
“நம்ம கட்சிக்கரை வேட்டி, சேலைக்கு ஆடித்தள்ளுபடி தராத ஜவுளிக்கடைக்கு முன்னால போராட்டம் அறிவிச்சிருக்கார் தலைவர்!”
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
“ஆடி மாசம்னு புதுஜோடியைப் பிரிச்சு வைக்க வேண்டியதுதான், அதுக்காக ஃபேமிலி வாட்ஸ்-அப் குரூப்ல இருந்தே தூக்குனது டூ மச்!”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஆடித்தள்ளுபடி அறிவிக்கலைன்னு அந்த ஜவுளிக்கடைமேல பொதுநல வழக்கு போட்டிருக்காங்களாம்!”

“தலைவரோட பையனை இளைஞரணித் தலைவராக்கிட்டுப் பேரனுக்கு சிறுவர் அணித்தலைவர்னு புது போஸ்டிங் குடுத்துட்டாங்களாமே?!”
“இது ஆடித்தள்ளுபடி ஆஃபராம்!”

“அந்த ஜோசியர்கிட்ட ஏன் கூட்டம் அள்ளுது?”
“ஆடி மாசம் ஜோடியைப் பிரிச்சு வைக்காம, சேர்க்கிறதுக்கு ஸ்பெஷல் பரிகாரம் சொல்றாராம்!”
“அவங்க கடை சேலையைக் கட்டிக்கிட்டு டிக்டாக்ல டான்ஸ் பண்ணினா 90% தள்ளுபடி தர்றாங்களாம்!”

“அனைத்துக் கடைகளிலும் ஆடித்தள்ளுபடி விற்பனையைக் கட்டாயமாக்குவதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று என் மனைவி சார்பாக வலியுறுத்துகிறேன்!”