Published:Updated:

'உலகத்திலேயே ரொம்ப அழகான ஒருத்தன்!'

ரொமான்ஸ் ஸ்பெஷல் அஜித்ம.கா.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி

''இது எனக்கு முதல் படம் மாதிரி இருக்கு. இதுக்கு முன்னாடி ஃப்ரெண்ட்லியா நிறையப் படங்களில் வேலை பார்த்திருக்கேன். ஆனா, இப்போ ஃபேமிலியா இந்தப் படத்தில் வேலை பார்க்கிறேன். அதுக்குக் காரணம் அஜித். முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே, 'உங்களுக்கு டைம் சேஞ்ச் ஆகுது கௌதம். இனி நல்ல விஷயங்கள் நடக்கும்’னார். அந்த நல்ல விஷயத்தையும் அவரே ஆரம்பிச்சு வெச்சிருக்கார்!'' - மனதில் பட்டதை யெல்லாம் வார்த்தைகளாக வெடிக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சில் இப்போது நிதானம்.

தன் அடுத்த இன்னிங்ஸை, அஜித் படத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார். அஜித் - அனுஷ்கா காம்பினேஷனில் கௌதம் இயக்கும் படத்துக்கு 'ஆயிரம் தோட்டாக்கள்’, 'துடிக்குது புஜம்’ என ஏகப்பட்ட பெயர்கள் உலவிக்கொண்டிருப்பதைப் பற்றி விசாரித்தால்... சிரிக்கிறார்!

''அட... இந்தத் தலைப்புகளும் நல்லா இருக்கே!  ஆனா, படத்துக்கு இன்னும் தலைப்பு பத்தி யோசிக்கவே இல்லை. 'தலைப்பு என்ன கௌதம்?’னு அஜித் சார் கேட்டார். 'படம் கொஞ்சம் ஷூட் போனதுக்குப் பிறகு,  ரெண்டு நாள் ஒதுக்கி தலைப்பை டிஸ்கஸ் பண்ணிக்கலாம்... நல்ல தலைப்பு சிக்கும்’னு சொன்னேன். 'நோ பிராப்ளம்’னார். அதனால இப்போ வரை தலைப்பு எதுவும் வைக்கலை. அநேகமா அஜித் சார் கேரக்டர் பேர்தான் படத்தின் தலைப்பா இருக்கும்!''

'உலகத்திலேயே ரொம்ப அழகான ஒருத்தன்!'

''சூர்யா படம் டிராப், சிம்பு படம் ஷூட்டிங்னு இருந்தப்ப திடீர்னு அஜித் புராஜெக்ட் எப்படி?''

''சூர்யாவுடன் 'துருவ நட்சத்திரம்’ டிராப் ஆன ஒரு வாரம் கழிச்சு, 'அஜித் படத்தை நீங்க டைரக்ட் பண்ணணும்’னு சொன்னாங்க. அஜித் சாரும் ரத்னம் சாரும் பேசி கன்ஃபர்ம் பண்ணாங்க. ஆனா, 'இதுதான் கதை’னு ஒன்-லைன்கூட அப்ப என்கிட்ட இல்லை.  'அவசரம் இல்லை கௌதம். பொறுமையாக் கதை பண்ணுங்க’னு சொன்னார் அஜித். முழுசா நாலு மாசம். ஆனா, எந்த பிரஷரும் இல்லை. ஃபர்ஸ்ட் ஹாஃப் வரை முடிச்சிட்டுப் போய் அவர்கிட்ட சொன்னேன். 'செஹண்ட் ஹாஃப் இதுல இருந்து அப்படியே வேற மாதிரி இருக்கும்’னு சொன்னேன். 'சூப்பர்... பண்ணுங்க’னு சொல்லிட்டார். ஃபுல் ஸ்கிரிப்ட் முடிச்சிட்டு சொன்னதும், 'நாளைக்கே ஷூட் போயிடலாம்’னு ஆர்வமாகிட்டார். 'ஸ்கிரிப்ட் நச்னு இருக்கு. எனக்கு இது ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்’னு சொன்னார்.

'நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும். எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா!’ - இப்படி விதவிதமான பன்ச்சஸ் உடன் ஆக்ஷன்ல பின்னுவார். ரொமான்ஸ்ல அஜித்துக்கு இது ரொம்ப ஸ்பெஷல் படம்.

'உலகத்திலேயே ரொம்ப அழகான ஒருத்தன்!'

'எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஏன் ஜெஸ்ஸி..?’னு 'விண்ணைத்தாண்டி வருவாயா’-ல ஒரு வசனம் வரும்ல. அப்படி இந்தப் படத்துலயும் 'உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்’னு அஜித் பத்தி ஒரு வசனம் வரும். அந்தச் சூழ்நிலை, எமோஷனோட கேட்கும்போது அதன் அழகு புரியும்!''

''அஜித்துக்கு டபுள்ரோல், ஒரு கேரக்டருக்காக  எடை குறைச்சு, டை அடிச்சுனு தோற்றத்தில் மாற்றம் பண்ணியிருக்கார்னு சொல்றாங்களே?''

