Published:Updated:

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

தம்பி ராமையா தடாலடிஆர்.சரண், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

தம்பி ராமையா தடாலடிஆர்.சரண், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

மிழ் சினிமாவின் 'சின்சியர் சீனியர்’களில் முக்கியமானவர், தம்பி ராமையா!

''என்னை என்ன வேணும்னாலும் பண்ணச் சொல்லுங்க... பண்ணிடுவேன். ஆனா, பேசாம மட்டும் இருக்கச் சொல்லாதீங்க. அது மட்டும் முடியாது!'' - கலீர், சுளீர், பளீரெனப் பேசிக்கொண்டே இருக்கிறார் தம்பி ராமையா. புதிய அலுவலகத்தில் இயக்குநர் பிரபு சாலமன் படத்தை மாட்டிவைத்திருக்கிறார்.

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

'எனக்கு 'மைனா’ படம் மூலம் வாழ்க்கை கொடுத்தவர் டைரக்டர் பிரபு சாலமன். அவர் படத்தை மாட்டிவைக்கிறது என் கடமை. அவருக்கு என்னைவிட வயசு கம்மிதான். அடுத்து அவர் இயக்கும் 'கயல்’ படத்துலகூட நான் இல்லை. ஆனா, இந்தக் கணக்குவழக்கு எல்லாம் இதுல பார்க்கக் கூடாது. சினிமா கமர்ஷியல்தான். ஆனா, சினிமா சம்பந்தப்பட்ட எல்லாமே கமர்ஷியல் இல்லையே! சினிமா... சினிமா... சினிமானு ஆளா பறந்துட்டே இருந்தேன். ஆனா, தொட்டதெல்லாம் பொன்னாகும்னு சொல்வாங்க இல்லையா... ஒருகாலத்துல நான் தொட்டதெல்லாம் மண் ஆச்சு.  ஆமா... நான் ஸ்விட்ச் போட்டா, பல்பு ஃபியூஸ் ஆகிடும். அப்படி ஒரு கட்டம். ஒவ்வொரு தடவையும் என் பொண்டாட்டிகிட்ட தோல்வியை ஒப்புக்க மனசு வராம, 'ஏய், நான் செய்ற ஒவ்வொரு காரியத்துலயும் ஒரு அர்த்தம் இருக்கு’னு சொல்லி வாயை அடைச்சுடுவேன். குடும்பத்தைக் காப்பாத்த, அம்மா மெஸ், விவேகா லாட்டரீஸ், உமாபதி மெடிக்கல் ஹோல்சேல்னு நான் பண்ணாத வியாபாரமே இல்லை. ஆனா, எல்லாமே தோல்வி. ஒருநாள் மனைவி என்கிட்ட, 'என்னங்க கஸ்தூரிங்ற பொம்பளைகிட்ட ரெண்டு லட்ச ரூபா குடுத்துவெச்சிருந்தோம்ல... அது ஓடிருச்சாம்’னு அழுதுட்டே சொன்னப்போ, ஒரு சின்ன அதிர்ச்சிக்குப் பிறகு பகபகனு சிரிச்சுட்டேன். 'இதுவரை நான் மட்டும்தான் ஏமாந்துட்டு இருந்தேன். இப்போ நீயும் எனக்கு துணைக்கு வந்துட்ட’னு சொன்னப்ப, வீடே என்னை அதிர்ச்சியா பார்த்துச்சு. அந்தக் குழந்தைத்தனம் என் வரம். என் கஷ்டத்துக்கான அந்த வரம் ரொம்ப லேட்டா கிடைச்சது. இப்போ நிமிந்து நின்னாச்சு தம்பி!'' என்று ஆனந்தமாகச் சிரிக்கும் தம்பி ராமையா, இன்றைய தேதியில் தமிழ் சினிமா இயக்குநர்களின் டார்லிங் நடிகன்.

''இப்போ இண்டஸ்ட்ரியில்  எல்லோருக்கும் உங்க மேல பயங்கர லவ்வாமே?'' என்றதும் கலகலவெனச் சிரிக்கிறார்.

''அன்பு வந்தா ஆம்பளை பொம்பளை வித்தியாசம்லாம் கிடையாது; தெரியாது. என்னையை இப்போ அவ்ளோ பேருக்குப் பிடிக்குது. தன் குடும்பத்து ஆள் மாதிரி என்கூடப் பழகிட்டார் பிரபு சார். 'கும்கி’ நடிக்கிறப்போ எனக்கு அம்புட்டு பெருமை. காகா ராதாகிருஷ்ணன் சார் எப்பவும் 'சிவாஜியோட முதல் படம் 'பராசக்தி’யில் நடிச்சவன்டா நான்’னு பெருமையா சொல்வார். அதேபோல ஒரு பெருமை எனக்கு அவர் பேரன் விக்ரம் பிரபுகூட நடிச்சதுல கிடைச்சது. பிரபு சாரும் விக்ரம் பிரபுவும் 'கும்கி’ வெற்றிவிழாவில் எனக்கு முத்தம் கொடுத்தாங்க. 'மைனா’ படத்தப்போ பிரபு சாலமன் சார் படத்தோட ரஷ் பார்த்துட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தார். படத்தை ப்ரீவியூ தியேட்டர்ல பார்த்த ரஜினி சார், 'வாவ்... வாட் எ பெர்ஃபார்மர் யூ ஆர்!’னு சவுண்டா சொல்லி படக்குன்னு இழுத்து இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்தார். அவர்கூட நடிச்ச ஹீரோயினுக் குக்கூட அப்படி அழுத்தமா கொடுத்திருக்க மாட்டார் தம்பி. அப்பிடி ஒரு அழுத்தம். மாமனார் அடிச்சா மருமகன் சும்மாவா இருப்பாரு? போறபோக்குல தனுஷ§ம் கன்னத்துல ஒரு இச் வெச்சார். நானும் 'பச்சக்’னு தனுஷ் கன்னத்துல அழுத்தமா ஒரு கிஸ் வெச்சுட்டேன்ல.

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”
“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

இப்போ போனவாரம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா என்னைக் கிட்டத்தட்ட ஆள் வெச்சுக் கடத்திட்டார். முன்னாடி போய் நின்னா 'டேய்! நீ நடிக்கிற படங்கள்ல நீ தெரிய மாட்டீங்குறேடா... அந்தக் கேரக்டர்தான் தெரியுது. ஐ'ம் ப்ரௌடு ஆஃப் யூ!’னு கட்டிப்பிடிச்சு நெத்தியில முத்தம் வெச்சார். அங்கே நிறைய இடம் இருக்குனு அவருக்கும்

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

தெரிஞ்சுபோச்சு. விஜய் தம்பி பொதுவா சைலன்டா இருக்கும். ஆனா, 'அண்ணே எதாச்சும் பேசுங்கண்ணே!’னு ஷூட்டிங்ல சொல்லும். என் அனுபவத்துல பார்த்தது கேட்டதை அடிச்சுவிடுவேன். ஒரே கலகலப்பா இருக்கும். 'வாயைத் திறந்தாலே வார்த்தைகளா கொட்டுதேண்ணே... ஏதும் பிராக்டீஸ் பண்றீங்களா’னு கேட்கும். 'அதுவா தம்பி...காலம் கழுத்துல கொடுத்த அடியெல்லாம் வாய்லேர்ந்து இருந்து வார்த்தையா வருது’னு சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சிடுச்சு. ரீசன்ட்டா என் பர்த் டே-க்கு, நான் இருந்த செட்டுல கேக் வரவெச்சு விஜய் தம்பி கட்டிப்பிடிச்சு வாழ்த்துச்சு. 'ஜில்லா’ பண்ணினப்ப என் பெர்ஃபார்மென்ஸ் பார்த்து, 'பிய்ச்சுட்டீங்கண்ணோவ்... சும்மாவா கொடுத்தாங்க நேஷனல் அவார்டு...சூப்பர்ணா’னு ஒரு உம்மா கொடுத்துச்சு.

போனமாசம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில நான் ஷூட்டிங்குக்காகத் தங்கி இருந்தேன். காலையில எந்திருச்சு வாக்கிங் போயிட்டு இருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு கார் சர்ருனு பிரேக் போட்டு நின்னுச்சு. கதவைத் திறந்து ஓடிவந்தது நம்ம 'தல’. 'என்ன சார்... இந்த நேரத்துல இங்கே? யாரும் உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்களா, நான் ட்ராப் பண்ணவா? வாங்க

“வடிவேலுவும் நானும் சேர்ந்து நடிச்சா...”

போலாம்’னாரு. 'நானே உடம்பை இந்த வயசுல சூதனமா வெச்சுக்க வாக்கிங் போறேன். நீங்க இம்புட்டு எளிமையா வந்து டக்குனு கூப்பிட்டீங்கனா ஹார்ட் அட்டாக் கிட்டாக் வந்திடப் போகுது தம்பி!’னு சொன்னதும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு. நீங்க கேட்ட லவ்வுலாம் வந்திருச்சா... நீங்க கேட்ட முத்த கணக்கு வந்திருச்சா.. ஒண்ணு ரெண்டு குறையுதா? கமல் சார்கிட்ட உம்மா வாங்கிட்டா கணக்கு டேலி ஆகிடும் தம்பி!''

''வடிவேலுகூட இப்போ பேசிக்கிறது இல்லையா?''

''நாங்க என்ன கட்டி உருண்டு சண்டையா போட்டுக்கிட்டோம். அவரும் நடிக்கிறார்; நானும் நடிக்கிறேன். வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. சேர்ந்து நடிக்க வாய்ப்பு வரலை. பார்த்துப் பேசிக்க முடியலை. ஆனா ஒண்ணு தம்பி, நாங்க திரும்பவும் சேர்ந்து நடிச்சா, நாங்க ஹிட் கொடுத்த பழைய ஜோக்கை எல்லாம் பீட் பண்ணிப் போய்ட்டே இருப்போம்!''