Published:Updated:

மனிதன் vs WILD

மனிதன் vs  WILD
பிரீமியம் ஸ்டோரி
மனிதன் vs WILD

`நான்தான்பா ரஜினிகாந்த்’னு ஸ்டைலா ஒரு சிரிப்பு சிரிச்சார்.

மனிதன் vs WILD

`நான்தான்பா ரஜினிகாந்த்’னு ஸ்டைலா ஒரு சிரிப்பு சிரிச்சார்.

Published:Updated:
மனிதன் vs  WILD
பிரீமியம் ஸ்டோரி
மனிதன் vs WILD

ம் சூப்பர் ஸ்டார் சிங்கநடை போட்டுச்சென்ற `மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்குமென பியர் கிர்ல்ஸைப் பிடித்துக் கற்பனையாகக் கேட்டால், அவரும் கற்பனையாக ஏதும் சொன்னால்... முழுக்க முழுக்கக் கற்பனை மட்டுமே நிறைந்த கலாய் `மேன் வெர்சஸ் வைல்டு’ இது. பறக்காஸ்!

வணக்கம் நண்பர்களே, இன்னைக்கு நான் கர்நாடகாவின் பந்திப்பூர் காடுகளில் எப்படி உயிர்பிழைக்கிறதுன்னு உங்களுக்குச் சொல்லித்தரப் போறேன். சீமானின் இலங்கைப் பயணத்தைவிட பல சாகசங்கள் நிறைந்த பயணமா இது இருக்கப்போகுது. நானும் என் கேமராமேன் ஜேக்கும், தரையிறங்குவதற்கான இடத்தைத் தேடிட்டிருக்கோம். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் ஒருத்தரும் எங்க கூட கலந்துக்கப்போறார். அவர் யார்னு ஒரே ஒரு க்ளூ தரேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, இந்த நிகழ்ச்சியில் அவரைக் கலந்துக்கச் சொல்லிக் கேட்டப்போ, `வருவது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’னு சொல்லி, கையெடுத்து பெரிய கும்பிடு வெச்சார். யெஸ், அவரேதான்... இது `மேன் வெர்சஸ் வைல்டு!’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதோ எங்க ஹெலிபேட். ஆனால், அதில் யாரோ ஒருத்தர் பாயைப் போட்டுப் படுத்திருக்கார். தொப்பியும், கூலிங் கிளாஸும் போட்டுக்கிட்டு செம ஸ்டைலாவும் இருக்கார். எனக்கு இப்போ பயங்கரமான ஆர்வம் தொத்திக்கிச்சு. ஓ மை காட்... அது மிஸ்டர் வாட்டாள் நாகராஜ். அவர்தான், அந்நியர்களான நாங்க தரையிறங்கக் கூடாதுன்னு போராட்டம் பண்ணிட்டிருக்கார்.

மனிதன் vs  WILD
மனிதன் vs WILD

`நாங்க மைசூர் சாண்டல் சோப் வாங்கதான் வந்திருக்கோம்’னு சொன்னால், எங்களைத் தரையிறங்க விட வாய்ப்பிருக்கு. நல்ல யோசனை. நாங்க எதிர்பார்த்த மாதிரியே, எங்களை தரையிறங்க அனுமதிச்சுட்டார். `ஓஹுவாகா, மைசூர் போண்டா திந்துட்டு ஓஹு’னு எங்களுடன் ஹைஃபை அடிச்சுட்டுக் கிளம்பிட்டார் மிஸ்டர் வாட்டாள். பந்திப்பூர்க் காடுகளின் அச்சுறுத்தல் இங்கே இருந்தே தொடங்கிடுச்சு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கிருந்து வருது இந்தச் சத்தம்? `டெர்மினேட்டர்’ படத்துடைய தீம் மியூசிக்தானே இது! நம்ம சிறப்பு விருந்தினர் அர்னால்ட் இல்லையே! மன்னிச்சுடுங்க நண்பர்களே, மிஸ்டர் ஜேக் இப்போதான் அந்த விஷயத்தைச் சொன்னார். `டெர்மினேட்டர்’ தீம் மாதிரி மாஸா ஒரு தீம் வேணும்னு கேட்டதுக்கு, `அது மாதிரி எதுக்கு, அதையே போட்ருவோம்’னு தேனிசைத் தென்றல் தேவாதான் `பாட்ஷா’ படத்தில் இந்த வேலையைப் பார்த்திருக்கார். அப்போ வர்றது நம்ம சிறப்பு விருந்தினர்தான். `வழி மேல எங்கள் விழி வைத்துக் காத்திருக்கிறோம் தலைவா! தடம் பதித்து வா!’ன்னு பிஜிலி ரமேஷ் இந்தக் காட்டுக்குள்ளே எப்படி பேனர் வெச்சார்னு தெரியலை. ஆனால், நாங்களும் வழி மேல்தான் விழிவெச்சுக் காத்திருக்கோம்.

`நான்தான்பா ரஜினிகாந்த்’னு ஸ்டைலா ஒரு சிரிப்பு சிரிச்சார். மை காட், நம்ம சிறப்பு விருந்தினர் வந்துட்டார். நாம் வழக்கமான வழியைப் பார்த்துட்டிருந்தோம். ஆனால், `நான் தனி வழியிலதான் வருவேன்’னு சொல்லி 6 கிலோ மீட்டர் வெட்டியா சுற்றி வந்திருக்கார். ரியலி சர்ப்ரைஸ்! அவர் வந்ததும் வாட்டாள் நாகராஜ் நடத்திய போராட்டம் பற்றிச் சொன்னோம். `தமிழ்நாட்டுல பெரியாரைப் பத்தி ஏதாவது சொல்லணும்னா சொல்றேன். கன்னடத்துக் காரங்க டேஞ்சர்ஸ். மன்னிப்பு கேக்கவெச்சு உக்கி போடவைப்பாங்க’ன்னு டென்ஷன் ஆகிட்டார். இனி அவரைக் கோபப்படுத்தக் கூடாதுன்னு நானும் ஜேக்கும் முடிவு பண்ணிட்டோம். நேத்து நைட், அவர் நடிச்ச `அன்னை ஓர் ஆலயம்’ படம் பார்த்தேன். யானை, சிறுத்தை, புலின்னு மாஸ் பண்ணியிருந்தார். அதுமாதிரி ஒரு மாஸ் சீக்வென்ஸ், இன்னைக்கு நடக்கும். நான் இதைப்பத்தி யோசிச்சுட்டிருக்கும் போது, `குக்கூ...’ன்னு ஒரு சத்தம். `இந்தக் காடுகள்ல நிறைய குயில்கள் இருக்குன்னு நினைக்கிறேன்’னு சொன்னேன். `நான்தாம்பா கத்தினேன்’னு மறுபடியும் ஸ்டைலா ஒரு சிரிப்பு சிரிச்சார். இந்தமுறை மூவரும் கத்தினோம், `குக்கூ...’

‘பந்திப்பூர்க் காடுகளுக்குப் பதிலா, இமயமலையைத் தேர்ந்தெடுத்திருந்தால் நான்தான் உங்களுக்கு வழிகாட்டியிருப்பேன்’னு சந்தோஷமா பேசிட்டு வந்தார். ஆனால், திடீர்னு அவர் கேட்ட கேள்வி எங்க சந்தோஷத்தைப் பறிச்சுடுச்சு. `அனிமல் பிளானட்ல உங்க நிகழ்ச்சிகளை வாராவாரம் பார்த்துடுவேன்’னு சொன்னார். எனக்கு அதைக் கேட்டதும் உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு. `சார், நாங்க டிஸ்கவரி சேனல்லதான் வருவோம்’னு சொன்னேன். `அனிமல் ப்ளேனட்லாம் அனிமல் லவ்வர்ஸ்தான் பார்ப்பாங்க. ஆனால், டிஸ்கவரி அறிவாளிங்க பார்ப்பாங்க. சில விஷயத்தை மறுக்கக்கூடாது, மறக்கணும்’னு ஏதோ சொல்லி சமாளிச்சுட்டார். அவர்கிட்டே நம்ம ஜேக் இன்னொரு கேள்வி கேட்டார். `ஏன் சார், `பாபா’ படத்துல ஏழு மந்திரம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த ஏழாவது மந்திரமா, `இன்னும் இதேமாதிரி எனக்கு எழுபது மந்திரம் வேணும்னு கேட்டிருக்கலாமே’ன்னு கேட்டார். `என்னப்பா இப்படிக் கேட்குறீங்க, என் தலையே சுத்துது’ன்னு சுத்திமுத்தி பார்த்துட்டு அங்கேயே உட்கார்ந்துட்டார் நம்ம சிறப்பு விருந்தினர். ஒருவழியா அவரை உற்சாகப்படுத்திக் கூட்டிட்டுப்போனோம்.

மனிதன் vs  WILD
மனிதன் vs WILD

இது உணவு அருந்துவதற்கான நேரம், இந்தக் காட்டுக்குள்ளே புலிகளின் நடமாட்டம்தான் அதிகம் இருக்கு. `சார், புலிச்சோறு சாப்பிடலாமா’ன்னு கேட்டேன். `அதுக்கென்னப்பா, தாராளமா சாப்பிடலாம். நிலக்கடலை மட்டும் கொஞ்சம் நிறைய போடுங்க’ன்னு சொன்னார். எனக்கு கோவம் வந்திடுச்சு. `இது என்ன, குக் வித் கோமாளியா, இல்லை, மேன் வெர்சஸ் வைல்டா?’ன்னு கேட்டுட்டேன். `ஏது கோமாளியா?’ன்னு அவரும் டென்ஷன் ஆகிட்டார். அதுக்கு என்ன காரணம்னு எனக்குப் புரியலை. ஒருவழியா அவருக்குக் கப்பக்கிழங்கும் கடலைக்கறியும் சமைச்சுக் கொடுத்தோம். விரும்பிச் சாப்பிட்டார். அவர் பைகள்ல சில பேப்பர்கள் இருந்துச்சு. `என்ன பேப்பர்ஸ் சார் இது. கை தொடச்சுக்கலாமா?’ன்னு ஜேக் கேட்க, `யெப்பா, இது பந்திப்பூர்க் காடுகளின் புளூப்ரின்ட்பா. ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்தேன்’னு எங்களுக்குக் காண்பிச்சார். பேப்பர் முழுக்க வெறும் கறுப்பு கலரா இருந்தது. காடுகளுக்குள்ளே ஏது ரோடு, கறுப்பா இருக்குறது எல்லாம் மரங்கள். கலர் ஜெராக்ஸ் அடிச்சிருந்தால்கூட, பச்சைக் கலர்ல தெரிஞ்சுருக்கும். காசை இப்படிக் கறுப்பு கலர்ல கரியாக்குறாரேன்னு வருத்தமாப்போச்சு எனக்கு!