''அது எதைப் பத்தியும் இப்பவே பேச முடியாது. ஆனா, சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. அதை ஒவ்வொண்ணா அப்பப்போ பேசலாம். எமோஷனலான ஆக்ஷன் படம். பெண்களுக்கு இந்தப் படத்தில் அஜித்தை ரொம்பப் பிடிக்கும். அந்தளவுக்கு ஃபேமிலி டிராமாவும் மிக்ஸ் ஆகியிருக்கு. படத்தின் எமோஷன் எபிஸோட் முழுக்க அஜித்தின் தோளில்தான்!''

''ஹீரோவுக்கு சமமான கேரக்டர்னாதான் அனுஷ்காவைப் பிடிக்க முடியும். ஆனா, அஜித் படத்தில் அனுஷ்காவுக்கு அந்த ஸ்பேஸ் இருக்குமா?''

''நிச்சயமா! என் படங்களில் எப்பவும் ஹீரோயினுக்குப் பாதி கேன்வாஸ் போயிடுமே. அதுவும் அனுஷ்கா மாதிரி ஒரு பெர்ஃபாமரைச் சும்மா வெச்சிருக்க முடியாது. அனுஷ்கா பிஸியா தெலுங்குல ரெண்டு பெரிய புராஜெக்ட்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அஜித் சார் படம்னு கேட்கவும்  ஒவ்வொரு மாசமும் 10 நாள்னு பிரிச்சு கால்ஷீட் கொடுத்தாங்க. ஆனா, ஸ்கிரிப்ட் முடிக்க லேட் ஆகிட்டதால், அவங்களோட முதல் மாச 10 நாள்களை மிஸ் பண்ணிட்டேன். 'ஸாரி’ சொன்னப்ப, 'பிரச்னை இல்லை கௌதம். நமக்கு ஸ்கிரிப்ட்தான் முக்கியம். நான் காத்திருக்கேன்’னு சொன்னாங்க. அஜித் - அனுஷ்கா ரெண்டு பேருமே அவ்வளவு லவ்வபிளா இருப்பாங்க!''  

''ஹாரிஸ் ஜெயராஜுடன் ரீ-யூனியன். இப்போ எப்படி இருக்கு நட்பு?''

''எங்களுக்குள்ள பிரிவுனு எதுவும் கிடையாது. இந்தப் படத்துக்காகச் சேர்ந்திருக்கிறோம்னும் கிடையாது. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி சந்திச்சிட்டுத்தான் இருக்கோம். பசங்க பிறந்த நாளுக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவர் எங்க வீட்டுக்கு வந்திருக்கார். அவர்கூட வேலை பார்க்கலையே தவிர, பேசிட்டுத்தான் இருந்தேன். திரும்பவும் வொர்க் பண்ணலாம்னு பேசினப்போ, அதுக்கான சூழல், சரியான படம் அமையணுமே. இது கரெக்ட்டான படமாத் தோணுச்சு. சேர்ந்து வேலை பார்க்கிறோம்!''

''தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்ன ஆனார்?''

''உள்ளுக்குள்ள அமைதியா இயக்குநருக்கு வழிவிட்டு தனக்கான நேரத்துக்குக் காத்திருந்தார். அடுத்து 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’, 'பூவரசம் பீப்பி’னு ரெண்டு படங்கள் ரிலீஸுக்கு தயார். நாங்க தயாரிச்ச 'தங்க மீன்கள்’ தேசிய விருது ஜெயிச்சப்போ, ரொம்பச் சந்தோஷமா இருந்தது. அஜித் சார் பட ஷூட்ல இருந்தப்ப அந்தத் தகவல் வந்தது. அவர்கிட்டதான் முதல்ல சொன்னேன். எழுந்து நின்னு கைதட்டினார். அப்படியே முழு யூனிட்டும் கைதட்டினாங்க. லிங்குசாமி, பாலாஜி சக்திவேல்னு இயக்குநர்கள், பல தயாரிப்பாளர்கள்னு நூத்துக்கணக்கில் வாழ்த்துகள் குவிஞ்சன.  நான் ராமுக்கு போன் பண்ணி வாழ்த்தினேன்.

'உலகத்திலேயே ரொம்ப அழகான ஒருத்தன்!'

'தங்க மீன்கள்’ கதையை ராம் என்கிட்ட முதல் தடவை சொன்னப்பவே, 'இந்தப் படம் நிச்சயம் அவார்டு ஜெயிக்கும்’னு சொன்னேன். 'நீங்களே நடிங்களே...’னு நான்தான் அவரை அந்தப் படத்துல நடிக்கச் சொன்னேன். ஃபர்ஸ்ட் காப்பி வரை படம் எங்ககிட்டதான் இருந்தது. ஆனா, ரிலீஸ் சமயம் சில பிரச்னைகள். அப்போ, 'இந்தப் படத்தை நாம ரிலீஸ் பண்ண முடியுமானு தெரியலை... வேற யார்கிட்டயாவது கொடுத்திரலாமா?’னு ராம் கேட்டார். உடனே ஓ.கே. சொல்லிட்டேன். ஆனா, அந்தச் சமயம் உறுதியளிக்கப்பட்ட எந்த விஷயமும் நடக்கலை.

சரி, அதைவிடுங்க... ராம், நல்ல கலைஞன்; என் நண்பன். ஏதோ ஒரு விதத்தில் அவர் ஜெயிச்சிட்டே இருந்தா, எனக்குச் சந்தோஷம்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு