Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

தொட்டுத் தொடரும் கழகப் பாரம்பர்யத்தைக் கட்டிக் காப்பாற்றி யிருக்கிறது தி.மு.க!

ஐடியா அய்யனாரு!

தொட்டுத் தொடரும் கழகப் பாரம்பர்யத்தைக் கட்டிக் காப்பாற்றி யிருக்கிறது தி.மு.க!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்கள் ஆதரவோடு தி.மு.க இளைஞரணிச் செயலாளர் ஆகியிருக்கிறார், உதயநிதி. அதற்குப் பாராட்டுகள் குவிந்தாலும் ‘மனசாட்சியே’ இல்லாமல், விமர்சனங்களும் குவிகின்றன. உதயநிதியை சப்போர்ட் செய்ய சில ஐடியாக்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ‘ஸ்டாலின் போன்ற நீண்ட அரசியல் வாழ்க்கை இல்லை’ என குற்றம்சாட்டுகிறார்கள். சினிமாவின் வழியே அரசியல் பேசியவர் உதயநிதி. அவரின் முதல் படமே ‘ஆதவன்’. அதன்பின் மனிதம் போற்றும் ‘மனிதன்’, தி.மு.க பலத்தைக் காட்டும் ‘இப்படை வெல்லும்’, சுயமரியாதை பேசும் ‘நிமிர்’ என தன் படங்களின் வழி அரசியல் பேசியதால், அவருக்கும் பெரிய எஸ்.டி.டி இருக்கிறது என சமாளிக்கலாம்.

* ‘தாத்தா ஆன பிறகும் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் ஸ்டாலின்’ என குற்றம் சுமத்துபவர்கள் உண்டு. அந்த அவப்பெயரை நீக்கவே இளைஞராக இருக்கும்போதே உதயநிதி, இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ‘இதைவிட பெரிய தகுதி என்ன இருக்கிறது...’ என சொல்லிவிடலாம்.

* அ.தி.மு.க-வில் ரவீந்திரநாத், காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் என ஒவ்வொரு கட்சியிலும் அடுத்த தலைமுறை வாரிசுகள் களம் கண்டுவிட்டார்கள். அவர்களைச் சமாளிக்க அவர்களைப் போன்ற வாரிசால் மட்டுமே முடியும். எனவே, ‘தி.மு.க-வின் பிரம்மாஸ்திரம் உதயநிதி அண்ணா’ என சொல்லி பஞ்சாயத்தை முடித்துவிடலாம்.

* உதயநிதி, அருள்நிதி என அண்ணன் - தம்பி இருவரும் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வந்தார்கள். ஓர் உறையில் ஒரு கத்தியைத்தான் தமிழ் சினிமா தாங்கும் என்பதால், சீனியரான உதயநிதி தன் தம்பிக்காக தியாக உணர்வோடு அங்கிருந்து விலகி அரசியல் பக்கம் வந்துவிட்டார் எனக் கிளப்பிவிடலாம்.

* அரசியலில் தளபதி - சினிமாவில் இளைய தளபதி என்றுதான் இருபதாண்டுகால தமிழகம் இருந்தது. இப்போது இளைய தளபதி, தளபதியாக ப்ரொமோட் ஆகிவிட்டதால், காலியான இளைய தளபதி (ஸ்ட்ரிக்ட்லி நோ சின்னத் தளபதி, புரட்சித் தளபதி) இடத்துக்கு எங்கள் அண்ணன் உதயநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எனச் சொல்லிவிட்டால் சினிமா பக்கமும் ஆதரவை வாங்கிவிடலாம்.