Published:Updated:

கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!

கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!
பிரீமியம் ஸ்டோரி
கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!

ஒட்டுமொத்த உலகத்துக்கும் OTT-யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்.

கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!

ஒட்டுமொத்த உலகத்துக்கும் OTT-யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்.

Published:Updated:
கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!
பிரீமியம் ஸ்டோரி
கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!
இதுவரை அம்மாம்பெரிய வெள்ளைத்திரையில் மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்த படங்கள், இப்போது தம்மாத்துண்டு செல்போன் திரையிலேயே வெளியாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலை இன்னும் மாறி, OTT பிளாட்பாரத்தில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் ரிலீஸானால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என க்வாரன்டீனில் குதர்க்கமாக யோசித்ததில்...

அண்டாவில் கொண்டுவந்து பால் ஊத்தச் சொல்வது, பால் என சுண்ணாம்பை ஊற்றி கண்களை காலி செய்வது, பால் பாக்கெட்கள் திருடுவது போன்ற அநியாயங்கள் எல்லாம் OTT ரிலீஸில் நடக்கவே நடக்காது. வீட்டுக்குள் உட்கார்ந்துக்கொண்டு நாம் பால் ஊத்தினால், நமக்கு வீட்டில் பால் ஊத்துவது உறுதி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தியேட்டர் வாசல்களில் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி சிலையைவிட உயரமான கட்-அவுட்கள் வைக்கும் களேபரங்கள் நடக்காது. விஜய்க்கும் அஜித்துக்கும் சிலை வைக்கிறேன் என, தாடிபாலாஜிக்கும் மதன்பாபுக்கும் சிலை வைக்கும் வைபவமும் அரங்கேறாது. `கட்-அவுட் வைக்காம படம் பார்த்தா, கை நடுங்குமே தலைவா’ வகையறாக்கள், பேப்பர் கட்டிங்கை வாசக்கதவில் ஒட்டிவிட்டு சூடம் சுற்ற வேண்டியதுதான் கடவுளே... என் தெய்வமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சிங்கப்பூர்ல இருக்கிற என் சித்தப்பா போன் பண்ணுனார். சிங்கப்பெண்ணே பாட்டு படத்துலேயே வரலையாம்’ என இல்லாத சிங்கப்பூர் சித்தாப்பக்கள் இல்லாத நம்பரிலிருந்து இல்லாத மகனுக்கு போனைப்போடும் கொடுமை எல்லாம் ஹூஹும். ஒட்டுமொத்த உலகத்துக்கும் OTT-யில் ஒரே நேரத்தில் ரிலீஸ். வேண்டுமானால், இங்கே நாம் பகலில் படம் பார்த்துவிட்டு, அமெரிக்காவில் படுத்துறங்கும் பெரியப்பாவுக்கு போனைப்போட்டு அலப்பறையைக் கூட்டலாம்.

கட்-அவுட்டுக்கு கெட்-அவுட்!

ஹீரோவின் அம்மா காய்கறி வாங்கச் செல்லும் காட்சிக்குக்கூட நம் ஆட்கள் நரம்புபுடைக்கக் கத்திக்கொண்டிருப்பார்கள். வேறு வழியின்றி வசனம் புரியாத அத்தனை பேரும் காது, மூக்கு, தொண்டை வலியோடு இன்னொரு முறையும் பார்க்கக் கிளம்புவர். OTT-யில் அந்தப் பிரச்னையே இல்லை. வசனம் புரியலையா அடி ரீவைண்டு!

FDFS பார்க்கச் செல்லும் சில பக்கிகள், டைட்டில், இன்டர்வெல், ட்விஸ்ட், ஸ்பாயிலர், க்ளைமாக்ஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லி என அத்தனையையும் வீடியோ எடுத்து வாட்ஸப்பில் ரயில் விடுவார்கள். செல்போன் கேமராவில் எடுக்கப்பட்டு சிசிடிவி ஃபுட்டேஜ்களைவிடக் கண்றாவியாக இருக்கும் அந்த வீடியோக்களைப் பார்த்தாலே நமக்கு மூளை வலிக்கும். இதுவே OTT-யில் ரிலீஸ் என்றால் அவ்வளவுதான், ஹைபிக்சலில் புல்லட் ரயிலே விடுவார்கள்.

ஓவர் நைட்டில் ஓவியாவைவிடப் பிரபலமாக நினைத்தால், ஏதேனும் மாஸ் ஹீரோ படத்துக்கு FDFS டிக்கெட் எடுத்தால் போதும். `படம் எப்படி ப்ரோ’ என வெளியில் நின்று மைக்கை நீட்டுபவர்களிடம், `அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்’ போன்ற கருத்துகளை உதிர்த்துவிட்டால், நாம்தான் அன்று தமிழக டிரெண்டிங். இதுவே, OTT-யில் ரிலீஸ் என்றால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. புது மீம் டெம்ப்ளேட்களும் பிறக்காது.

`ஃபர்ஸ்ட் ஹாஃப் தாறுமாறு, செகண்ட் ஆஃப் தக்காளிச்சோறு’ என ஆஃப் பிரிக்கும் வேலைகளுக்கு இடமில்லை. ஹீரோ-ஹீரோயினின் மூக்கும் மூக்கும் இடித்த கொடுமைக்கு எல்லாம் ஃபாரீனில் பாடும் டூயட்களை, நான்கு அமுக்கு, இரண்டு குமுக்கில் ஸ்கிப் செய்துவிடலாம். ஹப்பாடா! படம் பார்க்கும்போது கொட்டாவியே வந்தாலும், படத்தை நிறுத்திப்போட்டு வரக்காப்பி போட்டுக்குடித்து சுறுசுறுப்பாகி மீண்டும் தொடரலாம்!

படம் வசூல் `100 கோடிப்பே, 150 கோடிப்பே!’ எனக் கோடிக்கணக்கில் நிகழும் ரசிகச்சண்டைகள் இனி நடக்காது. அதற்கு பதிலாக, `அத்தனை பேர் பார்க்குறாகப்பே, நம்பர் ஒன் டிரெண்டிங்குப்பே’ எனப் புதுவிதமாய்க் கிளம்புவார்கள். இந்த ஹீரோவின் படத்தை ரிலீஸ் செய்ததால்தான், இத்தனை பேர் புதிதாக அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் எனச் சின்னதாய்க் கொளுத்திப்போட்டால் போதும், அதற்கு மேல் அந்த OTT-ஆப்பின் வளர்ச்சியை நம் ரசிகப் பெருமக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism