Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு

`பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21-ம் தேதி வெளியானது.

ஐடியா அய்யனாரு!

`பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21-ம் தேதி வெளியானது.

Published:Updated:
ஐடியா அய்யனாரு
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, இறைச்சி வெட்டப் பயன்படுத்தும் மரத்தின்மீது விஜய் கால் வைத்திருப்பதாகவும், அது இறைச்சி வியாபாரிகளை இழிவுப்படுத்துவதாகவும் கூறி, சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல், `பிகில்’ போஸ்டரில் வேறு என்னென்ன தவறுகள் இருக்கின்றன, எதற்காகவெல்லாம் போராடலாம் என ஐடியா தருகிறான் இந்த அய்யனாரு...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • l போஸ்டரைப் பார்த்தாலே கருவாடு வாசம் மூக்கைத் துளைக்கிறது. ‘வாள மீனுக்கும் வஞ்சிர மீனுக்கும்...’ பாடலில் வரும் அத்தனை வகையான மீன்களையும் கருவாடாக்கித் தொங்கவிட்டிருக்கிறார்கள். எனவே, இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கியதுபோல், இறைச்சிப் பக்கமே மூக்கை வைத்துப் படுக்காத வீகன்களும் போராட்டத்தில் இறங்கலாம். ‘இந்த போஸ்டர், கருவாடு உண்ணத் தூண்டுகிறது. மீன் செத்தால்கூட கருவாடு, நாம் செத்தால் வெறும் ஓடு. இந்த ஓட்டுக்குள் ஆமைபோல் பல ஆண்டுகள் வாழவேண்டுமெனில், அசைவத்தைக் கைவிடுங்கள் அன்பர்களே’ என வீகன்களும் கிளம்பலாம்.

  • l வயதான விஜய் தன் நெற்றியில் இட்டிருக்கும் சந்தனத்தைவிட குங்குமம் கொஞ்சம் நீளமாக இருக்கிறது. ஆக, ‘குங்குமத்தைவிட சந்தனம் எந்தவிதத்தில் குறைந்துபோனது? `திருப்பாச்சி’ படத்தில்கூட `நீ எந்த ஊரு... நான் எந்த ஊரு...’ பாடலில் விபூதியைத்தான் கைநிறைய அள்ளிப் பூசுவார். போனால் போகட்டும் என `சிவகாசி’யில் கொஞ்சம் குங்குமம் பூசிக்கொண்டுத் திரிந்தார். `சந்தனத்தின் மகிமை தெரியுமா விஜய்க்கு?’ என, சந்தன வியாபாரிகள் போராட்டம் பண்ணலாம்.

  • l இளைஞர் விஜய், தன் கையில் கால்பந்து ஒன்று வைத்திருக்கிறார். பயப்படாதீர்கள், கையில் எதற்கு கால்பந்தை வைத்திருக்கிறார் எனக் கேட்கப்போவதில்லை. அதில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் லோகோவை வைத்துவேண்டுமானால் பிரச்னை செய்யலாம். சென்னையின் எஃப்.சி கால்பந்து அணி சென்னையில் இருக்கும்போது, அந்நியர்களின் மான்செஸ்டர் எதற்கு என, கிளப் கொடியோடு சென்னையில் எஃப்.சி ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கலாம். தமிழகத்தின் மான்செஸ்டரான கோவையும் இதில் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தால், போஸ்டரைத் தூக்கிடலாம்.

  • l விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையையெல்லாம் ஏற்கெனவே எடுத்துப் போட்டு `ஹி இஸ் நாட் ஜஸ்ட் விஜய்... ஹி இஸ் ஜோசப் விஜய்ங்கிறேன் நான்’ என ஆவேசமாக அலறிக்கொண்டிருந்தார் ஹெச்.ராஜா. படக்குழுவால் அஃபிஷியலாக அறிவிக்கப்படாத பி.ஆர்.ஓ-வைப்போல் `மெர்சல்’ படத்தை மாங்கு மாங்கென மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருந்தவர், இப்போது அமைதியாய் இருப்பது `பிகில்’ படக்குழுவினருக்கே நிறைய ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. வயதான விஜய் கட்டியிருப்பது காவி வேட்டி என்பதை, இன்னும் பளிச்சென படக்குழு காட்டியிருக்கலாம். ப்ச்ச்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism