""பட டைட்டிலே பட்டாசாக இருக்கிறது. 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தோட 'கொலகாரா...’ பாடல் பெருசாப் பேசப்பட்டது. இப்போ 'கன்னியும் காளையும் செம காதல்’ படமே பெருசா பேசப்படும்!'' - வார்த்தைகளில் உற்சாகம் காட்டுகிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்

''நாட்டரசன்கோட்டைக்கு நான் ஒருமுறை போயிருந்தப்ப, ஒருத்தரை சங்கிலியில் கட்டி பாண்டிமடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா, ஆள் பளிச்சுனு இருந்தார். விசாரிச்சா, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்னு சொன்னாங்க. இத்தனைக்கும் அவர் ஒரு சமஸ்தானத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். முன்ஜென்ம சாபமோ என்னவோ அவர் இப்படி ஆகிட்டார். மனநலம் பாதிச்சுருந்தாலும் மன்னர் பரம்பரைங்கிற கர்வம் அவர்கிட்ட நிறையவே இருந்துச்சு. இதை மையமா வெச்சு இந்தப் படம் பண்ணியிருக்கேன். ஒரு மனிதனை எவ்வளவு வேணும்னாலும் குற்றம் சொல்லலாம். ஆனா, ஏதோ ஒரு காலகட்டத்துல குற்றம் சுமத்தியவனையும் அந்தக் குற்றம் தாக்கும். ஜமீன்தார்களின் பாழடைஞ்ச பரம்பரை கட்டடங்களுக்குப் பின்னால் இருக்கும் எச்சங்கள், சுவடுகள், ரத்த வரலாறு இவைதான் இந்தப் படத்தோட பின்னணி. கதை 18-ம் நூற்றாண்டில் ஆரம்பிச்சு நிகழ்காலத்துல முடியுது!''

''இவ்வளவு கனமான களத்துக்கு ஏன் இப்படி ஒரு டைட்டில்?''

''கனமான பின்னணி இருந்தாலும், அது படத்தில் சின்ன போர்ஷன்தான். இப்போ நிகழ்கால காதல், அதுக்கு வர்ற பிரச்னைகள்தான் படம். 99 சதவிகிதம் சிரிச்சுக்கிட்டே சிந்திக்கிற மாதிரியும், ஒரு சதவிகிதம் கனமான களத்தையும் பதிவுசெய்ற படம் இது!''

''இந்தப் படத்துக்கு கரண் எந்த அளவுக்கு பொருத்தமா இருக்கார்?''

''வழக்கமான சினிமா இல்லாம தேடல், புதுமைனு ஓடிக்கிட்டே இருக்கிறவர் கரண். நானும் அவரும் ஒரே மாதிரியான அலைவரிசையில் இருப்பதால், ரெண்டாவது முறையா இணைஞ்சிருக்கோம். இந்தப் படம் நிச்சயம் எங்க ரெண்டு பேருக்கும் அழுத்தமான அடையாளத்தைக் கொடுக்கும்!''