Published:Updated:

யானைக்கால் பேன்ட், தோசைக்கல் கூலிங்கிளாஸ், பரட்டை vs சப்பாணி! - ஒரு 80'S கிட்டின் ரணகள வாக்குமூலம்!

#80's
#80's

செல்போன், சமூக வலைதளங்கள் இல்லாத காலம். லவ் லெட்டர்தான் காதலைச் சொல்லும் வழி. டவுன் பஸ் டிக்கெட் பின்னால தந்தி அனுப்புறமாதிரி மூணு வார்த்தைல லவ் லெட்டர் கொடுப்பாங்க.

இன்றைக்கு உலகமே உள்ளங்கையில். ஆனால், 1980-90 இணையம் இல்லாத காலம். செல்போன் இல்லாத சொர்க்க நாள்கள். எண்பதுகளின் இளைஞர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? அறுபது வயதைத் தாண்டிய அந்தக் கால இளைஞர் ஒருவர் அந்த பண்டைய(?)கால அனுபவம் பற்றி பேசினார். கேட்கும்போதே, ஏகாந்தமாக இருந்தது. நீங்களும் கொசுவத்திச் சுருளை ஏற்றிவைத்து ஒரு நடை போய்வாருங்கள்.

``இன்னிக்கு மாதிரி உலகம் இத்தனை வேகமா இல்லை. இன்னிக்கு மாதிரி பொம்பளைப் பிள்ளைங்ககிட்ட சுதந்தரமா பேச முடியாது. காதலிகிட்ட பேசவே கால் நூற்றாண்டு காத்திருக்கணும். இன்னிக்கு வாட்ஸ் அப்லயே எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறாங்க. ஆனா அன்னிக்கு கடுதாசி மட்டும்தான் ஒரே தொடர்பு.

இளையராஜா
இளையராஜா

மனசுக்குப் பிடிச்ச பொண்ணை பின்தொடர்ந்து, அதுக்காக பல மாசம் காத்திருந்து காதலிப்பாங்க. காதல் தோல்வியால்தாடி வளர்த்து நரைச்சு `பூந்தோட்டக் காவல்காரன்' ஆனவங்க அதிகம். ஆனா, இன்னிக்கு அப்படி சம்பவம் நடக்கிறதில்லை. அது நல்ல விஷயம்தான். ஆனா, அன்னிக்கு இருந்த பொறுமை இன்னிக்கு இல்ல. கம்யூனிகேஷன் இல்லாத காலம் காதல் வளர்ந்தது. கண்ணால பேசிக்குவோம். வேற வழி! நேர்ல எல்லாம் பேசுறதை யாராவது பாத்தா பஞ்சாயத்து ஆயிடும்ல!

செல்போன், சமூக வலைதளங்கள் இல்லாத காலம். லவ் லெட்டர் தான் காதலைச் சொல்லும் வழி. டவுன் பஸ் டிக்கெட் பின்னால தந்தி அனுப்புறமாதிரி மூணு வார்த்தைல லவ் லெட்டர் கொடுப்பாங்க. `ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு..', அன்னக்கிளி உன்னைத் தேடுதே..' போன்ற பாடல்கள்தான் இணையை கவரும் வழி. `அடடா மா மரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே' மாதிரியான இளையராஜா பாடல்கள்தான் காதலை ஊட்டி வளர்க்கிற பெரியம்மா!

இளையராஜா
இளையராஜா

ரெட்டை ஜடை... பாவாடை, தாவணி காலங்கள்னு அது ஒரு அழகிய பாரதிராஜா படக்காலம். பெண்கள் மாதிரியே பசங்களுக்கு பிடிச்ச விஷயம் சைக்கிள். ஹெர்குலிஸ் சைக்கிள் வெச்சிருந்தா சாதாரண பசங்க. ஹம்பர் சைக்கிள் வெச்சிருந்தா பணக்கார பசங்க. அப்ப எங்க ஸ்டைலே செமயா இருக்கும்.

பெல்ஸ் பேன்ட் காலம். அதை யானைக்கால் பேன்ட்னு சொல்லுவாங்க. சட்டையில பெரிய காலர். அதுவும் நல்லா கும்கி யானையோட காது மாதிரியே இருக்கும். ஹை ஹீல்ஸ் செருப்பு, தோசைக்கல் மாதிரி பெரிய கண்ணாடி, பாக்கெட்ல சீப்புனு செம ஸ்டைலா இருப்போம். கர்ச்சீப்ல பவுடர் கொட்டி வெச்சிருப்போம். பொண்ணுகளை பார்க்கும்போது, கை கர்ச்சீப்பை எடுத்து மினி மேக்கப் போட்டுக்குவோம். மூஞ்சி நல்லா கழுவி வச்ச பித்தளை ப்ளேட்டு மாதிரி பளீர்னு இருக்கும்.

பெல்ஸ் பேன்ட்
பெல்ஸ் பேன்ட்
கண்ணாடி
கண்ணாடி

சைக்கிளுக்குப் பிறகு, புல்லட் வந்துச்சு. பட்ட்..பட்ட்..பட்ட்..என பெட்டி வெச்ச புல்லட்டில் போவது தனி கெத்து. 80 களில் இளைஞர்களின் கனவு பைக், ராஜ்தூத், ஜாவா-யெஸ்டி. கொஞ்சம் டீசன்ட்டான வாகனமாக இருந்தது லேம்பீஸ், சேத்தக் ஸ்கூட்டர்.

புல்லட்
புல்லட்
ஸ்கூட்டர்
ஸ்கூட்டர்

இன்னிக்கு ஹெல்மெட் இல்லாமப் போனாக்கூட போலீஸ் பிடிக்கிறதில்லை. ஆனா, அப்ப சைக்கிள்ல ஹெட்லைட் இல்லாமப் போனாலே போலீஸ் பிடிப்பாங்க.

சைக்கிள் பின்னால் டயர் பக்கத்துல டைனமோ இருக்கும். டைனமோ போட்டுட்டு ஓட்டுனா மிதிக்க கஷ்டமா இருக்கும். அதுனால, அதை எடுத்துட்டு ஓட்டுவாங்க. போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல போனதும் அதை போடுவாங்க. அப்ப அவசரத்துல பக்கத்துல இருக்க பூட்டை அமுக்கிடுவாங்க. அதுனால ஃபோக்ஸ் உடைஞ்சு பல்லு போனவங்க பலபேர்...
சைக்கிள்
சைக்கிள்

இப்ப இருக்கும் இளைஞர்கள் சாலையில் நடந்துபோகும்போது பெளலிங் போடுவது போலவே நடப்பதுபோல, அந்தக் கால இளைஞர்கள், கமல் போல தொங்கு மீசை வைத்துக்கொண்டு, சாணம் போட்ட பிறகு, மாடு கொடுக்கும் ரியாக்‌ஷன்போல உதட்டை சுழித்துக்கொண்டு போவார்கள். ஏன்னா சினிமா மட்டும்தான் அப்போ பிரதானமான பொழுதுபோக்கு.

பரட்டை...சப்பாணி சண்டை தெரியுமா?

கமல், ரஜினி
கமல், ரஜினி
கமல்
கமல்
ரஜினி
ரஜினி

1980 முதல் 1990 வரை தமிழக இளைஞர்கள் இரு அணியாகத்தான் பிரிஞ்சு இருந்தாங்க. பரட்டை அணி என்ற ரஜினி ரசிகர்கள், சப்பாணி என்ற கமல் ரசிகர்கள். இதில் ரஜினி ரசிகர்கள் கிராம்பு மணக்குற காரசார பிரியாணிமாதிரி. கமல் ரசிகர்கள் நெய் மணக்குற நைஸ் தோசை மாதிரி. கமல் ரசிகர்கள் கமல் மாதிரியே மாறிடுவாங்க. அயர்ன் செய்த பேன்ட், பாக்கெட்டில் சீப்பு, பவுடர் போட்ட கர்ச்சீப் இதுதான் கமல் ரசிகர்களின் அடையாளம்.

ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் கரடு முரடா தெரிவாங்க. ஆனாலும் ரொம்ப இரக்க குணமுள்ளவங்க. எம்பராய்ட் பூப்போட்ட சட்டை போடுவாங்க. ரஜினி படம் ஓடுற தியேட்டரே கலர்ஃபுல்லா இருக்கும்.

ரஜினியை பரட்டைனு கமல் ரசிகர்கள் சொல்றதும், கமலை சப்பாணினு ரஜினி ரசிகர்கள் சொல்றதும், அதுக்கான சண்டையும் தான் அப்போதைய ஹைலைட்.

ரஜினி கமல்
ரஜினி கமல்

'எங்கேயும் எப்போதும்... சங்கீதம்...சந்தோஷம்' நினைத்தாலே இனிக்கும் படத்தின் இந்தப் பாடலுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் ஆடுன டான்ஸ், அந்தக்கால ஆளுங்களால இன்றைக்கும் மறக்க முடியாது. ரஜினி, கமல் இரண்டு ரசிகர்களுக்கும் தனித்தனி சலூன் கடைகள் இருக்கும். டைலர்கள் தனியாக இருப்பார்கள். ம்ஹூம்... அது ஒரு அழகிய நிலாக்காலம். நாங்க எல்லாம் ஜாலியா உலாப் போவோம்.

அடுத்த கட்டுரைக்கு