப்பிங்ல சில காட்சிகளைப் பார்த்த அப்புக்குட்டி கண்கலங்கிட்டார். 'ஷூட்டிங் சமயம், 'இவ்வளவு எமோஷன் வேண்டாம். கம்மி பண்ணிக்கங்க’னு நீங்க சொன்னப்ப, 'இந்த ஆளு நம்மளை நடிக்க விடமாட்டார் போல’னு நினைச்சேன். ஆனா, எது சரியா தேவையோ அதை மட்டும் கரெக்ட்டா என்கிட்ட வாங்கியிருக்கீங்க. 'அழகர்சாமியின் குதிரை’க்கு அப்புறம் இந்தப் படத்துல எனக்கு நல்ல பேர் கிடைக்கும்’னு சொன்னார். அடுத்து, நாயகனா அறிமுகமாகும் புஷ்கின் ராஜ்குமாருக்கு இந்தப் படம் அழுத்தமான விசிட்டிங் கார்டா இருக்கும். இப்படி எளிய முகங்கள் மூலமா பவர்ஃபுல் எமோஷன்களை சுலபமாக் கடத்தியிருக்கோம்!''

''படத்தோட கமர்ஷியல் ரீச்சுக்கு வேற எதுவும் விஷயம் வெச்சிருக்கீங்களா?''

''சினிமா ஒரு கலை. அதுல கமர்ஷியலை வம்பா கலக்க முடியாது. அதுவும் ஒரு அம்சமா இருக்கிறதுதான் உறுத்தாம இருக்கும். எங்க படத்துக்கு 'நான் கடவுள்’ யூ.கே.சசிதான் மேக்கப்-மேன். ஆனா, எங்க படத்துல யாருமே மேக்கப் போடலை.  எப்படி மேக்கப் இல்லாம இருக்கணும்ங்றதுக்காகவே அவரை ஃபிக்ஸ் பண்ணோம். சருமத்துல இருக்கிற எண்ணைப் பசையை மட்டும் துடைச்சிருக்கோமே தவிர, துளி மேக்கப் போடலை. அதே மாதிரிதான் காஸ்ட்யூம்லயும் சினிமாத்தனத்தைத் தவிர்த்திருக்கோம். எடிட்டர் ராஜா முகமது 'இந்த மாதிரி படத்துல வேலை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு’ன்னார். படத்துல அவ்வளவு ஜீவன்!''

“நட்புதான் ஆண்களின் பூரிப்பு!”

''முதல் சினிமா எடுக்கிறது எவ்வளவு பெரிய போராட்டம்னு உங்களைப் பார்க்கும்போது தெரியுது. இந்தத் தாமதத்துக்கு என்ன காரணம்?''

''இப்போ என் வயசு 47. சொந்த ஊர், கோவை. 1990-களில் சினிமாவுக்காக சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்துல நிறைய டப்பிங் படங்களுக்கு ஒர்க் பண்ணினேன். 94-ல் இருந்து சின்னச் சின்னதா 14 படங்களுக்கு அசிஸ்டென்ட்டா இருந்தேன். அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில படங்கள் இருந்தாலும் அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பலை. என் நண்பர் வசனகர்த்தா விஜிகூட நிறைய வேலை பார்த்திருக்கேன். இதுக்கு இடையில் என்கிட்ட நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவர் 'மேல்’ ஸ்கிரிப்ட் கேட்டுட்டு நாகர்கோவில்ல உள்ள தன் உறவினர்கிட்ட சொல்ல, அவர் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அதுதான் சினிமா. வெளிச்சமா இருக்கேனு நாம தேடுற இடத்துல புதையல் கிடைக்காது. அது எங்கேயோ இருக்கும். நமக்குக் கிடைக்கணும்னு இருந்தா கண்டிப்பாக் கிடைக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism