Published:Updated:

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”

‘`ஹிப்ஹாப் ஆதி வீடியோவுக்கு வந்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டேன்.

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”

‘`ஹிப்ஹாப் ஆதி வீடியோவுக்கு வந்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டேன்.

Published:Updated:
“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”
கலாய்த்தலும் கலாய்த்தல் நிமித்தமுமாக இருப்பவர்கள் ஸ்டாண்ட் அப் காமெடியன்ஸ். தமிழ் ஸ்டாண்ட் அப் பட்டியலில் லேட்டஸ்ட் ஹிட் ஹாட் ஷோ ‘அக்காடம்மி அவார்ட்ஸ்.

’ ’நாங்க நாலு பேரு... எங்களுக்கு பயம்னா என்னான்னு தெரியாது’ என்கிற ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவைக் கலாய்த்துத் தள்ளியிருக்கிறது பிரவீன், ஜெகன், மனோஜ், மெர்வின் கூட்டணி. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி தொடங்கி ஹாரிஸ், ஹிப்ஹாப் ஆதி என எல்லோரையும் இவர்கள் இந்த ஷோவில் சம்பவம் செய்ய, அந்தச் சம்பவத்துக்குப்பிறகு அவர்கள் வாழ்க்கையிலும் பல மறக்கமுடியாத சம்பவங்கள். நால்வரையும் ஒரு வீடியோ காலில் இணைத்துப் பேசினேன்!

முதலில் ஆரம்பித்தவர் பிரவீன். ‘`காலேஜ்ல இருந்து ஸ்டேஜ் ஏறி காமெடி பண்ணிச் சிரிக்க வெச்சது ஒரு போதையைக் கொடுத்துச்சு. நண்பர்களவிட, தெரியாதவங்களைச் சிரிக்க வைக்கும்போது கூடுதல் சந்தோஷம் கிடைக்கும். அது தொடர்ந்து கிடைக்கணும்னு ஆசைப்பட்டுதான், இதைத் தொடர்ந்து பண்ணலாம்னு ஆரம்பிச்சோம்’’ என்றதும் ஜெகன் உள்ளே வந்தார். ‘ஸ்டாண்ட் அப் காமெடிங்கிற ஒரு விஷயம் இருக்குன்னு லேட்டாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் வேலை பார்த்த ஆபீஸில் நடந்த ஒரு ஈவென்ட்டில் பேசி, காமெடி பண்ணினேன். அப்போ எனக்குக் கிடைச்ச மோட்டிவேஷன்தான், இப்போ நான் இந்தத் துறையில் இருக்கிறதுக்குக் காரணம்’’ என்றவரைத் தொடர்ந்தார் மனோஜ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எனக்கு கிரியேட்டிவ்வான விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதுக்குப் பல மீடியம் இருந்தாலும், நான் பெரிய சோம்பேறிங்கிறதனால ஸ்டாண்ட் அப் காமெடி பக்காவா செட்டாச்சு. சினிமாவில் ஜெயிக்கணும்ன்னா அதிகமா வேலை பார்க்கணும். ஆனால், இங்க அப்படியில்லை. நமக்குத் தோணும்போது, ஸ்கிரிப்ட் எழுதலாம்; ஷோ பண்ணலாம்’’ என மனோஜ் சொல்லி முடித்ததும், ‘`அதுக்காக இந்தத் துறையே சோம்பேறித்தனமானதுன்னு யாரும் நினைச்சுக்காதீங்க’’ என்று டிஸ்க்ளைமரைப் போட்டபடி பேச ஆரம்பித்தார் மெர்வின்.

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”

``நாம பேசுறதைக் கேட்டு சில பேர் சிரிக்கிறாங்கன்னு எனக்குத் தெரிஞ்சதுல இருந்தே இதில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். அதே சமயம், இதைத்தவிர நமக்கு வேற எதுவும் வராதுன்னும் புரிய ஆரம்பிச்சது’’ என்றார்.

‘`காமெடி பண்ணலாம்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு டிவி சேனல்களுக்கு முயற்சி பண்ணுனீங்களா?’’ என மெர்வினிடம் கேட்டேன்.

``எல்லாருமே ட்ரை பண்ணினோம். எங்களை எடுத்துக்கலை. அந்தச் சமயத்தில்தான், ஓப்பன் மைக் ஷோஸ் எல்லாம் தமிழ்நாட்டுல ஹிட்டாக ஆரம்பிச்சது. யூடியூப் ஃபேமஸ் ஆச்சு. நம்ம திறமைகளைக் காட்ட யூடியூப் சேனல்களே போதும்னு முடிவு பண்ணினோம். அதுக்கப்பறம் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் வந்துச்சு’’ என்ற மெர்வினைத் தொடர்ந்தார் ஜெகன்.

``டிவி காமெடிக்கு வாரத்துக்கு ஒரு கன்டென்ட் எழுதணும். ஸ்டாண்ட் அப் காமெடியன்ஸ்கிட்ட வாரத்துக்கு ஒரு கன்டென்ட் கொடுங்கன்னு பிரஷர் கொடுத்தால், பயந்துடுவோம். ஆடியன்ஸ் முன்னாடி காமெடி பண்ணி, அவங்க ரசிக்கிறதை நேரில் பார்த்திருக்கோம். அது டிவியில் கிடைக்காது. ஆனா டிவி ஜாம்பவான்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமா இருக்கும். `எப்படிடா, இவங்க வாரம் ஒரு கன்டென்ட் எழுதி, அதை மாஸ் ஆடியன்ஸுக்குப் பிடிக்கிற மாதிரி கொடுக்கி றாங்க’ன்னு அவங்க மேல மரியாதையும் இருக்கு’’ என்றதும், ‘`பாலிவுட் ஸ்டாண்ட் அப் காமெடியன்ஸ் `AIB’ டீம்தான் உங்க இன்ஸ்பிரேஷனா?’’ என பிரவீனிடம் கேட்டேன்.

‘` `AIB’ மட்டும் இல்ல. மும்பையில நிறைய பேர் இப்படி டீமா ஷோ பண்ணுறாங்க. தமிழ்நாட்டிலும் நிறைய டீம் இருக்கு. ஆனால், நாங்க டீமா சேர்ந்து ஷோ பண்ணணும்னு நினைச்சது, ‘அகாடம்மி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சிக்காகத்தான். காமெடி அவார்ட்ஸ் ஷோவை ஒருத்தர் பண்ணினால் ஆடியன்ஸ் ரசிப்பாங்களான்னு தயக்கம் இருந்துச்சு. அதுனாலதான், நாங்க சேர்ந்து பண்ணினோம்’’ என்கிறார் பிரவீன்.

‘`ஹிப்ஹாப் ஆதி வீடியோவுக்கு வந்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டேன்.

``ஷோவை முழுசா பார்க்காமல், யாரோ கட் பண்ணிப் போட்ட க்ளிப்பை மட்டும் பார்த்திட்டுப் பேசுறது எந்தவிதத்தில் சரின்னு தெரியலை. ஒரு காமெடி ஷோவில் பேசிய விஷயத்தைத் தனி மனிதத் தாக்குதல்னு நினைக்கிறதும் தவறான விஷயம். ஆதிக்கும் எனக்கும் பர்சனலா பழக்கமும் கிடையாது. அவர் பாடல்கள் என்னோட ஃபேவரைட் லிஸ்ட்டிலும் இருக்கு. `கோமாளி’ படத்தோட ’பைசா நோட்டு’ பாட்டுக்கு நான் கவர் வெர்ஷன் பண்ணியிருக்கேன். இந்த வீடியோ வந்ததுக்கு அப்பறம் ஆதி போட்ட அந்த ட்வீட் எனக்குத்தான்னு நான் எடுக்க மாட்டேன். ஏன்னா, அதுல யாரையும் மென்ஷன் பண்ணலை. அவர் யாரை மனசில் வெச்சுக்கிட்டு இந்த ட்வீட்டைப் போட்டார்னு அவர்கிட்டதான் கேட்கணும்.’’ சீரியஸான இடத்தை மாற்ற பிரவீன் தொடர்ந்தார்.

‘`முன்னாடிவிட இப்போ தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடிக்கு ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கு. ஆனால், சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாதிரி சிட்டில மட்டும் இப்போ பண்ணிட்டு இருக்கிறதை, அடுத்தடுத்த லெவல்ல இருக்கிற ஊர்களுக்கும் கொண்டுபோகணும். அதுக்கு நம்ம மொழியிலேயே பண்ணுறது ரொம்ப முக்கியம்’’ என்றார்.

``தமிழ் சினிமா நடிகர்களை வைத்து காமெடி பண்ணும்போது அதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?’’ என மனோஜிடம் கேட்டேன்.

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”

``ரசிகர்கள் அவங்க ஹீரோவோட எமோஷனலா கனெக்ட் ஆகிடுறாங்க. அதனால அவங்க குறைகள் எதுவுமே அவங்களுக்குத் தெரியுறது இல்லை. அதை யாராவது சொல்லிட்டா, அதை ஏத்துக்க முடியாமல் கோபப்படுறாங்க. ஒரு ரசிகரா பார்க்காமல், ஒரு ஆடியன்ஸா பார்த்தால், இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப ஈசியா கையாளலாம்’’ என்ற மனோஜைத் தொடர்ந்த மெர்வின், ‘`ரசிகர்களுக்கு அவங்க ஹீரோக்களைப் பற்றிப் பேசும்போது கோபம் வரத்தான் செய்யும். ஆனால், அதை வெளிக்காட்டுற விதம்தான் இங்க தப்பா இருக்கு’’ என்றவரைத் தொடர்ந்த ஜெகன், ‘`நானும் மெர்வினும் சேர்ந்து `ஒரு டைம் பார்க்கலாம்’னு ஒரு ஷோ பண்ணினோம். இசையமைப்பாளர் டி.இமான் சார் சென்னையிலிருந்து இந்த ஷோவுக்காகக் கோயம்புத்தூர் வந்தார். அந்த ஷோவில், `இமான் இசையில் பாடல்கள் எப்படி எழுதப்படுது’ன்னு ஒரு கன்ட்டென்ட் இருந்துச்சு. அதை அவர் முன்னாடியே பண்ணும்போது, ரொம்பவே என்ஜாய் பண்ணிப் பார்த்தார். பெரும்பாலும், பல செலிபிரிட்டிகள் இப்படித்தான் இருக்காங்க. அவங்க பார்த்துட்டு, சிரிச்சிட்டு, கடந்து போயிடுவாங்க. ஆனால், அதை ரசிகர்கள்தான் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிறாங்க’’ என்றார்.

‘`ஜெகன் ஏன் இவ்வளவு சீரியஸா பேசுறார்னா, சமீபத்தில் வாங்குன அடி அப்படி’’ என மனோஜ் சொன்னதும் எழுந்த வெடிச் சிரிப்பு அடங்க வெகுநேரம் பிடித்தது.