Published:Updated:

களேபர கற்பனைகள்: ரஜினி - கமல் கேரக்டர்கள் `மீட்', தமிழக பா.ஜ.க-வில் தோனி சேர்ந்தால்..?

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

கமல் சினிமாவுக்கு வந்து 61 ஆண்டுகள்... ரஜினி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவு! இந்த சுபயோக சுபதினத்தில் இருவர் நடித்த கேரக்டர்களும் சமூக இடைவெளியுடன் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் எனச் சிந்தித்தோம். அந்தக் களேபர கற்பனை...

வேலு நாயக்கர்: நாலு பேருக்கு நல்லதுன்னா நாப்பதஞ்சு வருஷம் கொண்டாடலாம் தப்பேயில்லை. உங்க 45 வருஷத்துக்கு 4, 5 வரியில ஒரு கவிதை சொல்லவா?

வசீகரன்: ந்நோ, அது மட்டும் வேணாம். அப்புறம் சிட்டி தன்னைத்தானே டிஸ்மாண்டில் பண்ணிக்கும். ஆமா நான் 45 வருஷம் கொண்டாடினது இருக்கட்டும். நீங்க என்ன 61?

'தசாவதாரம்' விஞ்ஞானி கோவிந்தன்: அறுபதும் இல்லாம எழுபதும் இல்லாம மய்யத்தில 61 கொண்டாடலாம்னு முடிவு பண்ணினேன்னு சொன்னா நல்லாருக்கும். ஆனா அது காரணமில்லை. நீங்கபாட்டுக்கு சம்பந்தமில்லாம ரஜினி 45ன்னு கொண்டாட ஆரம்பிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்?

தசாவதாரம் வில்லன் பிளெட்சர்: பயோ வார் உருவாகணும்னு நான் கிருமியைக் கொண்டுவந்து மூக்கில ரத்தம் வந்து, நாக்கில நீலம் வந்து செத்துப் போயிட்டேன். அதுக்குப் பிறகு உண்மையாவே கொரோனா கிருமியே வந்துடுச்சு. ஆனா நீங்க சொன்ன போரும் வரலை, நீங்களும் அரசியலுக்கு வரலை. ஒய் திஸ் கன்ஃப்யூஷன்?

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

'காலா' ரஜினி: விதை யார் வேணும்னாலும் போடலாம். ஆனால் நிலம் எங்கள் உரிமை. கறுப்பு உழைக்கும் மக்களின் நிறம்!

'தர்பார்' ரஜினி: நீ வேற ஏன்பா அடிக்கடி வைப்ரேட் ஆகிறே? இப்படி உரிமை, கிரிமைன்னு போராடிக் கிட்டிருந்தா நாடு சுடுகாடு ஆகிடும். இந்த மாதிரி சமூகவிரோதிகள் இந்த மீட்டிங்ல எப்படி ஊடுருவினாங்க? அப்புறம் மனித உரிமைக் கழகத் தலைவியை மிரட்டின மாதிரி கன்பாயின்ட்ல மிரட்ட வேண்டிவரும் காலா, கொஞ்சம் அமைதியா உக்காருவீங்களா?

உத்தம வில்லன்: நண்பர் ரஜினி, நீங்களே உங்களுக்கு எதிரா ரெண்டு வில்லனை உருவாக்கி வெச்சிருக்கீங்க. பக்கும் பகபக பக்கும் பகபக உத்தம வில்லன்!

- இவங்களோட 'ஹே ராம்' சாகேத் ராம், ரஜினி ராகவேந்திரா, சிட்டி ரோபோ, வசூல்ராஜா, 'அன்பே சிவம்' நல்லசிவம், அருணாசலம், ராமானுஜ நம்பி, கபாலி ரஜினி, 16 வயதினிலே சப்பாணி, 'வேட்டையாடு விளையாடு' ராகவன் ஆகியோரின் என்ட்ரியையும் உள்ளடக்கிய கம்ப்ளீட் ஸ்டோரியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > சிரித்தாலே இனிக்கும்! https://bit.ly/3jjCtap

தமிழக பா.ஜ.க-வில் தோனி சேர்ந்தால்..?

சும்மாவே தோனி பா.ஜ.க-வில் சேரப்போகிறார் என்ற தகவல்கள் பறக்கின்றன. ஒருவேளை நிஜமாகவே சேர்ந்து சென்னைக்கும் அவருக்குமான நெருக்கத்தில் தமிழக பா.ஜ.க-வுக்கே பொறுப்பாளராக வந்துவிட்டால் என்ன நடக்கும்?

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ராஞ்சியின் வேங்கையை மனதார வரவேற்கிறது. அவர் ஆளலாமா கூடாதா என்பது வேறு. ஆனால் அன்புத்தம்பி, என் 'தம்பி' படத்தின் நாயகனைப் பார்த்து கவரப்பட்டுத்தான் அதே முறையில் முடிவளர்க்கத் தொடங்கியதாகவும் களத்தில் கோபத்தை வரித்துக்கொண்டதாகவும் ஒருமுறை குறிப்பிட்டார். பதிலுக்கு நன்றியுரைக்கும்விதமாக நான் சிறுவயதில் கற்றுக்கொண்ட சிலம்பத்தை அவருக்குச் செய்து காட்டினேன்.

Dhoni in BJP
Dhoni in BJP

அசந்துபோன அவர், 'இதை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா?' எனக் கேட்டார். நான் ஆமோதிக்க அந்தக் கணத்தில் பிறந்ததுதான் அவரின் உலங்கு வானூர்தி அடி' என சீமான் சிலிர்ப்பார். 'ஐயோ இந்தக் கையாலயா ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சோம்' என தோனி திரும்ப ரிட்டையர்டு ஆகவும் வாய்ப்பிருக்கிறது.

- இது வெறும் ட்ரெய்லர்தான்... மெயின் பிக்சர் இங்கே > விசில் போட்ட தோனிக்கு ஓட்டைப் போடு! https://bit.ly/2YD2WI8

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு