Published:Updated:

‘ஒன்ஸ்மோர்’ உதயநிதி... ’எஸ்கேப்’ நயன்தாரா!

தப்பித்தது எப்படி?ம.கா. செந்தில்குமார்

‘ஒன்ஸ்மோர்’ உதயநிதி... ’எஸ்கேப்’ நயன்தாரா!

தப்பித்தது எப்படி?ம.கா. செந்தில்குமார்

Published:Updated:

'' 'நண்பேன்டா’ படத்துக்காக நயன்தாராகிட்ட கதை சொல்ல உட்கார்ந்தோம். 'படத்துல உங்களுக்கு சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்படுற ஒரு கேரக்டர். காதலுக்காக நீங்க பண்ற ஒரு விஷயம், உங்க மொத்த வாழ்க்கையையும் பாதிக்குது’னு  சொன்னப்ப, 'அட, இந்த கேரக்டர் என் நிஜ வாழ்க்கைக்குப் பக்கத்துல இருக்கு’னு ஆர்வமா ஒப்புக்கிட்டாங்க!'' என்று சொல்லி விட்டு என் முகம் பார்த்தார் உதயநிதி ஸ்டாலின். சட்டென ஸ்பார்க் அடித்து சுதாரித்து, ''அடடா, நீங்களே நயன்தாரா, காதல், கிசுகிசுக் கேள்விகள் கேட்பீங்க. இதுல நானே ஆர்வக்கோளாறா ஒரு லீடு கொடுத்துட்டேனா?'' என்று சிரிக்கிறார்.  

''வரிவிலக்கு தகராறு, படப்பிடிப்பு அனுமதி மறுப்புனு சிக்கல்களுக்கு நடுவிலும் விடாம நடிக்கிறீங்களே?''

''ஆசைப்பட்டு நடிக்க வந்தாச்சு. 'அட... நல்லாத்தான் நடிக்கிறப்பா’னு எதிர்பார்க்காத நபர்கள்கிட்ட இருந்து வாழ்த்தும் வாங்கியாச்சு. நடிப்பே வரும்போது, மத்த மேட்டர் எல்லாம் ஒரு பிரச்னையா? 'விடுங்க பிரதர்... பார்த்துக்கலாம்’னு இறங்கியாச்சு!

‘ஒன்ஸ்மோர்’ உதயநிதி... ’எஸ்கேப்’ நயன்தாரா!

இப்போ மனசு முழுக்க 'நண்பேன்டா’ ஃபீவர். இயக்குநர் ராஜேஷின் அசோசியேட் ஜெகதீஷ்தான், படத்தின் இயக்குநர். காமெடி... காமெடி... காமெடி மட்டும்தான் படம்! படத்தில் நான் மெய்ஞானி. அதாவது எந்த விஷயத்தையும் மனசுல இருந்து முடிவு எடுக்கிறவன். சந்தானம் ஒரு விஞ்ஞானி. எந்த விஷயத்தையும் அதன் ப்ளஸ், மைனஸ் யோசிச்சு மூளையில் இருந்து முடிவு எடுக்கிறவர். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ல ஸ்லிம் ஜிம் உடம்பு, பாட்டு, சண்டைனு 'ஹீரோ க்ளப்’ல சேர்ந்த பிறகும் எனக்காக 40 நாள் கால்ஷீட் கொடுத்து படம் முழுக்க டிராவல் பண்றார் சந்தானம்!''

'' 'ஓ.கே ஓ.கே.’, 'கதிர்வேலன் காதல்’, இப்போ 'நண்பேன்டா’னு சந்தானத்தை விடவே மாட்டேங்கிறீங்களே!''  

''இப்படிக் கேப்பீங்கனுதான் இந்தப் படத்துல சந்தானத்துக்கு தனி போர்ஷன் கொடுத்துட்டோம். 'வேணாம் மச்சான் வேணாம்’னு நான் அவர்கூட ஆட மாட்டேன். ஏன்னா, அவருக்கே அவருக்குனு ஒரு ஜோடி கொடுத்துட்டோம். 'துள்ளுவதோ இளமை’ ஷெரீன், அவருக்கு ஜோடி. சந்தானம் நடத்துற ஹோட்டல்ல நான் வேலைக்குச் சேர்ந்து அதை டெவலப் பண்ண ஐடியா கொடுப்பேன். ஆனா, எல்லாமே சொதப்பி ஹோட்டல் முன்னாடி இருந்ததைவிட மோசமான நிலைமைக்குப் போயிடும். அப்புறம் ஃபெய்லியரான அவரோட காதலைச் சேர்த்துவைக்கிறேன்னு களம் இறங்குவேன். ஒரே லகலக கலகலதான்!

மனுஷன் எந்த நேரமும் அலர்ட்டாவே இருக்காருங்க. நான் ஹீரோயினைப் பார்த்து ஃபீலாகி, 'சின்ன வயசுல ஸ்ரீதேவி எப்படி இருப்பாங்களோ, அப்படி இருக்காடா மச்சான்’னு சொல்வேன். உடனே, 'எப்படி... விரல் சப்பிக்கிட்டா?’னு டமால்னு கேட்டார். இப்படி சீனுக்கு சீன் ஏற்கெனவே இருக்கிற வசனங்களை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கார்.

‘ஒன்ஸ்மோர்’ உதயநிதி... ’எஸ்கேப்’ நயன்தாரா!

லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கிற நயன்தாராவைத் திருட்டுத்தனமாப் பார்த்துப் பேசிட்டு திடீர்னு அவங்களைக் கட்டிப்பிடிக்கணும். இதுதான் சீன். டேக் மேல டேக் போயிட்டு இருக்கு. சந்தானம் வெறுப்புல பண்ணாரா என்னன்னு தெரியலை, 'போதும் வாங்க பிரதர், சும்மா சும்மா போய்க் கட்டிப்பிடிச்சுட்டே இருக்கீங்க’னு இழுத்துட்டுப் போயிட்டார். இந்த மாதிரி ஆஃப் த ரெக்கார்டு காமெடிகளை வெச்சு மினி சினிமாவே ஓட்டலாம்!''

''நயன்தாரா, காதல், தற்கொலை முயற்சி..? இந்தக் கேள்வி சினிமா பத்தி இல்லை...''

''இதுல ஏதாவது கொஞ்சம் உண்மைனாக்கூட, என்னன்னு சொல்லலாம். வெத்து வதந்திக்கு எல்லாம் என்ன சொல்றது? 'காஜலுக்கும் எனக்கும் ஏதோ கனெக்ஷன். அதனால 'நண்பேண்டா’வுக்காக அவங்களுக்கு நான் தந்த 40 லட்சம் அட்வான்ஸைக்கூட திருப்பி வாங்கிக்கலை’னு ஒரு நியூஸ். ஆனா, காமெடி என்னன்னா, காஜல்கிட்ட இருந்து 40 லட்சத்தை வாங்கிக் கொடுங்கனு நான் தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்திருக்கேன். அதே சமயம் நான் ஹாஸ்பிட்டலுக்குப் போக நயன்தாராவும் ஒருவிதத்துல காரணம். ஆனா, அது தற்கொலை முயற்சி இல்லை. 'நண்பேன்டா’ படத்துல ஒரு ஃபைட் சீன். அதுல நயன்தாராவை நான் சுத்திவிட, அவங்க வில்லனை அறைஞ்சிட்டுத் திரும்ப வர்ற மாதிரி ஒரு காட்சி. ஆனா, நான் சுத்திவிட்டதும் என்னையே அடிச்சிட்டாங்க. அவங்க நகம் என் இடது கண்ல குத்தி ரத்தம் ஊத்திருச்சு. ஹாஸ்பிட்டல்ல சேர்ந்து கட்டுப்போட்டு ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு காயம். அதுதான் நயன்தாராவுக்கும் என் மருத்துவமனை விசிட்டுக்குமான தொடர்பு. இப்படி அரைகுறையா கேள்விப்படுற சம்பவத்துக்கு அவங்களே கதை, திரைக்கதை எழுதிக்கிறாங்க!''