நாங்கள் செல்லும் வழியில், பழங்காலத்துக் கல்வெட்டு ஒண்ணு கிடைச்சது. இது பலநூறு வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டுன்னு பார்த்ததும் புரிஞ்சுக்க முடிஞ்சது. மிஸ்டர் ஜேக்தான் எங்களுக்காக அதைப் படிச்சுக் காண்பிச்சார். `போர் வரட்டும்’ன்ற எழுத்துகளோடு கல்வெட்டு ஆரம்பிச்சது. இது நிச்சயம், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு கல்வெட்டா இருக்கும்னு எங்களுக்கு ஆர்வம் தொத்திக்கிச்சு. மொகலாயப் போரா, கலிங்கப் போரான்னு ஆர்வம் ஆனோம். `போர் வரட்டும். நான் வருவது உறுதி. தேதி, பின்னர் அறிவிக்கப்படும்’னு அதில் எழுதியிருந்தது. மை காட்! அப்போதான் நான் உணர்ந்தேன். நம்ம சிறப்பு விருந்தினர், காலங்களைக் கடந்து நிற்பவர்னு.

நான் அதைப் பண்ணியிருக்கக் கூடாது, நிச்சயம் பண்ணியிருக்கக் கூடாது. அவருடைய மூக்கு முக்கோண வடிவத்தில் இருந்தது. எல்லோருடைய மூக்கும் அப்படித்தான் இருக்கும்ங்கிறதை ஏனோ நான் மறந்துட்டேன். அவரைப் பார்த்து `நீங்க இலுமினாட்டியா’ன்னு கேட்டேன். அவர் எந்தப் பதிலும் சொல்லலை. `ஏன் எல்லாப் பத்திரிகையாளர் சந்திப்பிலும், ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும் பேசுறீங்க’ன்னு மிஸ்டர் ஜேக் கேட்க, அவர் பக்கத்தில் இருந்து ஈயக் குண்டாவை எடுத்து வீசிட்டார். `ஹே வேற ஏதாவது கேள்வி இருக்கா’ன்னு இப்போ ரொம்ப ரொம்பக் கடுப்பாகிட்டார். `எங்கிட்டே லெஃப்ட்ல வெச்சிக்கோ, ரைட்ல வெச்சிக்கோ. ஆனால், ஸ்ட்ரைட்டா வெச்சிக்காத’ன்னு ஜேக் கிட்டே பன்ச் ஒண்ணு பறக்கவிட்டு, `எப்போ ஹெலிகாப்டர் வரும். நான் கிளம்பணும்’னு சொன்னார். `நான், வராத விருந்தாளி வந்திருக்கீங்க. இருங்க சார், நைட் உடும்புக்கறி சாப்பிட்டுப் போலாம்’னு சொன்னேன். `அதெல்லாம் முடியாது’ன்னு சொன்னார். `சரி, உடும்புக்கறி வேணாம்னா, கரும்புச்சாறாவது குடிச்சுட்டுப் போங்க’ன்னு சொன்னேன். அவர் கேட்கலை. நேரா, மலையுச்சிக்கு ஓடிப்போய், அங்கிருந்து ஒரு `பறக்காஸ்’னு சொல்லி ஒரு பாராசூட்டுக்குத் தவ்வி பல்லாவரத்தில் லேண்ட் ஆகியிருக்கார். ஓ காட், அந்த ஸ்டைலும் அழகும் அவரை விட்டுப் போகவே இல்ல.

நண்பர்களே, பந்திப்பூர்க் காடுகள்ல இருந்து பாராசூட்டை எப்படிப் பிடிக்கிறதுன்னு நம்ம சிறப்பு விருந்தினர் உங்களுக்குச் செய்து காண்பிச்சார். இதுமாதிரியான ஒரு அசாத்திய நிகழ்ச்சியை நானும் பண்ணுனதில்லை. அடுத்து, சீமானுடன் சேர்ந்து ஆமைக்கறி, 600 யானை, ஆஸ்திரேலிய அரிசிக் கப்பல்னு சாகசப் பயணம் ஒண்ணு நிகழ்த்தப்போறேன். என்னை ஆசீர்வதியுங்கள் ப்ரெண்ட்ச்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism