'தப்பு நடந்தா தட்டிக் கேக்கணும்’ என்று தாத்தா சொன்னதே ஜீவாவுக்கு வேத வாக்கு. பொங்கி வழியும் சமூகக் கோபத்தால், அவரது குடும்பம் நிம்மதியைத் தொலைக்கிறது. இன்னொரு பக்கம், அவரால் பாதிக்கப்படும் ரவுடிகள் வளையம் கட்டுகிறார்கள். யார் ஜெயித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்!

'சமூகத் தவறுகளைக் கண்டும் காணாமப் போனா, அது ஒருநாள் நம்மையே பாதிக்கும்’ என்கிறார் அறிமுக இயக்குநர் கோகுல். ரோட்டில் பைக்கில் வம்பு பண்ணும் இளைஞர்களை ஜீவா போட்டுப் புரட்டி எடுக்கும் இடம்... ரணகள அறிமுகம். ஆனால், அடுத்தடுத்து அதே ஸ்டைலில் தட்டிக் கேட்பதே தொடர்கதைக் காட்சிகளாவது அலுப்பு!

விறைப்பும் முறைப்புமான உடல்மொழியில் ஜீவா... செம மேன்லி! ஸ்ரேயாவிடம் சிரிப்பை அடக்கிக்கொண்டு, வெத்து முறைப்பு காட்டும் இடத்தில் அழகன்.

ஸ்ரேயா... பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. ஜீவாவின் நேர்மையான முரட்டுக் குணத்துக்காகவே அவரை ஸ்ரேயா காதலிப்பதும், பயப்படாமல் ஊர் சுற்றுவதும் இனிமை. செடிகளுக்கு ஜீவா குடும்பத்தினர் பெயர் வைப்பது, வீட்டுக்கு வரும் மாமனாரிடம் மரியாதை காட்டுவது என்று ஸ்ரேயா... நடிப்பிலும் ஜில்யா!

கௌரி என்ற ரவுடிக்கு முதல் பாதி முழுக்க அத்தனை பில்டப் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யாரோ பெரிய வஸ்தாது வரப்போகிறார் எனப் பார்த்தால்... வெடவெடவென வந்து நிற்கிறார் சென்ராய். 'ஆள்தான் ஒல்லி... அடியெல்லாம் கில்லியாக இருக்கும்’ என நினைத்தால், மறுபடி மறுபடி ஜீவாவிடம் அடி வாங்கி கைப்புள்ளை எஃபெக்ட் காட்டுகிறார். படத் தின் டெம்போவையே அம்போ ஆக்கிட்டீங்களே பாஸ்!

அப்பா பெயரை வைத்ததற்காக, மகனை எப்போதும் 'அவர்... இவர்’ என மரியாதையாக அழைக்கும் அப்பா ஜெயப்பிரகாஷ் ரசிக்கவைக்கிறார். ஜீவாவின் மச்சினனாக லூஸ் ஆர்ம்ஸைக் காட்டி பில்டப் பினாத்தும் சத்யன், படத்தின் ஒரே காமெடி மைலேஜ். அங்கங்கே வந்து போகும் அரசியல் ரவுடி, எம்.எல்.ஏ. என எல்லோருமே கச்சிதமான தேர்வு. ஸ்ரேயாவின் அசிஸ்டென்ட் கமிஷனர் அப்பாவாக வரும் பாபு ஆண்டனிக்குப் பாவம்... வேலையே இல்லை. மார்க்கெட்டில் தேமே என்று நின்று ரவுடிகளை வேடிக்கை பார்க்கும் போலீஸைத் தமிழ் சினிமா எப்போது தலை முழுகுமோ? அசிஸ்டென்ட் கமிஷனர் மகள் ஸ்ரேயாவை, ஜஸ்ட் லைக் தட் என ரவுடிகள் டீல் செய்வதும், அவரின்

மருமகன் ஜீவாவை ரவுடிகள் கொல்வ தற்கு கமிஷனரே நேரம் குறிப்பதும் எந்த ஊரில் நடக்குது சாரே?

சண்டைக் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கும் அனல் அரசு டீமுக்கு ஒரு சல்யூட். ஒவ்வொரு ஃப்ரேமையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கிறது ஷண்முகசுந்தரத்தின் கேமரா. அறிமுக இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கியின் இசையில், 'மாலை மங்கும் நேரம்’ பாடல் கேட்கும்போதே மயக்குகிறது.

பழகிய பழைய ரௌத்திரம்தான்... ஆனாலும் உக்கிரம்!