‘ஒன்ஸ்மோர்’ உதயநிதி... ’எஸ்கேப்’ நயன்தாரா!

''கிசுகிசுவுக்கு நயன்தாரா, உங்க மனைவி கிருத்திகாவின் ரியாக்ஷன் என்ன?''

'' 'திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்களா’னு சிரிச்சிட்டே கேட்டாங்க நயன். 'விடுங்க... நம்ம படத்துக்கு பைசா செலவில்லாம பப்ளிசிட்டி’னு சொன்னேன். கிருத்திகாவும் நயன்தாராவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அதனால இதைப் பத்திலாம் கிருத்திகா கண்டுக்கவே இல்லை. ஆனா, சந்தானம்தான்.... ஓட்டு ஓட்டுனு ஓட்டிட்டார். 'ஏன் பிரதர் நயன்தாராவுக்கு லண்டன்ல வீடு வாங்கித் தந்திருக்கீங்க. எனக்கு அவ்வளவு தூரம்லாம் வேணாம்... பக்கத்துல பல்லாவரத்துலயே ஒரு வீடு வாங்கித் தாங்களேன்’னு வம்பிழுத்துட்டே இருக்கார்!''

''அடுத்து இன்னொரு படத்துலயும் நயன்தான் உங்களுக்கு ஜோடினு சொல்றாங்க?''

''அதையும் அப்டேட் பண்ணிக்கிட்டீங்களா?  'என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அஹமத் டைரக்ஷன்ல 'இதயம் முரளி’னு ஒரு படம் பண்றேன். 'யார் ஹீரோயின்’னு நயன்தாரா கேட்டாங்க. 'ஆர்வமாக் கேக்கிறீங்களே... நீங்களே பண்றீங்களா?’னு கேட்டேன். 'ஐயயோ.. ஆளை விடுங்கப்பா’னு சிரிச்சாங்க. அதுதான் கண்ணு, காது, மூக்கு வெச்சு வந்திருக்கும். அந்தப் படத்துல ஹன்சிகா நடிக்கிறாங்க. அதுல சந்தானம் கிடையாது. தம்பி ராமையா, அனிருத், கேமராமேன் மதி... கொஞ்சம் வேற டீம்!''

‘ஒன்ஸ்மோர்’ உதயநிதி... ’எஸ்கேப்’ நயன்தாரா!

''கட்சி நிலவரங்களைத் தெரிஞ்சு வெச்சிருப்பீங்களே! உங்க பெரியப்பா அழகிரி திரும்ப கட்சியில் சேர வாய்ப்பு இருக்கா?''

''ஆளை விடுங்க சாமி. என்னை வம்புல மாட்டிவிடாதீங்க!''

''தம்பி துரைதயாநிதிகூட ராசி ஆகிட்டீங்களா?''

''நாங்க என்னைக்கு சண்டை போட்டோம், இன்னைக்கு ராசியாக? ரெண்டு நாள் முன்னாடிகூட ஹோட்டல்ல பார்த்துப் பேசிட்டு இருந்தோம். அரசியல் எங்களைப் பிரிக்காது. நாங்க எப்பவும் அண்ணன் - தம்பிங்கதான்!''

'''ஸ்டாலினை கன்ட்ரோல்ல வெச்சிருக்கார்... தவறா வழிநடத்துறார்’ அது, இதுனு உங்க தங்கையின் கணவர் சபரீசன் பத்தி வதந்திகள்...''

''மாப்பிள்ளைக்குனு பிரமாதமான, பிரமாண்டமான சாஃப்ட்வேர் பிசினஸ் இருக்கு. ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு அப்பா மேல் உள்ள அன்பினால், அப்பாவின் ஃபேஸ்புக் பக்கம், இணையதளம்னு தன்னை ஈடுபடுத்திட்டு இருக்கார். அவரோட புரிதல், அர்ப்பணிப்பு அப்பாவுக்கும் எனக்கும் தெரியும். மத்தவங்களுக்கும் அது தெரிஞ்சிருக்கும்னு நாம எதிர்பார்க்க முடியாது!''