மதுரையில் நீண்ட இடைவேளைக்குப் பின் ஒலித்தது... ஹரிஹரன் குரல்! 'டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மதுரைப் பதிப்பு ஆரம்ப விழாவுக்காக, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது ஹரிஹரனின் இசைக் கச்சேரி. மழையை எதிர்பார்த்திருந்த மதுரை மக்களை சொட்டச் சொட்ட இசை மழையில் நனைத்த ஹரிஹரனிடம் பேசினேன்.

''கார்கில் போர் நடந்த சமயம், ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வந்தேன். அப்போ மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயிருந்தேன். ரொம்பப் பிடிச்ச கோயில். இந்த முறை டைம் இல்லாததால், கோயிலுக்குப் போகமுடியலை... மிஸ் யூ மீனாட்சி!''

''கஜல், இசை ஆல்பம்னு உங்களுக்கு இன்னொரு முகம் இருக்குது. அதைத் தமிழில் பண்ற ஐடியா இருக்குதா?''

'' 'காதல் வேதம்’கிற பேர்ல நானும் சுஜாதாவும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே தமிழில் மியூஸிக் ஆல்பம் பண்ணினோம். வைரமுத்து சார்தான் அதுக்குப் பாட்டு எழுதினார். அதுவும் ஒரு மாதிரி கஜல்தான். சீக்கிரமே வைரமுத்து சார் வரிகளில் ஒரு கஜல் ஆல்பம் பண்ணப்போறேன்!''

'' 'செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடல் பாடிஇருந்தீங்களே?''

''கனிமொழி(!) எழுதின பாடல்தானே... ( அது அவங்க அப்பா எழுதினது பாஸ்!). அதில் ரெண்டு வரிகள் மட்டும் நான் பாடினேன். நல்ல அனுபவம்!''

'' 'மோதி விளையாடு’, 'சிக்குபுக்கு’னு ரெண்டு படத்துக்கு மியூஸிக் பண்ணினீங்க. அடுத்து?''

''நானும் லெஸ்லியும் 'கலோனியல் கஸின்ஸ்’ங்கிற பேர்ல நிறைய ஆல்பங்கள் பண்ணி இருக்கோம். அப்புறம் ரெண்டு படங்களுக்கு இசை அமைச்சோம். இந்தக் கூட்டணி தற்காலிகமா பிரியுது. நான் தனியா ஒரு இந்திப் படத்துக்கு மியூஸிக் பண்ணப்போறேன். படத்தோட பேர்... 'மே ஐ ஹெல்ப் யு?’ என்னோட மியூஸிக்கை எல்லாரும் ரசிப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு!''

''உங்க வாரிசுகளும் சினிமாவுக்கு வர்றாங்களாமே?''

''யா! என் முதல் பையன் அக்ஷயா ஹரிஹரன், மியூஸிக்ல ஆர்வமா இருக்காரு. மும்பையில் டிரான்ஸ் ஆல்பம், லான்ஞ் மியூஸிக் (Lounge Music) பண்ணிட்டு இருக்காரு. நானும் அவரும் சேர்ந்து 'இன் த மிக்ஸ்’ (in the mix) என்ற பெயரில் மும்பையில் ரிக்கார்டிங் ஸ்டுடியோ ஆரம்பிச்சிருக்கோம். இன்னொரு பையன் கரனுக்கு நடிப் பதில்தான் ஆர்வம். அதற்கு தன்னைத் தகுதிப்படுத்துவதற்காக லாஸ் ஏஞ்சலீஸ்ல இருக்கிற lee strasberg institute - ல முறைப்படி படிச்சுட்டு இருக்கார். அநேகமா ரெண்டு வருஷத்தில் நடிக்க வந்திடுவார்!''

''டி.வி. சேனல்களில் இப்போ நிறைய பாட்டுப் போட்டி நடக்குதே?''

''நல்ல விஷயம்தான். நான்கூட ஜெயா டி.வி-யில் ஒரு நிகழ்ச்சி பண்ணினேன். ஆனா, 'உனக்குப் பாட வரலை'னு குற்றம் சொல்கிற நிகழ்ச்சியாக அது இருக்கக் கூடாது. எப்படிப் பாடணும்னு சொல்லித் தரணும். நம்மளோட அனுபவத்தை அவங்களுக்குக் கத்துக் கொடுக்கணும். புதுசா பாட வர்றவங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுறேன். நல்லாப் பாடணும்னா, சாதகம் பண்ணணும். அதுதான் கடைசி வரைக்கும் கை கொடுக்கும். பேரும் புகழும் நல்லாப் பாடினா மட்டும்தான் வரும். மீடியாவால் வராது. நீங்க பண்றதை, மீடியாவால் பப்ளிசிட்டிதான் பண்ண முடியும். உங்களை ஒரு ஆர்ட்டிஸ்ட்டா அது உருவாக்கிவிடாது. அந்த கிளாமர்ல நம்மையே நாம் மறந்துவிடக் கூடாது!''

''ஒரு டியூன் ஹிட் ஆகிடுச்சுன்னா, அதே மாதிரி நிறைய டியூன்கள் வருதே?''

(சிரிக்கிறார்) ''அது ஒரு டிரெண்ட். அதுதான் பிரச்னையும்கூட. மியூஸிக் டைரக்டரோட கையில் மட்டும் பாட்டு இல்லை. புரொடியூசர், டைரக்டர்கள்கூட உதாரணம் காட்டி அதே மாதிரி மியூஸிக் போடுங்கனு சொல்வாங்க. ஹீரோ பெரிய ஆக்டரா இருந்தா, அவரும் மூக்கை நுழைப்பார். இதை எல்லாம் தாண்டித்தான் ஒரு நல்ல பாட்டு வெளியே வரணும். பெரிய மியூஸிக் டைரக்டரா இருந்தா, எல்லாரும் ஏத்துப்பாங்க. இதுவே புதுப் பையனா இருந்தா, எல்லாத்துக்கும் 'ஆமாம்’ போட்டுத்தான் ஆகணும்!''

''ஸ்டேஜ் ஷோவில் பெரும்பாலும் ஒரிஜினல் பாட்டு மாதிரி இல்லாம, இஷ்டத்துக்கு மாத்தி மாத்திப் பாடுறீங்களே? ஆடியன்ஸ் இதை ஏத்துக்கிறாங்களா?''

''அப்படியேதான் பாட்டு வேணும்னா, சி.டி-யிலயே கேட்கலாமே. எல்லாப் பாடல்களையும் வீட்லயே

நிறையத் தடவை கேட்கிறோம்... டி.வி-யில் பார்த்துடுறோம். அதனால், ஸ்டேஜ் ஷோவில் சில எக்ஸ்ட்ரா சங்கதிகளைப் போட்டு மாத்திப் பாடினாதான் எங்களுக்கும் போரடிக்காம இருக்கும். கேட்கிறவங்களுக்கும் புதுசா இருக்கும்!''

''தொடர்ந்து நடிக்கிற ஆர்வம் இருக்கா?''

''குஷ்புவோடு சேர்ந்து நான் நடித்த 'பவர் ஆஃப் வுமன்’ படம் பார்த்திருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். ஏன்னா, அது வந்த வேகத்துலயே போயிருச்சு. போதுங்க... நமக்கு இந்த ஒரு தொழிலே போதும். இதுக்கே நேரம் பத்தலை!''